Volkswagen Taigun: ஃபோக்ஸ்வேகன் டைகனின் இரண்டு வேரியண்ட்களின் விலை அறிவிப்பு - மற்ற விவரங்கள் உள்ளே..!
Volkswagen Taigun: ஃபோக்ஸ்வேகன் டைகனின் GT Line மற்றும் GT Plus sport, ஆகிய இரண்டு வேரியண்ட்களின் விலையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Volkswagen Taigun: ஃபோக்ஸ்வேகன் டைகனின் GT Line மற்றும் GT Plus sport, ஆகிய இரண்டு வேரியண்ட்களின் தொடக்க விலை ரூ.14.08 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் டைகன்:
ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் மற்றும் ஜிடி லைன் வேரியண்ட்கள் ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவற்றின் விலைகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மேனுவல் மற்றும் ஆட்டோ அம்சங்களில் 1.0 லிட்டர் இன்ஜினுடன் கிடைக்கும் டைகன் ஜிடி லைன் தொடக்க விலை ரூ. 14.08 லட்சமாகவும், அதிகபட்ச விலை ரூ.15.63 லட்சமாகவும் உள்ளது. அதே சமயம் டைகன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோலில் மேனுவல் மற்றும் டூயல்-பெட்ரோலில் ஆடோ கிளட்ச் ஆப்ஷனில் இயக்கப்படுகிறது. இதன் தொடக்க விலை ரூ.18.54 லட்சமாகவும், அதிகபட்ச விலை ரூ.19.74 லட்சமாகவும் உள்ளது. டாப்-ஸ்பெக் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் டிரிம்களில் 4-ஆண்டிற்கான சர்வீஸ் வேல்யூ பேக்கேஜ் (SVP) வழங்கப்படுகிறது, மேலும் இந்த மாதமே டெலிவரிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி லைன்: என்ன வித்தியாசம்?
டைகன் ஜிடி லைன் 115 ஹெச்பி, 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் விருப்பங்களை கொண்டுள்ளது. டாப்-ஸ்பெக் டைகன் குரோம் டாப்லைன் மாறுபாட்டுடன் ஒப்பிடும் போது, ஜிடி லைன் அதே அம்சங்களின் பட்டியலைக் கொண்டுள்ளது. அதேநேரம் சில ஒப்பனை மாறுபாடுகளையும் கொண்டுள்ளது. கருப்பு நிற 17-இன்ச் 'காசினோ' அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் உள்ள ஒவ்வொரு குரோம் பகுதியும் கருப்பு நிறத்துடன் மாற்றப்பட்டுள்ளது. முன் கிரில், ஹெட்லைட்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்பாய்லர் மற்றும் பேட்ஜ்கள். டைகன் ஜிடி லைனின் உட்புறம், கதவுகள், இருக்கை கவர்கள், முன் மைய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றில் கான்ட்ராஸ்ட் க்ரே தையல்களுடன் பிளாக்-அவுட் தீம் தொடர்கிறது.
Volkswagen Taigun GT Plus Sport: என்ன வித்தியாசம்?
Taigun GT Plus Sport ஆனது 150hp, 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் விருப்பங்கள் உள்ளன. இது டாப்-ஸ்பெக் டைகன் ஜிடி பிளஸ் குரோம் போன்ற அம்சங்களைப் பெறுகிறது. டைகன் ஜிடி லைனுடன் ஒப்பிடும்போது கூட, ஜிடி பிளஸ் ஸ்போர்ட், கிரில், முன் ஃபெண்டர், பூட்லிட் மற்றும் பிரேக் காலிஃபர்களில் உள்ள ஜிடி பேட்ஜ்கள் போன்ற பல மாறுபட்ட சிவப்பு பிட்களை கூடுதலாக பெற்றுள்ளது. கேபின் மட்டுமின்றி இருக்கைகள், ஸ்டீயரிங் வீல், ஆர்ம்ரெஸ்ட்கள் மற்றும் கதவுகள் ஆகியவற்றிலும் மாறுபட்ட சிவப்பு நிறத்தை காணலாம். கூடுதலாக, ஜிடி பிளஸ் ஸ்போர்ட் அலுமினிய பெடல்களையும் பெறுகிறது.
வோக்ஸ்வாகன் டைகன் ஸ்போர்ட்: போட்டியாளர்கள்:
டைகனின் புதிய பிளாக்-அவுட் எடிஷன்கள் ஸ்கோடா குஷாக் மான்டே கார்லோ (ரூ. 17.29 லட்சம்-20.49 லட்சம்), கியா செல்டோஸ் எக்ஸ்-லைன் (ரூ. 19.65 லட்சம்-20.35 லட்சம்) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் (ரூ. 16.82 லட்சம்-20.45 லட்சம்) ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமையும்.