மேலும் அறிய

Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!

பழனி தண்டயுதபாணி சுவாமி மட நிலம் பதிவு செய்யப்பட்ட விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை அமர்வு உத்தரவு.

பத்திரப்பதிவு முழுவதுமாக, எண் ஒதுக்குவதை தவிர பிற நடவடிக்கைகள் அனைத்தும் முன்பிருந்த பதிவாளர் பாலசுந்தரால் ஜூலை 3ஆம் தேதி செய்யப்பட்டுள்ளது. அவர் விடுப்பில் சென்றதால் பொறுப்பு பதிவாளராக மனுதாரர் ஆவண எண்ணை ஒதுக்கி, மீதப்பணிகளை முடித்துள்ளார். அவ்வாறு இருக்கையில் நடவடிக்கைகள் இருபக்கமும் எடுக்க வேண்டும்- நீதிபதி.

பழனி கோயில் நில கண்காணிப்பாளர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான,1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6- ஆம் தேதி தனி நபர்கள் இருவரது பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி, பழனி கோயில் நிர்வாகம் சார்பில், பத்திரப்பதிவு துறைக்கு மனு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் முன் ஜாமின் கோரி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உயர் நீதிமன்ற அமர்வில்   மனுத்தாக்கல் செய்திருந்தார். அதே சமயம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென பழனி கோயில் நில கண்காணிப்பாளர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுக்கள் நீதிபதி ராஜசேகர் முன்பாக விசாரணைக்கு வந்தது. சார்பதிவாளர் தரப்பில், " 3.7.26  முந்தைய சார்பதிவாளரால் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டது. 6.7.26 அதன் பின்னர் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டதும்,  மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது. மாவட்ட பதிவாளர், பழனி பதிவாளர் விடுப்பு என்பதால் என்னை பொறுப்பு வகிக்குமாறு தெரிவித்தார்.  பாலசுந்தர் எனும் சார்பதிவாளரே பதிவு செய்து, கையெழுத்திட்டுள்ளார். நான் பதிவு செய்யவில்லை" என தெரிவிக்கப்பட்டது. அரசுத்தரப்பில், "மனுதாரர் மீது ஏற்கனவே அரசு புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பதிவு செய்து வழங்கியதாக, 2 வழக்குகள் உள்ளன" என தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் 2 குற்றச்சாட்டுகள் உள்ளன
 
பத்திரப்பதிவு நடைமுறை யாரால் செய்யப்பட்டது? நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பில், "இருவராலும் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அரசுத்தரப்பில், "ஜூலை 3ஆம் தேதி பாலசுந்தர் பதிவு செய்துள்ளார். ஜூலை 6ஆம் தேதி, மனுதாரர் எண் ஒதுக்கி ஆட்சியரிடம் அனுப்பியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, " பத்திரப்பதிவு செய்தது உள்ளிட்ட முதல் கட்ட விவரங்களை செய்தது முன்பிருந்த சார்பதிவாளர் தானே? என கேள்வி எழுப்பினார். அரசுத்தரப்பில், "மனுதாரர் தான் பத்திரப்பதிவை முழுவதுமாக செய்துள்ளார். அவர் மீது மேலும் 2 குற்றச்சாட்டுகள் உள்ளன" என தெரிவிக்கப்பட்டது.
 
இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி, " பத்திரப்பதிவு முழுவதுமாக, எண் ஒதுக்குவதை தவிர பிற நடவடிக்கைகள் அனைத்தும் முன்பிருந்த பதிவாளர் பாலசுந்தரால் ஜூலை 3ஆம் தேதி செய்யப்பட்டுள்ளது. அவர் விடுப்பில் சென்றதால் பொறுப்பு பதிவாளராக மனுதாரர் ஆவண எண்ணை ஒதுக்கி, மீதப்பணிகளை முடித்துள்ளார். அவ்வாறு இருக்கையில் நடவடிக்கைகள் இருபக்கமும் எடுக்க வேண்டும். எனவே மனுதாரருக்கு நிபந்தனை இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது. மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget