Viral Video: ட்ராக்டரை வித்தியாசமாக ஓட்டிய இளைஞர்... ஆனந்த் மஹிந்திர கொடுத்த ரியாக்ஷன்... நீங்களே பாருங்க!
ட்ராக்டரை வித்தியாசமாக ஓட்டிய இளைஞர் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.
எக்ஸ் வலைதளத்தில் ட்ராக்டரை வித்தியாசமாக இயக்கும் இளைஞரின் வீடியோவை பகிர்ந்து, ”சுவாரஸ்யமானது. ஆனால் எனக்கு ஒரே ஒரு கேள்வி உள்ளது: ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.
ஆனந்த் மஹிந்திரா:
இந்திய மோட்டார் வாகன உற்பத்தி உள்பட பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறது மஹிந்திரா நிறுவனம். இந்த நிறுவனத்தில் தலைவராக இருப்பவர் ஆனந்த் மஹிந்திரா. சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர்.
அதோடு அடிக்கடி பல்வேறு விதமான கருத்துக்களையும், இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் நடைபெறும் சுவாரஸ்யமான வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரது பதிவுகள் மற்றும் வீடியோக்கள் பெரும்பாலும் நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக கவரும்.
எனக்கு ஒரே ஒரு கேள்வி:
தனக்கு பிடித்தமான துணுக்குகள், தன்னம்பிக்கை ஊட்டும் வீடியோக்கள், எளிய பின்னணியில் இருந்து சாதிக்கும் நபர்கள், தான் கண்டு வியந்து பார்த்த இடங்கள் என பல விவகாரங்கள் குறித்து ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இவரை எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.
Interesting. But I have only one question: WHY? pic.twitter.com/Iee9NZC48E
— anand mahindra (@anandmahindra) November 17, 2023
இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா இன்று (நவம்பர் 17) சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு இளைஞர் ட்ராக்டர் ஓட்டுகிறார். ட்ராக்டர் ஓட்டுவதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அவர் ட்ராக்டரை எல்லோரையும்போல் ஒட்டாமல் அந்த இளைஞர் வித்தியாசமாக ஓட்டுகிறார்.
இந்த வீடியோவை பகிரிந்துள்ள ஆனந்த் மஹிந்திரா, “சுவாரஸ்யமானது. ஆனால் எனக்கு ஒரே ஒரு கேள்வி உள்ளது: ஏன்?” என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோவை பார்த்துவரும் நெட்டிசன்கள் எங்களுக்கும் அதே கேள்விதான் உள்ளது என்பது போன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: திருமணம் நடந்து 2 மணி நேரத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் திருமண ஆல்பம் டெலிவரி
மேலும் படிக்க: Whatsapp Update: போச்சா! வாட்ஸ் அப் இனி இலவசம் கிடையாது... ஆப்பு வைத்த மெட்டா நிறுவனம்!