Vinfast VF3 EV: ஆரம்பமே அதிரடி..! நாட்டின் மலிவு விலை மின்சார எஸ்யுவி ஆக VF3-ஐ கொண்டு வரும் வின்ஃபாஸ்ட்
Vinfast VF3 EV: நாட்டின் மலிவு விலை மின்சார எஸ்யுவி ஆக வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் VF3 கார் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
Vinfast VF3 EV: நாட்டின் மலிவு விலை மின்சார எஸ்யுவி ஆக வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் VF3 காரின் விலை, இந்திய சந்தையில் 10 லட்ச ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்படலாம்.
Vinfast VF3 EV:
வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனக்கான இடத்தை பிடிக்க திட்டங்களை வகுத்து வருகிறது. உள்நாட்டு சந்தையில் தனக்கான ஒரு பெரிய பகுதியை கைப்பற்றும் அதன் நோக்கம் ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது பயணத்தை டாப்-டவுன் அணுகுமுறையுடன் தொடங்கலாம் மற்றும் முதலில் ஒரு பிரீமியம் எஸ்யூவியை அறிமுகப்படுத்தலாம். அதன்படி, வின்ஃபாஸ்ட் விஎஃப்3 கார் மாடலுடன், அந்த நிறுவனம் தனது இந்திய பயணத்தை தொடங்கலாம்.
Vinfast VF3 EV வடிவமைப்பு விவரங்கள்:
VF3 ஒரு சிறிய மின்சார SUV ஆகும். இது MG கோமெட்டை விட பெரியது. ஆனால் இது மிகச்சிறிய மின்சார SUV ஆகும். வடிவமைப்பின்படி, 3,114 மிமீ நீளம் மற்றும் 16 அங்குல சக்கரங்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் நல்ல அளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. ஸ்டைலிங் கச்சிதமானது மற்றும் மற்ற வின்ஃபாஸ்ட் மாடல்களைப் போலல்லாமல் கருப்பு நிற அமைப்பைக் கொண்ட புதிய கிரில்லைக் கொண்டுள்ளது. கீழே உள்ள 10-இன்ச் தொடுதிரை மற்றும் காலநிலை கட்டுப்பாடு பொத்தான்களுடன் உட்புறங்கள் எளிமையானவை. கச்சிதமான உடல் அளவு இருந்தபோதிலும், VF3 550 லிட்டர் பூட் திறன் கொண்டது. VF3க்கான அதிகாரப்பூர்வ வரம்பு 200 கிமீ ஆகும், அதே நேரத்தில் இந்தியா ஸ்பெக் VF3 என்ன விவரக்குறிப்புகளைக் கொண்டிருக்கும் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் தற்போது வரை இல்லை.
இதர அம்சங்கள்:
Vinfast அதன் தமிழ்நாடு ஆலையில் VF3 உற்பத்தி உள்ளிட்ட செலவுகளை குறைக்க, VF3 தீவிரமாக உள்ளூர்மயமாக்க வேண்டும். கணிசமான சந்தைப் பங்கை உருவாக்க, Vinfast VF3 10 லட்சத்திற்கும் குறைவான விலைக்குள் இருக்க வேண்டும். காரின் தோற்றம் கவனத்தை ஈர்க்கிறது. SUV விகிதாச்சாரங்கள் கார் வாங்குபவர்களை ஈர்க்கும் அதே வேளையில் போதுமான அளவு வரம்பானது, Tiago EV மற்றும் Comet EV போன்ற பிற மின்சார வாகனங்களுடன் போட்டியிட தூண்டுகிர்றது. VF3 அதன் பிரீமியம் EV வரம்பிற்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. VF3 உடன், கார் தயாரிப்பாளர் மற்ற EV களையும் அறிமுகப்படுத்தலாம், அதே நேரத்தில் வியட்நாமிய கார் தயாரிப்பாளருக்கான ஏற்றுமதி தளமாக இந்தியாவும் செயல்பட முடியும்.
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனம்:
தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காப்ட் பூங்காவில் ரூ.16,000 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்குகடந்த மாதம் தான் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு சுமார் 150,000 கார்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரும் பங்களிப்பதோடு, 3,000 முதல் 3,500 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கும் என கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன.