மேலும் அறிய

செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்

செடான் கார் வேகமாகச் செல்லும்போது, காற்று கூரையின் மீது பட்டு, பின்புற கண்ணாடி வழியாக சீராகக் கீழே இறங்குகிறது.

எஸ்.யு.வி, ஹேட்ச்பேக் மற்றும் மினிவேன்களில் பின்புற கண்ணாடியை சுத்தம் செய்ய வைப்பர்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், செடான் (Sedan) கார்களில் பெரும்பாலும் பின்புற வைப்பர்கள் இருப்பதில்லை. இதற்கான அறிவியல் மற்றும் வடிவமைப்பு சார்ந்த முக்கியக் காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஏரோடைனமிக்ஸ் மற்றும் காற்றோட்டம்

செடான் கார்களின் பின்புற கண்ணாடி சரிவான ஸ்லோப்பிங் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கார் வேகமாகச் செல்லும்போது, காற்று கூரையின் மீது பட்டு, பின்புற கண்ணாடி வழியாக சீராகக் கீழே இறங்குகிறது. இந்த அதிவேக காற்றோட்டமே கண்ணாடியில் படியும் மழைநீர் மற்றும் தூசிகளை இயற்கையாகவே தள்ளிவிட்டு சுத்தம் செய்துவிடுகிறது.

மாறாக, எஸ்.யு.வி மற்றும் ஹேட்ச்பேக் கார்களில் பின்புற கண்ணாடி செங்குத்தாக அல்லது ஃப்ளாட்டாக இருக்கும். இதனால் காற்று கூரையைத் தாண்டியதும், பின்புறத்தில் குறைந்த அழுத்த வெற்றிடம் உருவாகிறது. இது காற்றில் உள்ள தூசி மற்றும் தண்ணீரை பின்பக்க கண்ணாடியை நோக்கி சுழற்றி ஈர்க்கும். எனவே, அந்த வகை கார்களுக்கு வைப்பர்கள் கட்டாயம் தேவை.

டிரங்க் வடிவமைப்பு மற்றும் இடப்பற்றாக்குறை

செடான் கார்களில் டிக்கி எனப்படும் டிரங்க் கதவு மேல்நோக்கித் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். கண்ணாடியில் வைப்பர் இருந்தால், டிரங்க் கதவைத் திறக்கும்போது அது வைப்பர் மீது மோதி இடையூறை ஏற்படுத்தும். மேலும், வைப்பரை இயக்குவதற்கான மோட்டாரை (Wiper Motor) பொருத்துவதற்கு செடான் கார்களின் பின்பக்க கண்ணாடியின் கீழோ அல்லது டிரங்க் பகுதியிலோ போதுமான இடம் இருப்பதில்லை.

அதேபோல செடான் வாகன வடிவமைப்பாளர்கள், காரை மென்மையான, நேர்த்தியான பளபளப்பான தோற்றத்துடன் வடிவமைக்கின்றனர். இதில் பின்புற வைப்பரைச் சேர்ப்பது, வாகனத்தின் பின்புறத்தில் உள்ள கோடுகளை கோணலாக்கி விடும் என்பதும் இன்னொரு காரணம்.

சில விதிவிலக்குகள்

எனினும் அனைத்து செடான் கார்களிலும் பின்புற வைப்பர் இருக்காது என்று கூற முடியாது. அதிக மழை மற்றும் பனிப்பொழிவு உள்ள ஜப்பான் போன்ற நாடுகளில் விற்பனையாகும் சில ஜே.டி.எம் செடான் கார்களில் வாடிக்கையாளர்களின் தேவைக்காக பின்புற வைப்பர்கள் வழங்கப்படுகின்றன.

செடான் தோற்றத்தில் இருந்தாலும், பின்பக்க கண்ணாடி மற்றும் டிரங்க் இரண்டும் ஒன்றாக மேல்நோக்கித் திறக்கும் லிஃப்ட்பேக் வகையைச் சேர்ந்த ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் போர்ஷே பனமேரா போன்ற குறிப்பிட்ட மாடல்களில் பின்புற வைப்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget