Tata EV Discounts: லட்சத்தில் தள்ளுபடி, வரியும் இல்லை - 490KM ரேஞ்ச், டாடா மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
Tata EV Discounts: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு, நவம்பர் மாதத்தில் ரூ.1.9 லட்சம் வரை தள்ளுபடி மற்றும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tata EV Discounts: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு, நவம்பர் மாதத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாடா மின்சார கார்களுக்கு சலுகை
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாஅட்டோமொபைல் சந்தையில் விற்பனையில் உள்ள, தனது பெரும்பாலனா மின்சார கார் மாடல்களுக்கு, நவம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. கர்வ், நெக்ஸான், பஞ்ச் மற்றும் டியாகோ கார் மாடல்களுக்கான அறிவிக்கப்பட்ட சலுகையில் எக்ஸ்சேஞ்ச்/ஸ்க்ரேப்பேஜ் சலுகை, கார்ப்ரேட் டிஸ்கவுன்ட்ஸ் மற்றும் க்ரீன் போனஸ் ஆகியவை அடங்கும். ஏற்கனவே டாடா நிறுவன காரை வைத்திருப்பவர்களுக்கு, லாயல்டி சலுகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கர்வ் மாடலுக்கு ரூ.1.3 லட்சமும், குறைந்தபட்சமாக நெக்ஸான் மாடலுக்கு ரூ.30 ஆயிரமும் தள்ளுபடி/சலுகை வழங்கப்படுகிறது.
டாடா கர்வ் மின்சார எடிஷன்:
நவம்பர் மாதத்தில் டாடா நிறுவனம் அறிவித்துள்ள சலுகைகளில், கர்வ் மாடல் அதிகப்படியான பலனை பெறுகிறது. அதன்படி க்ரீன் போனஸ் ரூ.1 லட்சம் மற்றும் எக்ஸ்சேஞ்ச்/ஸ்க்ராப்பேஜ் போனஸ் ஆக ரூ.30 ஆயிரம் என ஒட்டுமொத்தமாக ரூ.1.3 லட்சம் விலைக்குறைப்பை பயனர்கள் பெறலாம். கர்வ் கார் மாடலின் விலை ரூ.17.49 லட்சத்தில் தொடங்கி ரூ.22.24 லட்சம் வரை நீள்வது குறிப்பிடத்தக்கது. 45KWh மற்றும் 55KWh பேட்டரி பேக்குகளுடன் முறையே 430 மற்றும் 502 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் மஹிந்த்ரா BE 6, வின்ஃபாஸ்ட் VF6 மற்றும் ஹுண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.
டாடா டியாகோ:
டாடா நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் மிகவும் மலிவு விலை மின்சார காரான டியாகோவின், அனைத்து வேரியண்ட்கள் மீதும் ரூ.1 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் க்ரீன் போனஸ் 70 ஆயிரம் மற்றும் எக்ஸ்சேஞ்ச்/ஸ்க்ரேப்பேஜ் போனஸ் ஆக ரூ.30 ஆயிரம் ரூபய் வரை வழங்கப்படுகிறது. ரூ.7.99 லட்சத்தில் தொடங்கி ரூ.11.14 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் கிடைக்கிறது. எம்ஜி கோமெட் உடன் போட்டியிடும் டியாகோ, 19.2KWh மற்றும் 24KWh பேட்டரி பேக்கேஜை கொண்டுள்ளது. அவற்றை முழுமையாக சார்ஜ் செய்தால் முறையே, 221 மற்றும் 275 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா பஞ்ச்:
டாடா நிறுவனம் தரப்பில் விற்பனை செய்யப்படும் மிகவும் பிரபலமான மின்சார கார்களில் பஞ்ச் மாடலும் ஒன்றாகும். இதன் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ.1 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் க்ரீன் போனஸ் ஆக 70 ஆயிரம் ரூபாய் வரையிலும் மற்றும் எக்ஸ்சேஞ்ச்/ஸ்க்ரேப்பேஜ் போனஸ் ஆக ரூ.40 ஆயிரம் ரூபய் வரையிலும் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.9.99 லட்சத்தில் தொடங்கி ரூ.14.44 லட்சம் வரை நீள்கிறது. 25KWh மற்றும் 35KWh என இரண்டு பேக்கேஜை கொண்டு அவற்றை முழுமையாக சார்ஜ் செய்தால் முறையே, 210 மற்றும் 290 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் பஞ்ச் காரானது, சிட்ரோயனின் eC3 மாடல் உடன் போட்டியிடுகிறது.
டாடா நெக்ஸான்:
நவம்பர் மாதத்திற்கு டாடா அறிவித்துள்ள சலுகையில் மிகக் குறைந்த பலனை பெற்று இருப்பது நெக்ஸான் மாடலாகும். காரின் அனைத்து வேரியண்ட்களுக்கும் எக்ஸ்சேஞ்ச்/ஸ்க்ரேப்பேஜ் போனஸ் ஆக ரூ.30 ஆயிரம் மட்டுமே பணப்பலன் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.12.49 லட்சத்தில் தொடங்கி ரூ.17.49 லட்சம் வரை நீள்கிறது. எம்ஜி விண்ட்சர் மற்றும் மஹிந்த்ரா XUV 400 கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது. 30KWh மற்றும் 45KWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால், 275 மற்றும் 489 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வரியும் இல்லை..
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்க, மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. கார் பேட்டரியின் ஒவ்வொரு KWh திறனுக்கும் ரூ.10 ஆயிரம் வரையில் மத்திய அரசால் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், வரும் டிசம்பர் 31ம்தேதி வரை தமிழ்நாட்டில், மின்சார வாகனங்களுக்கான மோட்டார் வாகன வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலிவு விலையில் மின்சார கார்களை சொந்தமாக்க முடியும்.





















