TATA Affordable Cars: Punch முதல் Nexon வரை.. ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் டாப் 6 டாடா கார்கள் லிஸ்ட்!
TATA Affordable Cars: டாடா நிறுவனத்தின் ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக திகழ்வது டாடா ஆகும். டாடா நிறுவனத்தின் பட்ஜெட் விலை கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1. Tata Tiago:
டாடா நிறுவனத்தின் பிரபலமான படைப்பு இந்த Tata Tiago ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5.49 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 9.34 லட்சம் ஆகும். 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் இந்த கார் 19.01 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.

2.Tata Tigor:
டாடா நிறுவனத்தின் பட்ஜெட் விலை கார்களில் முக்கியமானது Tata Tigor ஆகும். செடான் ரக காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.62 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 10.43 லட்சம் ஆகும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. 19.2 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 4 ஸ்டார் பாதுகாப்பு அம்சம் பெற்றது. 5 சீட்டர் கார் ஆகும்.
3.Tata Punch:
டாடா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் Tata Punch ஆகும். இன்று இந்திய சந்தையில் அதிகளவு ஓடும் காராக இந்த கார் உள்ளது. ரூபாய் 6.63 லட்சம் இதன் தொடக்க விலை ஆகும். இந்த காரின் டாப் வேரியண்டின் விலை ரூபாய் 11.09 லட்சம் ஆகும். 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது ஆகும். பெட்ரோல், சிஎன்ஜியில் இயங்கும் ஆற்றல் கொண்டது.

4. Tata Altroz:
டாடாவின் புகழ்பெற்ற கார்களில் ஒன்று இந்த Tata Altroz ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 7.56 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 13.13 லட்சம் ஆகும். 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது ஆகும். பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது.
5. Tata Tiago NRG:
டாடா நிறுவனத்தின் டியாகோ காரின் Tata Tiago NRG ஆகும். 5 சீட்டர் ஹேட்ச்பேக் காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 9.69 லட்சம் ஆகும். 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 20.09 கி.மீட்டர் மைலேஜ் ஆற்றல் கொண்டது.
6. Tata Nexon:

டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று Tata Nexon ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 8.74 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 17.58 லட்சம் ஆகும். காம்பக்ட் எஸ்யூவி காரான இந்த கார் 1199 சிசி திறன் கொண்டது ஆகும். பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி-யால் ஓடும் ஆற்றல் கொண்டது.
மேலே கூறிய 6 கார்களும் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் கார் ஆகும்.






















