மேலும் அறிய

Toyota Fortuner: புது ஃபார்மில் “கிங் ஆஃப் எஸ்யுவி” - ஹைப்ரிட், மின்சார, ஹைட்ரஜன் எடிஷனில் ஃபார்ட்சுனர் - எப்போது?

Toyota Fortuner 2026 SUV: எஸ்யுவிக்களின் மன்னனாக கருதப்படும் டொயோட்டா ஃபார்ட்சுனரின் புதிய தலைமுறைக்கான பரிசோதனையை டொயோட்டா நிறுவனம் தொடங்கியுள்ளது.

Toyota Fortuner 2026 SUV: டொயோட்டா ஃபார்ட்சுனரின் புதிய தலைமுறை மாடலில் எதிர்பார்க்கக் கூடிய அம்சங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

டொயோட்டா ஃபார்ட்சுனர் எஸ்யுவி 2026:

கம்பீரமான தோற்றம், வலுவான செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை காரணமாக, டொயோட்டாவின் ஃபார்ட்சுனர் கார் மாடலானது எஸ்யுவிக்களின் ராஜாவாக போற்றப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் விலை 34.16 லட்சத்தில் தொடங்கி 49.59 லட்சம் வரை நீள்கிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஹில்கஸ் கார் மாடலின் 9வது தலைமுறை எடிஷனை அறிமுகப்படுத்தியதன் தொடர்ச்சியாக, அடுத்த மிகப்பெரிய அப்டேட்டும் டொயோட்டா தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது. அதன்படி, புதிய தலைமுறை ஃபார்ட்சுனர் கார் மாடலானது தாய்லாந்தில் சாலை சோதனையில் ஈடுபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இதனால், ஹிலக்ஸின் கட்டமைப்பு பாணி, புதிய தலைமுறை ஃபார்ட்சுனரில் அப்படியே பின்பற்றப்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. முற்றிலும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனையில் ஈடுபட்ட காரானது, நடப்பாண்டு இறுதியில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிலக்ஸ் ஃபார்மில் புதிய தலைமுறை ஃபார்ட்சுனர்

ஹிலக்ஸ் பிக்-அப் வாகனத்தில் பயன்படுத்தப்பட்ட அதே மேம்படுத்தப்பட்ட IMV - லேடர் ஃப்ரேம் தான் ஃபார்ட்சுனரின் கட்டமைப்புக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நவீன காலத்திற்கு ஏற்ப டீசல், பெட்ரோல், 48V ஹைப்ரிட், முழுமையான மின்சார எடிஷன் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் செல் ஆகிய வடிவங்களில் ஹிலக்ஸ் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்த பலதரப்பட்ட பவர்ட்ரெயின் ஆப்ஷன்களானது ஃபார்ட்சுனருக்கும் சர்வதேச சந்தையில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரம் இந்தியாவிற்கு ஆரம்பத்தில் வழக்கமான பெட்ரோல், டீசல் வடிவங்களிலும், சிறிய கால இடைவெளிக்குப் பிறகு ஹைப்ரிட் அல்லது மின்சார எடிஷன்களும் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாம்.


Toyota Fortuner: புது ஃபார்மில் “கிங் ஆஃப் எஸ்யுவி” - ஹைப்ரிட், மின்சார, ஹைட்ரஜன் எடிஷனில் ஃபார்ட்சுனர் - எப்போது?

புதிய தலைமுறை ஃபார்ட்சுனர் - டிசைன் அப்டேட்

சோதனை வாகனமானது முற்றிலுமாக மறைக்கப்பட்டு இருந்தாலும், சில அப்டேட்களை உணர முடிகிறது. அதன்படி, 

  • கூடுதலாக நிமிர்ந்த மற்றும் சதுரமாக்கப்பட்ட பின்புஅம்
  • திருத்தப்பட்ட டெயில் லேம்ப் டிசைன்
  • அகலமான இருப்பு
  • மறுவடிவமைக்கப்பட்ட பின்புற பம்பர்
  • சற்றே அதிகமான கட்டுமஸ்தான அளவீடுகள்

டொயோட்டாவின் முன்புறமானது ப்ராண்டின் புதிய டிசைன் லேங்குவேஜை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மெல்லிய முகப்பு விளக்குகள், புதிய ஹிலக்ஸில் இருப்பதை போன்ற தீவிரமான க்ரில் ஆகியவை இடம்பெறலாம். ஒட்டுமொத்த வெளிப்புற சில்-ஹவுட் தோற்றமானது பாக்ஸி வடிவத்தில் தொடர்ந்து, ஃபார்ட்சுனரின் ரக்கட் எஸ்யுவி என்ற பெயரை அப்படியே தொடர உள்ளது.

புதிய தலைமுறை ஃபார்ட்சுனர் - டெக் அப்க்ரேட்கள்

ஹிலக்ஸை போன்றே ஃபார்ட்சுனரின் கேபினும் குறிப்பிடத்தக்க அப்க்ரேட்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 12.3 இன்ச் முழுமையான டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே, 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டச்ஸ்க்ரீன், மேம்படுத்தப்பட்ட ட்ரைவர் அசிஸ்டன்ஸ் அம்சங்களை கொண்ட டொயோட்டா பாதுகாப்பு தொழில்நுட்ப வசதி ஆகியவற்றை பெற்றுள்ளது. மேலும், மேம்படுத்தப்பட்ட இயக்குதலுக்காக எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங், வாகனத்தின் முழு வாழ்நாளிற்கும் காலத்திற்கேற்ப அதனை மேம்படுத்தி காட்ட ஓவர் தி ஏர் சாஃப்ட்வேர் அப்டேட் ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் அப்படியே புதிய தலைமுறை ஃபார்ட்சுனருக்கும் வழங்கப்படலாம். அப்படி நடந்தால் ஃபார்ட்சுனர் வரலாற்றில் அதன் உட்புறத்திற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய அப்டேட்டாக இது இருக்கும். ADAS தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி மற்றும் கூடுதல் ப்ரீமியம் மெட்டீரியல்கள் சேர்க்கப்படலாம். தற்போதைய ஃபார்ட்சுனர் விற்பனையில் தொடர்ந்து அசத்தினாலும், ADAS போன்ற பல தொழில்நுட்ப அம்சங்கள் இல்லை என்ற விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதற்கான தீர்வாக புதிய தலைமுறை ஃபார்ட்சுனர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Toyota Fortuner: புது ஃபார்மில் “கிங் ஆஃப் எஸ்யுவி” - ஹைப்ரிட், மின்சார, ஹைட்ரஜன் எடிஷனில் ஃபார்ட்சுனர் - எப்போது?

புதிய ஃபார்ட்சுனர் - பவர்ட்ரெயின் எதிர்பார்ப்புகள்

சர்வதேச சந்தையில் புதிய தலைமுறை ஹிலக்ஸ் ஆனது 2.8 லிட்டர் டீசல், 2.4 லிட்டர் பெட்ரோல், 48V மைல்ட் ஹைப்ரிட் டீசல் சிஸ்டம், முழுமையான மின்சார எடிஷன் ஆகிய பவர்ட்ரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதுபோக, ஹைட்ரஜன் எரிபொருள் செல் ஆப்ஷனையும் பயனர்கள் தேர்வு செய்யலாம்.

இந்திய சந்தையில் ஃபார்ட்சுனரானது ஆரம்பத்தில் வழக்கமான 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் ஆனது ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடனும், 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, ஹைப்ரிட் எடிஷன்கள் காலப்போக்கில் உள்ளூர் சந்தைக்கு கொண்டுவரப்படலாம். உடனடியாக இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மின்சார எடிஷனும் இங்கு வரக்கூடும்.

புதிய ஃபார்ட்சுனர் - வெளியீடு எப்போது?

தாய்லாந்தில் சாலை பரிசோதனை தொடங்கியுள்ள நிலையில், நடப்பாண்டின் மத்தியில், புதிய ஃபார்ட்சுனர் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம். தொடர்ந்து ஆண்டின் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம். உள்ளூரில் இந்த முழு அளவிலான எஸ்யுவி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், புதிய தலைமுறையானது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. அப்க்ரேட்கள், எரிபொருள் ஆப்ஷன்கள் ஆகியவற்றை பொருத்து, புதிய தலைமுறை ஃபார்ட்சுனரின் விலை கணிசமாக உயரக்கூடும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

MG Motor NEV Architecture: டாடா, மஹிந்திராவின் தூக்கத்தை கெடுக்கப் போகும் எம்ஜி; EV, Hybrid கார்களில் புதிய தொழில்நுட்பம்; அது என்ன.?
டாடா, மஹிந்திராவின் தூக்கத்தை கெடுக்கப் போகும் எம்ஜி; EV, Hybrid கார்களில் புதிய தொழில்நுட்பம்; அது என்ன.?
Best Speed for Car Mileage: ‘மைலேஜை தீர்மானிக்கும் வேகம்‘; எந்த வேகத்தில் கார் ஓட்டினால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் தெரியுமா.?
‘மைலேஜை தீர்மானிக்கும் வேகம்‘; எந்த வேகத்தில் கார் ஓட்டினால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் தெரியுமா.?
Enfield Classic New Features: ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்குறவங்களுக்கு ஜாக்பாட்.! முதல் முறையா 2 புதிய அம்சங்கள் கிடைக்கும்
ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்குறவங்களுக்கு ஜாக்பாட்.! முதல் முறையா 2 புதிய அம்சங்கள் கிடைக்கும்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget