மேலும் அறிய

Gold Rate Nov.26th: இந்த தங்கத்த என்னதான் பண்றது.? 2 நாட்களில் ரூ.2,240 விலை உயர்வு; இன்றைய விலை என்ன.?

தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் 93 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களில் தாறுமாறாக விலை உயர்ந்து, தற்போது மீண்டும் 95 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்றைய விலை என்ன.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அன்றாடம் இருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் 93 ஆயிரத்திற்குள்ளாகவே இருந்து வந்தது. ஆனால், வார இறுதியில் 93 ஆயிரத்தை தாண்டி, பின் திங்கட்கிழமை விலை குறைந்தது. ஆனால் கடந்த 2 நாட்களில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்து, தற்போது 95 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று சவரனுக்கு 640 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் குறைந்து மீண்டும் விலை உயர்ந்த தங்கம்

கடந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 17-ம் தேதி கிராம் 11,540 ரூபாய்க்கும், சவரன் 92,320 ரூபாய்க்கும் விற்கப்பட்ட தங்கம், வெள்ளிக்கிழமை, அதாவது 21-ம் தேதி வரை 93,000 ரூபாய்க்குள்ளாகவே சற்று கூடுவதும், குறைவதுமாய் இருந்து வந்தது. 

இந்நிலையில், வார இறுதியில், 22 மற்றும் 23-ம் தேதிகளில் 93 ஆயிரத்தை கடந்தது. அதன்படி, ஒரு கிராம் 11,630 ரூபாய்க்கும், ஒரு சவரன் 93,040 ரூபாய்க்கும் விற்பனையாது.

பின்னர், இந்த வார தொடக்கத்தில், அதாவது 24-ம் தேதி சவரனுக்கு 880 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 11,520 ரூபாய்க்கும், ஒரு சவரன் 92,160 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 25-ம் தேதியான நேற்று அதிரடியாக சவரனுக்கு 1,600 ரூபாய் விலை உயர்ந்தது.

அதன்படி, ஒரு கிராம் 11,720 ரூபாய்க்கும், ஒரு சவரன் 93,760 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை

அதன்படி, தங்கம் இன்று கிராமிற்கு 80 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 94,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதன்படி, நேற்றும், இன்றும் மட்டுமே தங்கத்தின் விலை சவரனுக்கு 2,240 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலையும் இன்று உயர்வு

வெள்ளியின் விலை படிப்படியாக குறைந்து 171 ரூபாயை எட்டிய நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் கிராமிற்க 5 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 17-ம் தேதி 173 ரூபாயாக இருந்த ஒரு கிராம் வெள்ளி, விலை கூடுவதும் குறைவதுமாய் இருந்து, வார இறுதியில், அதாவது 22, 23-ம் தேதிகளில் 172 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில், 24-ம் தேதி மேலும் ஒரு ரூபாய் குறைந்து, கிராம் 171 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், 25-ம் தேதியான நேற்று கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 174 ரூபாய்க்கு சென்றது.

தொடர்ந்து, இன்றும் கிராமிற்கு 2 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 176 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
How To Save ₹100 Every Day: ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
LIVE | Kerala Lottery Result Today (03.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி முடிவுகள் இன்று- உங்கள் அதிர்ஷ்ட எண் வென்றதா?
LIVE | Kerala Lottery Result Today (03.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி முடிவுகள் இன்று- உங்கள் அதிர்ஷ்ட எண் வென்றதா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!

Embed widget