Royal Enfield : இவ்வளவு கம்மி விலையில் ராயல் என்ஃபீல்ட் பைக்கா? இளசுகளை கவர மாஸ்டர் ப்ளான்!
வாகன சந்தையில் பஜாஜ் பல்சர் 2400, TVS அப்பாச்சி 160 மற்றும் யமஹாவின் FZ25 போன்ற பைக்குகளுடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்ட் :
எத்தனை தலைமுறை மாறினாலும் சரி ! பைக் பிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் ஒரே பைக் ராயல் என்ஃபீல்ட். குறிப்பாக இந்தியாவில் இதற்கான மவுசு அதிகம் . அதற்கு ஏற்ற மாதிரி அந்த நிறுவனமும் புதிய புதிய மாடல் மோட்டர் பைக்குகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது.
View this post on Instagram
அடுத்த அறிமுகம்!
ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் அடிப்படையிலான ஸ்க்ராம் 411 பைக் மாடல்களை அந்நிறுவனம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இந்த நிலையில் ராயல் என்ஃபீல்டு தனது மிக மலிவு விலையில் உள்ள ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை விரைவில் இந்திய சந்தையில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் அடுத்த மாதம் வெளியாகும் என சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பைக் மாடல் குறித்த Spy shots வீடியோ வெளியாகி தற்போது எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.
View this post on Instagram
ஹண்டர் 350 :
ஹண்டர் 350 மோட்டார் சைக்கிளின் தோற்றத்தைப் பொறுத்தவரை வழக்கமான ரெட்ரோ-பாணி வடிவமைப்புதான் என்றாலும் கூட சில மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்டுள்ளது. அதனால் முந்தைய மாடல்களில் இருந்து தனித்துவம் பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. தற்போது வெளியாகியுள்ள ராயல் என்ஃபீல்டின் Spy shots வீடியோவின் அடிப்படையில் ரவுண்ட் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், டர்ன் சிக்னல்கள் மற்றும் கண்ணாடிகள் இருப்பதை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மலிவு விலை பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முந்தைய மாடல்களின் சில வசதிகள் கிடைக்காமலும் போகலாம்.வாங்குபவர்கள் ராயல் என்ஃபீல்டின் டிரிப்பர் நேவிகேஷன் பாட் போன்ற செயல்பாடுகளை விருப்பத்தின் அடிப்படையில் பெறலாம்.
விலை :
ராயல் என்ஃபீல் நிறுவனம் ஹண்டர் 350 மாடலுக்கான விலை குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. என்றாலும் கூட இது நிறுவனத்தின் மிகவும் மலிவு சலுகையாக இருப்பதால், ஹண்டர் 350 ரூ. 1.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் (எக்ஸ்-ஷோரூம்) வரலாம்.ஹண்டர் 350 ஆனது மோட்டார் வாகன சந்தையில் பஜாஜ் பல்சர் 2400, TVS அப்பாச்சி 160 மற்றும் யமஹாவின் FZ25 போன்ற பைக்குகளுடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.