மேலும் அறிய

அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?

பழனி அருகே அமைந்துள்ள மண்திட்டு மலைவாழ் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் பலவும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு இன்று பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து வந்தாலும், இன்று பல கிராமங்களில் அடிப்படை வசதிகளே இல்லாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க கிராமமாக கருதப்படுவது மண்திட்டு கிராமம்.

மலைவாழ் கிராமம்:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு அருகே இந்த மலைவாழ் கிராமம் அமைந்துள்ளது. அமராவதி அணை அருகே அமைந்துள்ள இ்ந்த கிராமத்தினர் வாழ்க்கை எந்தவொரு வளர்ச்சியும் இல்லாத நிலையில் உள்ளது. இந்த கிராமத்தில் வெறும் 30 குடும்பங்கள் வசித்து வருகிறது. 

மிக மிக குறைவான எண்ணிக்கையில் வசித்து வரும் இந்த மக்கள் குறைவான அளவிலே வசித்து வருகின்றனர். இவர்கள் மலையின் அடிவாரத்தில் வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு நடுவில் வசித்து வருகின்றனர். 

அடிப்படை வசதி இல்லாத சூழல்:

இந்த கிராமத்தில் உள்ள 20 குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. இதர குடும்பங்களுக்கு இன்னும் வீடுகள் கட்டித்தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் இன்னும் தார்ப்பாயில் அமைக்கப்பட்ட கூடாரங்களையே தங்களது வீடுகளாக கட்டமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள்  காட்டுப் பகுதியில் வசித்து வரும் சூழலில், இவர்களுக்கு போதுமான வசதிகளை செய்து தருவதிலும் அரசுக்கு சிரமம் உருவாகியுள்ளது. 

இன்னும் வராத மகளிர் உரிமைத்தொகை:

இங்கு குழந்தைகளுடன் இந்த மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் வசித்து வருகின்றனர். வெயில், மழை காலங்களில் இந்த மக்கள் இதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலும், அரசு வீடுகள் கட்டிகொடுத்த பகுதியில் வசிக்கும் பலருக்கும் தற்போது வரை மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 1000 கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏதுவாக அரசு அருகிலே பள்ளிகள் கட்டித்தந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் சிலர் சிரமங்களுக்கு மத்தியிலும் கல்லூரி சென்று படித்து வருகின்றனர். இந்த சூழலில், அரசின் மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கும் கிடைத்தால் மிகவும் பயன் அளிக்கும் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அடிப்படை வசதி இல்லாமலே வசித்து வரும் இந்த மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் சுற்றியுள்ள தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்று அதன்மூலம் கிடைக்கும் வருவாய் மூலமாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

தவெக ஆட்சியில் கிடைக்குமா?

இந்த சூழலில், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பலன்கள் இந்த ஆட்சியிலாவது தங்களை வந்து சேராதா? என்று ஏக்கத்துடன் உள்ளனர். மேலும், அந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் மகளிர் உரிமைத் தொகை. மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமைத்தொகையாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழங்குவதே இந்த திட்டம் ஆகும். இந்த திட்டம் மூலமாக தமிழ்நாட்டில் 1.30 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Embed widget