Safest Cars Under 10 Lakh: பத்து லட்சத்தில் இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான் - தரமான ப்ராண்ட்னா சும்மாவா
Safest Cars Under 10 Lakh: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் பாதுகாப்பான கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Safest Cars Under 10 Lakh: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் 3 பாதுகாப்பான கார்களை இங்கே அறியலாம்.
ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் பாதுகாப்பான கார்கள்:
சர்வதே அளவில் சாலை விபத்துகளில் முதலிடம் வகிப்பதால், இந்தியாவில் கார் வாங்குபவர்கள் பாதுகாப்பு அம்சங்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், உள்நாட்டு சந்தையில் 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் 3 பாதுகாப்பான கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. ஒருவேளை பட்ஜெட்டில் பாதுகாப்பான காரை திட்டமிட்டு இருந்தால், இந்த தொகுப்பு உங்களுக்கான தகவல்களை வழங்கக் கூடும்.பெரிய கார்கள் வலுவான பாதுகாப்பு அம்சங்களை மட்டுமின்றி, அற்புதமான அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். அதன்படி, இந்த கார்களில் உள்ள சுவாரஸ்யமான அம்சங்களும் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.
1. டாடா பஞ்ச்
10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் பாதுகாப்பான காரை தேடுகிறீர்கள் என்றால், டாடா பஞ்ச் முதன்மையாக தேர்வாக உங்கள் நினைவிற்கு வரவேண்டும். சர்வதேச அளவிலான பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ள இந்த காரின் விலையானது, 6.20 லட்சத்தில் தொடங்கி 10.30 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. இதில் முன்புறத்தில் இரட்டை ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS மற்றும் ப்ரேக் ஸ்வே கண்ட்ரோல் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக குழந்தைகளுக்கான ISOFIX இருக்கைகள், ரியர் பார்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. சொகுசு மற்றும் வசதியான பயணங்களுக்காக 10.25 இன்ச் மற்றும் 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே அணுகல் உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் புஷ் பட்டன், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்டியரிங் மவுண்டட் கண்ட்ரோல்களும் கவனத்தை ஈர்க்கின்றன.
2. டாடா ஆல்ட்ரோஸ்
இந்தியாவில் டீசல் எரிபொருள் ஆப்ஷன் கொண்ட ஒரே ஒரு ஹேட்ச்பேக்கான டாடா ஆல்ட்ரோஸின் விலை, 6.89 லட்சத்தில் தொடங்கி ரூ.11.49 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. கூடுதலாக இந்த கார் சர்வதேச பாதுகப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இதற்காக இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், குழந்தைகளுக்கான ISOFIX இருக்கைகள், ரியர் பார்கிங் சென்சார்கள், கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் சேஃப்டி அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக இந்த காரின் டாப் வேரியண்ட்களில் 6 ஏர் பேக்குகள் வழங்கப்படுகின்றன.
இதுபோக சொகுசு மற்றும் வசதியான பயணத்திற்காக 7 இன்ச் மற்றும் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாப்/ஸ்டார்ட் புஷ் பட்டன், ரியர் பார்கிங் கேமரா, ரியர் டிஃபாகர், எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்டபள் மற்றும் ஃபோல்டபள் ORVM-கள் ஆல்ட்ரோஸில் இடம்பெற்றுள்ளன.
3. டாடா நெக்ஸான்:
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மூன்றவாது காரும் டாடா பிராண்டைச் சேர்ந்த நெக்சான் மாடலே ஆகும். இதுவும் சர்வதேச அளவில் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார்களை பெற்று, சுமார் 8 லட்சம் முதல் 15.6 லட்சம் வரையிலான விலையை கொண்டுள்ளது. இந்த மாடலின் ஆரம்ப வேரியண்ட்கள் கூட நல்ல அம்சங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் பெறுகின்றன. அதன்படி 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், குழந்தைகளுக்கான ISOFIX இருக்கைகள், ரியர் பார்க்கின் சென்சார்கள் மற்றும் ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் வியூ மானிட்டர், உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.
பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக ஈகோ,சிட்டி மற்ற்யும் ஸ்போர்ட் போன்ற ட்ரைவ் மோட்களை பெற்றுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனர்ஸ், பவர் விண்டோஸ், ஹைட் அட்ஜெஸ்டபள் ட்ரைவர் மற்றும் சக பயணியர் இருக்கைகள் மற்றும் ரியர் பகுதியிலும் ஏசி வெண்ட்கள் இடம்பெற்றுள்ளன.





















