Volkswagen Discount: 3 லட்சம் தள்ளுபடி.. தீபாவளிக்கு ஆஃபரை அள்ளித் தெளித்த வோல்க்ஸ்வேகன்!
Volkswagen Discount: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தனது கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Volkswagen Discount: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு விழாக்கால சலுகைகளை பல துறையினரும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னணி கார் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தள்ளுபடியை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், வோல்க்ஸ்வோகன் நிறுவனம் தனது கார்களுக்கு விலையை தள்ளுபடி செய்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி செய்துள்ளது என்பதை கீழே காணலாம்.
1. Volkswagen Tiguan R-Line:
வோக்ஸ்வோகனின் பிரபலமான மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட கார் இந்த Volkswagen Tiguan R-Line கார். 2025 மாடலான இந்த காருக்கு ரூபாய் 3 லட்சம் தள்ளுபடி அறிவித்துள்ளனர். இதன் விலை ரூபாய் 49 லட்சம் ஆகும்.
2. Volkswagen Taigun 1.0 TSI Comfortline MT:
வோல்க்ஸ்வோகன் காரின் இந்த Volkswagen Taigun 1.0 TSI Comfortline MT மாடலுக்கு சிறப்பு விலையாக ரூபாய் 10 லட்சத்து 58 ஆயிரம் தீபாவளி பண்டிகைக்காக நிர்ணயித்துள்ளனர். இது 2024 மாடல் ஆகும்.
3. Volkswagen Taigun 1.0 TSI Highline MT:
வோல்க்ஸ்வேகன் காரின் இந்த Volkswagen Taigun 1.0 TSI Highline MT வேரியண்ட்டிற்கு தீபாவளி விலையாக ரூபாய் 11.93 லட்சமும், ரூபாய் 12.95 லட்சமும் நிர்ணயித்துள்ளனர்.
4. Volkswagen Taigun 1.0 TSI :
2024ம் ஆண்டில் எஞ்ஜிய Volkswagen Taigun 1.0 TSI வேரியண்டிற்கு ரூபாய் 2 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
5. Volkswagen Taigun:
டைகுன் மாடலின் Volkswagen Taigun 1.0 TSI Highline Plus / Topline வேரியண்டிற்கு ரூபாய் 1 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது நடப்பாண்டு மாடல் ஆகும்.
6. Volkswagen Taigun 1.5 TSI:
வோல்க்ஸ்வேன் டைகுன் காரின் Volkswagen Taigun 1.5 TSI காரின் GT Plus Chrome வேரியண்டிற்கு ரூபாய் 1.95 லட்சம் வரை தள்ளுபடி செய்துள்ளனர். இது 2024ம் ஆண்டு மாடல் ஆகும்.
7. Volkswagen Taigun 1.5 TSI:
ஸ்போர்ட்ஸ் ரகமான இந்த Volkswagen Taigun 1.5 TSI GT Plus Sport காருக்கு ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி செய்துள்ளனர். இது கடந்தாண்டு மாடல் ஆகும். நடப்பாண்டில் வெளியான இதே காருக்கு ரூபாய் 1.56 லட்சம் தள்ளுபடி செய்துள்ளனர்.
8. Volkswagen Virtus:
வோல்க்ஸ்வேகனின் விர்டஸ் காரான Volkswagen Virtus 1.0 TSI Highline ரூபாய் 1.56 லட்சம் தள்ளுபடி செய்துள்ளனர். நடப்பாண்டு மாடலுக்கு இந்த சலுகை பொருந்தும்.
9. Volkswagen Virtus 1.0 TSI Topline:
விர்டஸ் காரிலே இந்த Volkswagen Virtus 1.0 TSI Topline காருக்கு ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த கார் நடப்பாண்டு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விர்டஸ் காரின் மற்ற வேரியண்ட்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
10. Volkswagen Virtus 1.5 TSI:
வோல்க்ஸ்வேகன் காரின் Volkswagen Virtus 1.5 TSI GT Plus Chrome / Sport DSG காரின் விலை ரூபாய் 90 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது நடப்பாண்டு மாடல் ஆகும்.
11. Volkswagen Virtus 1.5 TSI GT Plus MT:
இந்த Volkswagen Virtus 1.5 TSI GT Plus MT காருக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த காரும் நடப்பாண்டு மாடல் ஆகும்.






















