மேலும் அறிய

ஜோரா போக ஜாவாதாங்க.. Jawa 42 Bobber பைக் வாங்கலாமா? விலை, மைலேஜ் எப்படி?

Jawa 42 Bobber பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் ராயல் என்ஃபீல்ட்டிற்கு போட்டியாக திகழ்ந்த இரு சக்கர வாகனம் ஜாவா. 80, 90 காலங்களில் இந்த இரண்டு நிறுவனங்களின் வாகனங்களும் சாலைகளில் கம்பீரமாக வலம் வர உகந்த வாகனமாக இருக்கும்.

 Jawa 42 Bobber:

தற்போதும் ராயல் என்ஃபீல்டிற்கு போட்டியாக ஜாவா நிறுவனமும் தனது மாடல்களை சந்தையில் களமிறக்கி வருகிறது. அந்த வகையில் ஜாவாவின் கம்பீரமான படைப்பாக கருதப்படுவது Jawa 42 Bobber.

இந்த Jawa 42 Bobber இரு சக்கர வாகனத்தில் மொத்தம் 5 வேரியண்ட்கள் உள்ளது. 

1. 42 Bobber Moonstone White:

இந்த இரு சக்கர வாகனத்தின் விலை ரூபாய் 2 லட்சத்து 39 ஆயிரத்து 651 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குகள், ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ட்யூப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் வெள்ளை நிறத்தில் மட்டுமே உள்ளது. இதில் சார்ஜர் வசதி இல்லை.

2. 42 Bobber Mystic Copper - Spoke Wheel:

இந்த 42 Bobber Mystic Copper - Spoke Wheel இரு சக்கர வாகனத்தின் விலை ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்து 462. இதில் டிஸ்க் ப்ரேக்குகள், ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப் சக்கரங்களே இதில் உள்ளது. இதில் சார்ஜிங் வசதி இல்லை. இது அரக்கு நிறத்தில் காணப்படுகிறது.

3. 42 Bobber Jasper Red - Spoke Wheel:

இந்த 42 Bobber Jasper Red - Spoke Wheel பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்து 462. இதில் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஸ்போக் சக்கரங்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. வெள்ளை - இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த பைக் உள்ளது. 

4. 42 Bobber Mystic Copper and Jasper Red - Alloy Wheel:

ஜாவாவின் இந்த 42 Bobber Mystic Copper and Jasper Red - Alloy Wheel பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 55 ஆயிரத்து 718. இதில் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது அரக்கு மற்றும் வெள்ளை - இளஞ்சிவப்பு நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 

5. 42 Bobber Black Mirror and Red Sheen - Alloy Wheel:

இந்த 42 Bobber Black Mirror and Red Sheen - Alloy Wheel பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 65 ஆயிரத்து 808. இதில் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ட்யூப்லஸ் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சாம்பல் - இளஞ்சிவப்பு, சாம்பல் நிறத்தில் இந்த பைக் உள்ளது.

மைலேஜ்:

இந்த பைக்கில் 334 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 30 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இதில் 6 கியர்கள் உள்ளது. இதன் எடை 185 கிலோ ஆகும். இதன் டேங்கர் 12.5 லிட்டர் வரை தாங்கும் திறன் கொண்டது. 29.51 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 32.74 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

முதல் கியர் கீழே மாற்றிய பிறகு, மற்ற 5 கியர்கள் மேல்நோக்கி மாற்ற வேண்டும். ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 375 கிலோமீட்டர் வரை செல்லலாம். டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்டது. முன்சக்கரம் 2 பிஸ்டன் காலிபரும், பின்சக்கரம் 1 பிஸ்டன் காலிபரும் கொண்டது. 

டெலிஸ்கோபிக், ஹைட்ராலிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கம் உள்ளது. மோனோஷாக் அப்சார்பர், 7 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் பின்பக்கம் உள்ளது. 2.2 லிட்டர் ரிசர்வ் பெட்ரோல் திறன் கொண்டது. இந்த பைக்கிற்கு 50 ஆயிரம் கிலோமீட்டர் மற்றும் 4 வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே வசதி கொண்டது. 

 

தலைப்பு செய்திகள்

Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
Embed widget