Crash Test Rating: BNCAP பாதுகாப்பு சோதனையில் டாப் ரேட்டிங் - 5 ஸ்டார் பெற்று அசத்திய டாடா பஞ்ச் மின்சார கார்..!
Tata Punch and Nexon EV Crash Test Rating: டாடா நிறுவனத்தின் பஞ்ச் மின்சார கார், பாதுகாப்பு சோதனையில் அதிகப்படியான ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது.
Tata Punch and Nexon EV Crash Test Rating: டாடா நிறுவனத்தின் பஞ்ச் மின்சார கார், பாதுகாப்பு சோதனையில் குழந்தைகளுக்கான பிரிவில் 49-க்கு 45 புள்ளிகளை பெற்றுள்ளது.
டாடா பஞ்ச் மின்சார கார் பாதுகாப்பு சோதனை:
பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம், பொதுவாக பாரத் என்சிஏபி (bharat ncap) என அழைக்கப்படுகிறது. இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய கார்களை மதிப்பிடும் திட்டமாகும். இதில், நாட்டில் விற்கப்படும் கார்களுக்கு அவற்றின் பாதுகாப்பு செயல்திறன் அடிப்படையில் ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கார் மாடலின் பேஸ் வேரியண்ட் மட்டுமே இந்த சோதனைக்கு உட்படுத்தப்படும். அந்த வகையில் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சத்திற்கான ரேட்டிங், விற்பனையை ஊக்குவிக்கும் என்பதால் பல நிறுவனங்களும் இந்த சோதனையில் பங்கேற்கின்றன. அந்த வகையில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் மின்சார எடிஷன் கார், பாதுகாப்பு சோதனையில் அசத்தலான ரேட்டிங்கை பெற்றுள்ளது.
சோதனைகளில் ஈட்டிய புள்ளிகள்:
Tata Punch EV ஆனது வயது வந்தோர் பாதுகாப்பிற்கான பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் (AOP) மற்றும் குழந்தை பயணிகளுக்கான பாதுகாப்பு (COP) சோதனை ஆகியவற்றில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இந்த சோதனையின் முடிவுகள், பஞ்ச் மின்சார எடிஷனின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. BNCAP இன் சோதனைகளில் AOP க்கு Punch EV ஆனது 32 இல் 31.46 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முன்பக்க ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் சோதனையில் 14.26/16 மற்றும் பக்கவாட்டிற்கான கிராஷ் டெஸ்டில் 15.6/16 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த SUV ஆனது வயது வந்தோருக்கான கிராஷ் டெஸ்ட் டம்மிகளை இரண்டு சோதனைகளிலும் போதுமான பாதுகாப்புடன் வழங்கியது.
டாப் ரேட்டிங் கார்:
குழந்தை பயணிகளுக்கான சோதனைகளில், பஞ்ச் EVக்கு அதிகபட்சமாக 49க்கு 45 புள்ளிகள் வழங்கப்பட்டன. டைனமிக் சோதனைகளில் 24 இல் 23.95, குழந்தை இருக்கை கட்டுப்பாடு பிரிவில் 12க்கு 12 புள்ளிகளை ஈட்டியுள்ளது. மொத்த வாகன பரிசோதனையில் 13-க்கு 9 புள்ளிகளை பெற்றுள்ளது. டாடாவின் சிறிய e-SUV ஆனது ஆறு ஏர்பேக்குகள், ABS மற்றும் ESC, அனைத்து இருக்கைகளுக்கும் மூன்று-புள்ளி இருக்கை பெல்ட்கள் மற்றும் அனைத்து வகைகளிலும் ஸ்டேண்டர்டான ISOFIX மவுண்ட்களைப் பெறுகிறது இந்த சிறிய SUV பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், இது தற்போது BNCAP இன் அதிக ரேட்டிங்கை பெற்ற கார் எனும் அந்தஸ்தை பெற்றுள்ளது.
விலை, போட்டியாளர் விவரங்கள்:
Nexon EV , ஹாரியர் மற்றும் சஃபாரி அனைத்தும் 5-ஸ்டார் ரேட்டிங்கில் உள்ளன. ஆனால் அவற்றின் புள்ளிகள் பஞ்ச் EVகளை விட மிகக் குறைவாக உள்ளன. Tata Punch EV தற்போது இரண்டு பேட்டரி விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது. ஒன்று 315km வரம்பில் (MIDC) 25kWh பேட்டரி, மற்றொன்று 421km வரம்பில் (MIDC) 35kWh பேட்டரியை கொண்டுள்ளது. சார்ஜிங் விருப்பங்களில் 3.3kW வால் பாக்ஸ் சார்ஜர் மற்றும் 7.2kW வேகமான சார்ஜர் ஆகியவை அடங்கும். நீண்ட தூர வேரியண்ட்களில் 122hp மற்றும் 190Nm மோட்டார் கிடைக்கும். வழக்கமான வேரியண்ட்களில் 82hp, 114Nm மோட்டார் உள்ளது. பஞ்ச் EV விலை ரூ.10.99 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் நெருங்கிய போட்டியாளர் Citroen eC3 மாடல் விலை ரூ. 12.69 லட்சத்தில் உள்ளது.