Royal Enfield Himalayan: அசத்தலான ஹிமாலயன் 450 மாடல் - முழு விவரங்களையும் வெளியிட்டது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்
Royal Enfield Himalayan: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ஹிமாலயன் 450 மாடலின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
Royal Enfield Himalayan: ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ஹிமாலயன் 450 மாடல், வரும் 7ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஹிமாலயன் 450 மாடல்:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் 450 மாடலின் விவரங்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள், கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்த புதிய அட்வென்ச்சர் பைக் வரும் 7ம் தேதி இந்திய ஆட்டோமொபை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் வெளியீட்டிற்கு முன்னதாகவே, புதிய ஹிமாலயன் 450 மாடல் மோட்டார்சைக்கிளின் வழங்கப்படும் அனைத்து முக்கிய விவரங்களையும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வேரியண்ட் விவரங்கள்:
ராயல் என்ஃபீல்ட் புதிய ஹிமாலயன் மாடல் பேஸ், பாஸ் மற்றும் சம்மிட் ஆகிய மூன்று வகைகளில் வழங்குகிறது. தொடக்க வேர்யண்ட் ஒற்றை காசா பிரவுன் நிறத்தில் கிடைக்கிறது. அதே சமயம் மிட்-ஸ்பெக் பாஸ் மாறுபாடு ஸ்லேட் ஹிமாலயன் சால்ட் மற்றும் ஸ்லேட் பாப்பி ப்ளூ ஆகிய நிறங்களில் வருகிறது. டாப்-ஸ்பெக் ஆன சம்மிட் டிரிம் ஹான்லே பிளாக் மற்றும் கேமட் ஒயிட் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
இன்ஜின் விவரங்கள்:
புதிய ஹிமாலயன் 450யின் மிக முக்கிய மாற்றமே, அதில் இடம்பெற்றுள்ள 452சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் தான். ஷெர்பா 450 என அழைக்கப்படும் இந்த புதிய மோட்டார் 8,000 ஆர்பிஎம்மில் 40 பிஎஸ் ஆற்றலையும், 6,500 ஆர்பிஎம்மில் 40 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழியாக புதிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹிமாலயன் 450-ன் வடிவமைப்பு:
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450க்குக் கீழே ஒரு புதிய ஸ்டீல் ட்வின்-ஸ்பார் ட்யூபுலர் ஃபிரேம், இரட்டை பக்க ஸ்விங்கார்ம் உள்ளது. பிரெக்கிங்கிற்காக இரண்டு சக்கரங்களிலும் ரோட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் 21-இன்ச் மற்றும் பின்புறம் 17-இன்ச்சிலான வயர்-ஸ்போக் சக்கரங்களில் டியூப்லெஸ் டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று இருக்கை விருப்பங்கள் வழங்கப்படுகிறது. நிலையான இருக்கை உயரம் 825 மிமீ, குறைந்த இருக்கை உயரம் 825 மிமீ மற்றும் உயரமான இருக்கை உயரம் 845 மிமீ ஆகும். கூடுதலாக, இது இருக்கை உயரத்தை 855 மிமீக்கு தள்ளும் ரேலி கிட் உடன் வருகிறது. வீல்பேஸ் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் முறையே 45 மிமீ மற்றும் 10 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. 196 கிலோ எடையிலான இந்த வாகனத்தில் அதிகபட்சமாக, 17 லிட்டர் எரிபொருளை நிரப்பலாம்.
சிறப்பம்சங்கள்:
புதிய ஹிமாலயன் 450 நிச்சயமாக ராயல் என்ஃபீல்ட் வழங்கும் மிகுந்த சிறப்பம்சங்கள் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும். முழு LED முகப்பு விளக்கு மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. மிகப்பெரிய சிறப்பம்சமாக முழு-டிஜிட்டல் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கூகுள் மேப்ஸ் மூலம் இயங்கும் இன்-பில்ட் நேவிகேஷன், புளூடூத் வழியாக ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு மற்றும் மியூசிக் பிளேபேக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சி-டைப் USB சார்ஜிங் போர்ட், இரண்டு சவாரி ரைட் மோட்கள் உள்ளன. நவம்பர் 7ம் தேதி இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தும்போது, விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.