Vinfast VF7: தூத்துக்குடி ராட்சசன்..! இல்லாத அம்சங்களே இல்லை, VF7 காரின் பேட்டரி, ரேஞ்ச், விலை - இது தெரியுமா?
Vinfast VF7: தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் VF7 கார் மாடலில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Vinfast VF7: தூத்துக்குடியில் அசெம்பிள் செய்யப்படும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் VF7 கார் மாடலில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
வின்ஃபாஸ்டின் VF7 கார் மாடல்:
வியட்நாமைச் சேர்ந்த மின்சார கார் உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட்டின் தொழிற்சாலை, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், முதற்கட்டமாக VF6 மற்றும் VF7 ஆகிய கார் மாடல்களை உள்ளூர் சந்தையில் அசெம்பிள் செய்து சந்தைப்படுத்த முடிவு செய்து முன்பதிவுகளும் ஏற்கனவே தொடங்கியுள்ளன. நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் VF7 காருக்கும் மேலேயும், கீழேயும் நிலைநிறுத்தப்பட்ட கார் மாடல்கள் பல உள்ளன. இருப்பினும் போட்டித்தன்மை மிக்க மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் VF7-ஐ தனது முதல் மாடலாக இந்தியாவில் அறிமுகப்படுத்த வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது.
வின்ஃபாஸ்ட் VF7 - வெளிப்புற வடிவமைப்பு:
அனைத்து வின்ஃபாஸ்ட் மாடல்களின் முன்புறமும் நிறுவனத்தின் சிக்னேட்சர் டிசைனாக ஒரே மாதிரியாக உள்ளன. அதவாது, VF7 முன்புறத்தில் மீசையை போன்ற V-ஃபேஸ் எல்இடி DRL பேண்டை கொண்டுள்ளது. அதன் மையத்தில் பிராண்டின் லோகோ இடம்பெற்றுள்ளது. VF6 மாடலும் இதேபோன்று காட்சியளித்தாலும், நெருங்கி பார்த்தால் கூர்மையான வித்தியாசங்களை கொண்டுள்ளன. VF7-னின் முன்புற ஏர் டேமில் இரண்டு மெடல் பிளேட்கள், கதவில் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. கிரவுண்ட் கிளியரன்ஸ் அளவு 190 மிமீ உயர்த்தப்பட்டு 2,840 மிமீ ஆக இருக்க, 19 இன்ச் வீல்கள் இணைக்கப்பட்டுள்ளன. வாகனத்தின் ஒட்டுமொத்த நீளம் 4.545 மீட்டர் நீளமாகும். பின்புறத்தில் செங்குத்தான எல்இடி டெயில் லேம்புகள் உள்ளன. இதன் நீண்ட மற்றும் குறைந்த-ஸ்லங் வடிவம், SUV-ஐ போன்ற சாலை இருப்பைக் கொண்டிருக்கவில்லை.
Drove the #Vinfast VF7 recently in Vietnam- it's a big 4.5m plus SUV with a swoopy, cab forward stance and quite a radical design which stands out. Cabin has minimal buttons, vegan leather and features like cooled seats being powered, HUD, panoramic glass roof and more. Space at… pic.twitter.com/y17KZ5BgRF
— Somnath Chatterjee (@SomChaterji) June 10, 2025
வின்ஃபாஸ்ட் VF7 - உட்புற வடிவமைப்பு:
வெளிப்புறத்தோற்றத்தில் இது பெரிதாக காட்சியளிக்காவிட்டாலும், உட்புறத்தில் இடவசதிக்கு எந்த குறையும் இல்லை. பவர்ட் டெயில் கேட்டிற்கு கீழே 537 லிட்டர் பூட் வசதியை கொண்டுள்ளது. பின்புற இருக்கை இடம் உரிமையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும், காரணம் கால் மற்றும் தலை பகுதிகளுக்கு விசாலமான இடவசதி உள்ளது. பின் இருக்கையை தாராளமாக சாய்த்துக் கொள்ளலாம். குஷனிங் கீழ் முதுகுக்கு மென்மையாகவும் வசதியாகவும் இருக்கிறது. ஜன்னல்கள் நீளமாக இருந்தாலும் மெலிதாகவும், மிகவும் உயரமாகவும் அமைக்கப்பட்டிருந்தாலும், எட்ஜ் டு எட்ஜ் நீண்டு செல்லும் பெரிய நிலையான கண்ணாடி கூரையால் இட உணர்வு பெரிதும் மேம்படுத்தப்படுகிறது.
முன்பக்கத்தில், VF7 பாரம்பரிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கு மாற்றாக ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது (டச்ஸ்கிரீனில் அத்தியாவசிய தகவல்கள் நிரந்தரமானதாக பொருத்தப்பட்டுள்ளது). 12.9-இன்ச் டச்ஸ்கிரீன் கவனத்தை ஈர்க்க, அதன் கீழே டிரைவ்-செலக்ட் டாகிள் சுவிட்சுகளின் தொகுப்புடன் டேஷ்போர்டை கொண்டுள்ளது.
வின்ஃபாஸ்ட் VF7 - தொழில்நுட்ப அம்சங்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் VF7 கார் மாடலை அனைத்து தொழில்நுட்ப அம்சங்களையும் உள்ளடக்கிய, ”பிளஸ்” என்ற ஒரே வேரியண்டில் மட்டுமே சந்தைப்படுத்த வின்ஃபாஸ்ட் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ரியர் சீட் ரிக்ளைன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வீகன் லெதர், வெண்டிலேடட் சீட்ஸ், ஒன் லிட்டர் பாட்டில் ஹோல்டர்ஸ் ஆகியவை ஸ்டேண்டர்டாக இடம்பெறுகின்றன. இது போக 7 ஏர் பேக்குகளும் கட்டாயமாக இணைக்கப்படுகின்றன. பாதுகாப்பை உறுதிப்படுத்த லெவல் 2 அட்டானமஸ் ட்ரைவிங் உடன் கூடிய ரேடார் அடிப்படையிலான ADAS வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பிற்கான பரிசோதனையில் 5 ஸ்டார்களை பெறவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. கூடுதலாக டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பெரிய கிளாஸ் கூரை, செண்ட்ரல் கன்சோல் மற்றும் ஸ்டியரிங் வீலில் மேனுவலாக கையாளக்கூடிய சில கண்ட்ரோல்கள் ஆகியவை உள்ளன.
வின்ஃபாஸ்ட் VF7 - பேட்டரி, ரேஞ்ச் விவரங்கள்:
ஒரே ஒரு வேரியண்டாக மட்டுமே அறிமுகமாக உள்ள VF7 ஒரே ஒரு பேட்டரி பேக் ஆப்ஷனை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், சிங்கிள் மோட்டார் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் மற்றும் டூயல் மோட்டார் ஆல் வீல் ட்ரைவ் என இரண்டு பவர் ட்ரெயின் ஆப்ஷன்களை பெறுகிறது. காரில் இடம்பெற உள்ள 70.8 KWh பேட்டரியை 7.2KW வரையிலான திறன் கொண்ட ஏசி சார்ஜரிலும், CCS2 டிசி சார்ஜரிலும் சார்ஜ் செய்ய முடியும். சார்ஜ் ஆவதற்கான நேரம் மற்றும் வேகம் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்திய சந்தைக்கான ரேஞ்ச் விவகரங்கள் வெளியாகாவிட்டாலும், சர்வதேச சந்தைகளில் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் யூனிட் 450 கிலோ மீட்டர் ரேஞ்சும், ஆல் வீல் ட்ரைவ் யூனிட் 431 கிலோ மீட்டர் ரேஞ்சும் வழங்குகிறது.
ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ட்ரிம்மின் எடை 2 ஆயிரத்து 90 கிலோவாகும், ஆல் வீல் ட்ரைவ் ட்ரிம்மின் எடை 2 ஆயிரத்து 2025 கிலோவாகவும் உள்ளது. இந்த ட்ரிம்கள் பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை முறையே, 9.5 மற்றும் 5.8 விநாடிகளில் எட்டுகிறது. ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் 204 குதிரைகளின் திறனையும், 310Nm இழுவை ஆற்றலையும் உற்பத்தி செய்கிறது. ஆல் வீல் ட்ரைவ் 350 குதிரைகளின் திறனையும், 500Nm இழுவை ஆற்றலையும் உற்பத்தி செய்கிறது.
வின்ஃபாஸ்ட் VF7 - விலை, போட்டியாளர்கள்
VF7 கார் மாடலின் வடிவமைப்பு அனைவருக்கும் பிடிக்காமல் போகலாம். அதேநேரம், ஸ்டைலை விட உள்ளடகத்தை விரும்புவர்கள் இந்த காரை விரும்பலாம். உள்ளூர் அசெம்பிளி காரணமாக FWD ட்ரிம்மின் விலை ரூ. 25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலும், டூயல் மோட்டார் AWD ட்ரிம்மின் விலை ரூ. 29 லட்சம் வரையும் நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படுவதால், இது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். 2025 ஆம் ஆண்டு பண்டிகைக் காலத்தில் VF7 (VF6 ஐத் தொடர்ந்து) இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டில் இந்த காரானது BYD சீலியன் 7, ஹுண்டாயின் ஐயோனிக் 5, கியாவின் EV6, மஹிந்திராவின் XEV 9e, டாடாவின் ஹாரியர் EV ஆகிய கார்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும்.





















