உடலில் மற்ற பாகங்களை காட்டிலும் இதயமும், மூளையும் மிக மிக முக்கியமானது ஆகும்.
இன்று இதயம் சார்ந்த பிரச்சினைகள் பொதுமக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இதயத்தில் ஏற்படும் சிறு பாதிப்பு மொத்த வாழ்க்கையும் சீர்குலைக்கும்.
தினசரி வாழ்க்கையில் பச்சை காய்கறிகள், கீரைகள் அடங்கிய சத்தான உணவைச் சாப்பிட வேண்டும்.
தினசரி உடற்பயிற்சி தேவை ஆகும். குறைந்தபட்சம் 30 நிமிடம் நடைபயணம் மற்றும் வேகமாக ஓடுவது அவசியம் ஆகும்.
இதய பாதிப்பிற்கு மன அழுத்தமும் ஒருவித காரணம். மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
இதயம் மட்டுமின்றி உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் கெடுப்பதில் மது மற்றும் புகையிலை பங்கு வகிக்கிறது.
அளவுக்கு அதிகமான உடல் எடை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு வழக்கமான உடற்பயிற்சி அவசியம்
இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டைத் தீர்மானிக்கும் உப்பு மற்றும் சர்க்கரையை சரியான அளவு மட்டுமே எடுக்க வேண்டும்.
நிம்மதியான உறக்கம் அனைவருக்கும் அவசியம். 7 முதல் 8 மணி நேரம் ஆழமான தூக்கம் அனைவருக்கும் அவசியம் ஆகும்.