Royal Enfield Scram 411 : மார்ச் 15-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411
இந்திய சந்தையில் ஸ்க்ராம் 411 (Royal Enfield Scram 411) பைக் வரும் 15 ஆம் தேதியிலிருந்து விற்பனைக்கு வரும் என ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் குட் நியூஸ் அறிவித்துள்ளது.
இந்திய சந்தையில் ஸ்க்ராம் 411 (Royal Enfield Scram 411) பைக் வரும் 15 ஆம் தேதியிலிருந்து விற்பனைக்கு வரும் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பைக் பிரியர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு மாடல் ஸ்க்ராம் 411 பைக் கடந்த பிப்ரவரி மாதமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இது பற்றிய அறிவிப்பு தாமதமாகியது. இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411-இன் மாடல் விற்பனை அடுத்த வாரத்தில் தொடங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் (Royal Enfield Himalayan) பைக் மிகவும் பிரபலமான ஒன்று. ராயல் என்ஃபீல்டு பைக் வாங்குவர்களின் தேர்வாக இருப்பது பெரும்பாலும் ஹிமாலயன் மாடல்தான். இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகச்சிறந்த அட்வென்ஜர் டூரர் (Adventure Tourer) ரக பைக்குகளில் ஒன்றாகும். பயணங்களை விரும்பவர்களின் சாய்ஸ் நிச்சயமாக ஹிமாலயன் பைக்தான். பயணதிற்கு ஏற்றதாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.
தேர்வுகளில் ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 மாடல் கருப்பு நிறத்துடன் மெரூன், மஞ்சள் நிற ஹைலைட்கள் மற்றும் வெள்ளை நிறத்துடன் சிவப்பு மற்றும் நீல நிற ஹைலைட்கள் என இரண்டுவிதமான வண்ணங்களில் வருகிறது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் வழங்கப்பட்டுள்ள அதே கியர் பாக்ஸ்தான், புத்தம் புதிய ஸ்க்ராம் 411 பைக்கிலும் வழங்கப்படும்.
ஸ்க்ராம் 411 மாடல் புதிய 650சிசி பைக் நீண்ட பயணம் மேற்கொள்ள சிறந்ததாக இருக்கும். ஒரு ஸ்க்ராம்ப்ளர் மற்றும் அதனுடன் 24bhp இன்ஜின் உட்பட பல்வேறு புதிய அம்சங்களுட இந்த மாடல் இருக்கும்.
இது சிறிய சக்கரங்கள் மற்றும் லக்கேஜ் ரேக்குகள் இல்லாமல் இருக்கும். இந்த பைக் 200 மிமீ அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கலாம். ஸ்போட்டிவான பைக் மாடல் இது. 2 லட்சம் ஆரம்ப விலையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரத்தில், இன்னும் கூடுதலான தகவல்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 6 பைக் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதில், 2 ஸ்ட்ரீட் ரக பைக்குகள், 4 க்ரூஸர் ரக பைக்குகள் ஆகும். தரம், அட்வென்ச்ஸரஸான திறன்களை கொண்டுள்ளதால் ராயல் என்ஃபீல்டு பைக் அனைவரின் கனவு பைக்காக இருக்கிறது.
Ready..Set..15.03.2022https://t.co/S54WBGelgk#RoyalEnfield #RidePure #PureMotorcycling #ReadySet pic.twitter.com/Kwf1HN74i5
— Royal Enfield (@royalenfield) March 7, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

