BMW X3: டீசல் Variant-இல் மிரட்டும் புதிய பி.எம்.டபிள்யூ. கார்.. எப்படியிருக்குன்னு தெரிஞ்சிக்கோங்க..
BMW X3: டீசல் வேரியண்டில் மிரட்டும் புதிய பி.எம்.டவுள்யூ. X3 இன் ரிவ்யூ..
எரிபொருள் விலை உயர்வுகள், நீண்ட தூரம் வாகனம் ஓட்டுவதற்கு பெட்ரோலை விட டீசல் சிறந்ததா என்ற புதிய கேள்வியை எழுப்பியுள்ளது. டீசல் வழங்கும் சிறந்த எரிபொருள் திறன் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். அப்படியிருக்க, புதிய பி.எம்.டபுல்யூ. எக்ஸ்.3 (BMW X3) டீசல் வர்ஷர் இருக்கிறது. இது எஸ்.யூ.வி. ரக கார் என்பதால் கூடுதல் சிறப்புதான். புதிய X3 எஞ்சின் 190bhp மற்றும் 400Nm 8-ஸ்பீடு ஆட்டோமேடிக்க க்யர் ரகத்தை கொண்டுள்ளது.
மைலேஜ் பொறுத்தவரையில் பி.எம்.டபுல்யூ X3 டீசல் ரக கார், 1000 கிமீ அளவில் தருகிறது. அதாவது நீங்கள் வெகு தூரம் சென்றாலும், டீசல் தீர்ந்துப் போகாது.. இஞ்சின் சத்தமில்லாமல் எளிதாக பயணிக்கலாம். நிச்சயம் டீசல் எஞ்ஜின் சிறந்த தேர்வாக உள்ளது. குறிப்பாக லக்கேஜ்/பயணிகளுடன். 0-100 km/h 7.9 வினாடிகள் என்றால் X3 டீசல் மிகவும் விரைவாக இருக்கும். அதே சமயம் பாரம்பரிய பி.எம்.டபுல்யூ பாணியில், 8-ஸ்பீடு ஆட்டோமெடிக் க்யர், நிலையான சஸ்பென்சன் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 213 கிமீ/மணி வேகத்தில் பயணிக்கும் எஸ்யூவி ஆகும். டீசல் சிக்கனமும் இதில் சிறப்புதான்.
ஹார்டு டிரைவிங் மூலம் 14/16 kmpl செயல்திறன் என்பது, டேங்க் நிரப்பட்டால், உங்களுக்கு வழங்கும் மைலேஜ் 1000 கிமீ. இது பெட்ரோல் வேரியண்டை விட சிறந்தது என்பதை நிரூபிக்கிறது. உயர்வால், நீங்கள் அதிக பயணம் செய்தால், பெட்ரோலை விட டீசல் வேரியண்ட் கார்கள் பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஸ்டைலிஷ் கிரில், புதிய அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் முன்பக்க பம்ப்பர்கள் உள்ளன. அதே நேரத்தில் ஒரு பெரிய 12.3 அங்குல தொடுதிரையும் இருக்கிறது. X3 டீசல் விலை ரூ. 65.50 லட்சம்.
ஒட்டுமொத்தமாக, X3 போன்ற பெரிய எஸ்.யூ.வி. வகைகளில், நீண்ட பயணங்களுக்கு ஏற்றது.
Tea price hike: அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை.. ஏப்ரல் 6-ம் தேதிக்கு பிறகு டீ விலை உயருமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்