Volkswagen: ரூ.3.27 லட்சம் வரை விலை குறைப்பு.. Volkswagen காரின் விலை இனிமே இதுதான்!
ஜிஎஸ்டி வரி குறைப்பால் வோல்க்ஸ்வோகன் காரின் விலை ரூபாய் 3.27 லட்சம் வரை அதிரடியாக குறைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களான டாடா, ஹுண்டாய், மஹிந்திராவிற்கு சவால் விடும் வகையில் புகழ்பெற்ற கார் நிறுவனமாக வோல்க்ஸ்வோகன் உள்ளது. ஜிஎஸ்டி வரி மாற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து கார்களின் விலையும் தாறுமாறாக குறைந்துள்ள நிலையில், வோல்க்ஸ்வோகன் நிறுவனமும் தனது கார்களின் விலையை குறைக்க உள்ளது.
Volkswagen நிறுவனத்தின் எந்த காரின் விலை எந்தளவு குறைந்துள்ளது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. Virtus - 66 ஆயிரத்து 900
2. Taigun - 68 ஆயிரத்து 400
3. Tiguan R-Line - ரூ.3.27 லட்சம்
இந்த மாடல்களுக்கும் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு மட்டுமே இந்த விலை குறைப்பு பொருந்தும்.
1. Virtus:
இந்த கார் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கொண்டது ஆகும். இது 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் மற்றும் 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது ஆகும். 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜினும் உள்ளது. 7 கியர்கள் வரை கொண்டது இந்த கார்.

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 12.89 லட்சம் ஆகும். இந்த கார் ஜிஎஸ்டி வரி குறைப்பால் 66 ஆயிரத்து 900 வரை குறைய உள்ளது. மேலும், மாதந்தோறும் கிடைக்கும் தள்ளுபடியால் ரூபாய் 70 ஆயிரத்திற்கும் மேல் விலை குறையும் என்று கருதப்படுகிறது.
2. Taigun:
வோல்க்ஸ்வோகன் நிறுவனத்தின் Taigun காரின் தொடக்க விலை ரூபாய் 11.61 லட்சம் ஆகும். 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் மற்றும் 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் உள்ள வேரியண்ட்கள் இந்த காரில் உள்ளது. 6 கியர் மற்றும் 7 கியரில் இந்த கார் உள்ளது. ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவலில் இந்த கார் உள்ளது.

இந்த கார் 68 ஆயிரத்து 400 ரூபாய் வரை ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் குறைய உள்ளது. 360 டிகிரி கேமரா, ஒயர்லஸ் சார்ஜர், பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல், ரேர் வியூ கேமரா வசதி இதில் உள்ளது.
3. Tiguan R-Line:
இந்த Tiguan R-Line காரின் தொடக்க விலை ரூபாய் 48.99 லட்சம் ஆகும். எஸ்யூவி ரக காரான இந்த காருக்கு ஜிஎஸ்டி வரி மாற்றத்தில் ரூபாய் 3 லட்சத்து 26 ஆயிரத்து 900 வரை குறைய உள்ளது. 2 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் பொருத்தப்பட்டது. 204 பிஎஸ் ஆற்றல் மற்றும் 320 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

1984 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இதில் உள்ளது. 7 கியர் இதில் உள்ளது. 5 பேர் அமரும் வசதி கொண்டது. அதிநவீன வசதி கொண்ட இந்த கார் 100 கி.மீட்டர் வேகத்தை 7.1 நொடிகளில் எட்டும் திறன் கொண்டது.
தற்போது வரை இந்த 3 கார்களுக்கான விலை இந்தளவு குறையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. வோல்க்ஸ்வோகன் நிறுவனத்தின் கார்களின் விலைகள் விரைவில் குறைக்கப்படுவதற்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















