மேலும் அறிய

Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு

ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு ஒன்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என இன்று அறிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் மோதல் தொடங்கி, பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஈராக்கிய போராளிக் குழுவான "ஈராக்கில் இஸ்லாமிய எதிர்ப்பு", அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை கொலை செய்வதற்கான சன்மானத்தை அறிவித்துள்ளது. ஜூலை 17, அதாவது இன்று, ஈரான் ஆதரவு பெற்ற இந்தக் குழு, ட்ரம்பின் கொலைக்காக 10 மில்லியன் டாலர் (சுமார் 85 கோடி ரூபாய்) சன்மானத்தை அறிவித்தது.

எதற்காக இந்த அறிவிப்பு.?

ஈராக்கிய குழுவின் கூற்றுப்படி, 2020-ல் ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானி மற்றும் ஈராக்கிய போராளிக் குழுத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோரைக் கொன்ற அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஈராக், சிரியா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் நலன்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானம், ராக்கெட் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இந்த ஆயுதக் குழுக்கள் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "ட்ரம்ப் ஒரு கொலையாளி. மற்றவர்களை கொல்லவோ அல்லது அமைப்புகளை கலைக்கவோ அவர் தனது அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். எனவே, அவரது மரணத்துக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது.

"காசிம் சுலைமானி மற்றும் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் ஆகியோரைக் கொன்றதன் மூலம், ட்ரம்ப் உலகளாவிய பாராட்டை பெற்றார்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஈரானிய பிரஸ் டிவி தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் ஈராக் பிரதமர் காசிம் அல்-ஜைதியுடனான சந்திப்பின்போது, ​​2020 ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்து ட்ரம்ப் பகிரங்கமாகக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியானது.

ட்ரம்ப் கூறியது என்ன.?

அந்த சந்திப்பின் போது, ​​சுலைமானி மற்றும் முஹந்திஸைக் கொன்ற நடவடிக்கையை ட்ரம்ப் நியாயப்படுத்தினார். அஷர்க் அல்-அவ்சாத் என்ற அரபு செய்தி நிறுவனத்தின்படி, "எனது முதல் பதவிக்காலத்தில் நான் அவர்களை (சுலைமானி மற்றும் முஹந்திஸ்) கொன்றேன். நான் அதை செய்யாமல் இருந்திருந்தால், இன்றைய நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும். ஈரானிய தலைவர்கள் சுலைமானிக்குப் பயந்தார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று ட்ரம்ப் கூறினார்.

ட்ரம்ப்பை கொல்ல ஏற்கனவே நடந்த முயற்சிகள்

2024 அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ட்ரம்ப்பை கொலை செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2024 ஜூலை 13-ம் தேதி அன்று, பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த ஒரு பிரசாரக் கூட்டத்தின் போது, ​​ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், குண்டு ட்ரம்பின் காதை உரசிச் சென்று, மயிரிழையில் தவறவிட்டது. அதற்கு சில வாரங்களுக்குப் பிறகு, புளோரிடாவில் உள்ள ட்ரம்பின் கோல்ஃப் மைதானத்திற்கு அருகே, அதிகாரிகள் ஒரு சந்தேக நபரை கைது செய்தனர். பின்னர், சுலைமானியின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக, ஈரானுடன் தொடர்புடைய ஒரு குழு ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget