TVS Jupiter 110: அறிமுகமானது டிவிஎஸ் ஜூபிட்டர் 110 : சிறப்பம்சங்கள் என்னென்ன? விலை விவரம் இதோ!
TVS Jupiter 110: இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான டி.வி.எஸ். மோட்டர் புதிய ஸ்கூட்டி மாடலான டி.வி.எஸ். ஜூபிட்டர் 110 (TVS Jupiter 110) அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான டி.வி.எஸ். மோட்டர் புதிய ஸ்கூட்டி மாடலான டி.வி.எஸ். ஜூபிட்டர் 110 (TVS Jupiter 110) அறிமுகம் செய்துள்ளது.
டி.வி.எஸ். மோட்டர் நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல வசதிகளுடன் 110 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் திறன்வாய்ந்த புதிய இஞ்சின், ஜாவா பைக்கின் Zyada ஸ்டலில், அதிக மைலேஜ், பர்ஃபாமன்ஸ், பாதுகாப்பு, புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புகளுடன் சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதிலுள்ள அம்சங்கள் மற்றும் விலை எவ்வளவு உள்ளிட்ட தகவல்களை இங்கே காணலாம்.
அன்றாட பயன்பாடுகளுக்காக புதிய எஞ்சின், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜூபிட்டர் 110 உருவாகப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யம் நிகழ்ச்சியில் டி.வி.எஸ். மோட்டர் நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான கே. என். ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், “ புதிய ஜூபிட்டர் 110 மாடல் பயனாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் வடிவமைப்பு அதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் என அனைத்தும் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை.” என்று தெரிவித்தார்.
TVS Jupiter 110
டி.வி.எஸ். ஜூபிட்டர் பர்ஃபாமன்ஸ் பொறுத்தவரையில் 113.3 CC எஞ்ஜின் கொண்டுள்ளதால் ஸ்கூட்டி, 8.02 Hp மற்றும் 9.8 Nm என டார்க் (torque) வழங்கும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள எஞ்ஜின் நியு-ஜென் என்பதாலும் iGO mild-hybrid தொழில்நுட்பம் என்பதாலும் ஜுபிட்டர் 110 முந்தைய மாடல்களை விட 10 சதவீதம் அதிக மைலேஜ் தரும். இக்னைசன் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஸ்டாக் ஆகியவற்றிற்கு Integrated Starter Generator தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஸ்கூட்டரில் மேடு பாதைகளில் ஏறும்போதும், ஓவர்டேக் செய்யும்போது பேட்டரியில் இருந்து பவர் கிடைப்பது சிறப்பாக செயல்படும். இதனால் தேவைப்படும் நேரத்தில் உங்களுக்கு acceleration கிடைக்கும். 12 இன்ச் டயர்கள் சக்கரங்கள் சீராக சுழல உதவும்.
TVS Jupiter 110 - வடிவமைப்பு
இந்த புதிய மாடலின் வடிவமைப்பை பொறுத்தவரையில் ஹேண்டில்பார் நன்றாக பொருத்தப்பட்டிருக்கும், கால்கள் வைக்க அதிக இடம், இருக்கை உயரம் சீராக இருப்பது உள்ளிட்டவைகளுடன் இருப்பதால் ஸ்கூட்டரின் பயணம் செய்பவர்கள் உயரம் குறித்து யோசிக்க வேண்டியதில்லை.
ஸ்டைல் லுக்குடன், எல்.இ.டி. விளக்குகள், ஹெட்லாம்ப் டிசைன் புதுப்பிக்கப்பட்டுள்ளது, டிஜிட்டல் எல்.சி.டி. ஸ்பீடோமீட்டர், ரியல்டைம் மைலேஜ் இண்டிகேட்டர் உள்ளிட்டவைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு பல்வேறு தகவல்களை வழங்க கூடிய எல்.இ.டி. டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி என ஏராளமான வசதிகளை எல்லாம் புத்தம் புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டர் பெற்றுள்ளது.
அதேபோல் எரிபொருள் நிரப்பும் ஒவ்வொரு முறையும் இருக்கையை திறக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எரிபொருள் நிரப்புவதற்கான 'கேப்' வெளிப்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.
டி.வி.எஸ். ஜூபிட்டர் 110 நீலம் (Dawn Blue Matte) Galactic Copper Matte, டைட்டேனியம் க்ரே (Titanium Grey Matte) Starlight Blue Gloss, லூனார் வெள்ளை (Lunar White Gloss) சிகப்பு (Meteor Red Gloss) ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
விலை விவரம்:
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய புதிய டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை ரூ. 73,700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். - Drum, Drum Alloy, Drum SXC and Disc SX என நான்கு ரகங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.