(Source: ECI/ABP News/ABP Majha)
Toyota Innova Hycross: உள்ளூருக்கு ஒரு பேரு.. வெளியூருக்கு ஒரு பேரு.. விவரங்கள் உள்ளே
டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா ஹைகிராஸ் கார், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பபட்டுள்ளது.
இந்தோனேஷியவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா ஜெனிக்ஸ் எனும் புதிய காரை, இந்தியாவில் இன்னொவா ஹைகிராஸ் எனும் பெயரில் டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு கார்களும் ஒரே வடிவமைப்பை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காரின் வடிவமைப்பு:
புதிய எம்பிவி மாடல் டொயோட்டா நிறுவனத்தின் மாட்யுலர் TNGA-C: GA-C பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில், கிரிஸ்டா மாடலை விட வித்தியாசமாக உள்ளது. எஸ்யுவி மாடலை போன்ற தோற்றம் கொண்ட புதிய மாடல் காரில், பக்கவாட்டுகளில் ஃபிலார்டு வீல் ஆர்ச்கள், 18 இன்ச் அலாய் வீல்கள் உள்ளிடட்டவை ஐடம்பெற்றுள்ளன. அதோடு, மெல்லிய ஹெட்லைட்கள், மேம்படுத்தப்பட்ட எல்இடி இண்டிகேட்டர்கள், மஸ்குலர் பம்ப்பர், மெல்லிய எல்இடி டிஆர்எல் பார்கள்,ஹெக்சகோனல் வடிவம் கொண்ட கிரில் மற்றும் க்ரோம் பார்டர்கள் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன. அதோடு, ஹைகிராஸ் காரின் வெளிப்புற உதிரிபாகங்கள் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்கள் ஆகியவை முழுமையாக மாறுபட்டுள்ளது.
க்ரிஸ்டா மாடலில் உள்ள ரியர் வீல் டிரைவ், லேடர் ஆன் ஃபிரேம் உற்பத்திக்கு மாற்றாக, ஹைகிராஸ் காரில் மோனோக் சேசிஸ் மற்றும் முன்புற வீல் டிரைவ் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 6 மற்றும்7 பேர் அமரும் வகையில், இரண்டு வகைகளில் கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
The luxury and spacious interior brings all kind of ease in every distinguished journey ahead. #AllNewKijangInnovaZenixHybridEV is equipped with many features that will keep you in leisure and convenience wherever you go! pic.twitter.com/axCNd43pDO
— Toyota Indonesia (@ToyotaID) November 21, 2022
காரின் சிறப்பம்சங்கள்:
இன்னோவா ஜெனிக்ஸ் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், ஆப்ஷனல் 2.0 லிட்டர் ஹைப்ரிட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 152 குதிரைகளின் சக்தி மற்றும் 187Nm இழுவிசையையும் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ABS, EBD, ரியர் பார்க்கிங் கேமரா,லேன் கீப் அசிஸ்ட், ஏழு ஏர்பேக், 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள் என ஏராளமான அம்சங்கள் உள்ளன. இத்துடன் எலெக்ட்ரிக் டெயில்கேட் மற்றும் வாய்ஸ் கமாண்ட் மூலம் திறக்கும் வசதி கொண்டுள்ளது.
தொழில்நுட்ப வசதிகள்:
எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில்-ஹோல்டு பட்டன், பானரோமிக் சன்ரூஃப், ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஏசி வெண்ட்கள், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்டிங் வசதியும் இடம்பெற்றுள்ளது. ஹைகிராஸின் டாப் எண்ட் மாடல்களில் 10 இன்ச் அளவில் இரண்டாவது ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது. புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் டொயோட்டா, சேஃப்டி சென்ஸ் 3.0 தொழில்நுட்பத்தையும் பெற்றுள்ளது.
டொயோட்டா ஹைகிராஸ் காரின் உட்பகுதி (courtesy: Autocar)
காரின் விலை விவரம்:
டொயோட்டா ஹைகிராஸ் கார், கியா நிறுவனத்தின் காரென்ஸ் மற்றும் மஹிந்திராவின் Marazzo மாடல் கார்களுக்கு உள்நாட்டு சந்தையில் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன் விலை இந்திய மதிப்பில் ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய இனோவா ஹைகிராஸ் மாடலுடன், கிரிஸ்டா மாடலின் விற்பனையும் தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.