(Source: Poll of Polls)
Bullet 350 Price Hike: புல்லட் 350 கொடுத்த ஷாக்.. ராயல் என்ஃபீல்ட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! புதிய விலை எவ்வளவு தெரியுமா?
Royal Enfield Bullet 350 Price Hike: ராயல் என்ஃபீல்டின் பிரபல 350cc பைக் சீரிஸான புல்லட் 350 பைக்குகளின் விலை தற்போது ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

350cc பைக்குகள் பிரிவில் பல புதிய மாடல்கள் பல அறிமுகமாகி வந்தாலும் அதன் நடுவிலும் ராயல் என்ஃபீல்டின் புல்லட் 350 பைக்கிற்கான மவுசு இன்னும் குறைவடையாமல் அப்படியே உயர்ந்தபடியே உள்ளது. இந்த நிலையில் தற்போது புல்லட் 350-இன் விலையை ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை உயர்த்தியுள்ளது.
விலையேறிய RE 350 சிசி:
தற்போதைய புல்லட் 350 மாடல், J தளத்தின் அடிப்படையில் 2023-ல் அறிமுகமாகியுள்ளது. எனினும், புல்லட் வரலாற்றின் ஆதாரமான GS 350 மாடல் முதன்முதலில் 1932-ல் அறிமுகமாகி, இன்று வரை தொடர்ச்சியாக உற்பத்தியில் உள்ள உலகின் பழமையான மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாகும்.
ராயல் என்ஃபீல்டின் பிரபல 350cc பைக் சீரிஸான புல்லட் 350 பைக்குகளின் விலை தற்போது ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பல்வேறு மாடல்களில் நடைமுறைக்கு வந்துள்ளது, மேலும் இந்த விலை உயர்வு சில மாடல்களில் விலை மாற்றங்களை வாடிக்கையாளர்களுக்கு எதிர்பாராத நன்மையாக கொடுத்துள்ளது.
என்னென்ன கலர்கள் விலையேறின:
பட்டாலியன் பிளாக்:
பட்டாலியன் பிளாக் வகை கடந்த 2023 செப்டம்பரில் அறிமுகமானது.இந்த சிறப்பு என்னவென்றால் ரெட்ரோ லூக், மேம்பட்ட ஃபினிஷ் மற்றும் தனித்துவமான டிசைன் இதனை வாங்க வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. தற்போதைய விலை: ₹ 1.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது முந்தைய விலை ₹1.74 லட்சம் என்பதிலிருந்து ரூ.1,000 உயர்ந்து விற்கப்படும்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பட்டாலியன் பிளாக் இப்போது மிலிட்டரி பிளாக் மற்றும் மிலிட்டரி ரெட் மாடல்களைவிட குறைந்த விலையில் கிடைக்கிறது. விலையேற்றத்துக்கு முன்னர் மற்ற இரண்சு கலர்களை விட பட்டாலியன் பிளாக் அதிக விலையில் விற்பனையானது.
மிலிட்டரி பிளாக் மற்றும் ரெட்:
மிலிட்டரி பிளாக் மற்றும் ரெட் தற்போதைய விலை ₹ 1.76 லட்சத்துக்கு விற்பனையாகிறது, இது முந்தைய விலையான ₹ 1.74 லட்சத்தை விட ₹2,000 அதிகமாக விற்கப்படுகிறது.
இதன் மூலம், இந்த இரண்டு மாடல்களும் இப்போது பட்டாலியன் பிளாக்கை விட அதிக விலையில் விற்கப்படுகின்றன.
ஸ்டாண்டர்ட் வகைகள்
ஸ்டாண்டர்ட் வகை மாடல்கள் தான் ₹3000 வரை விலையேறியுள்ளன, ஸ்டாண்டர்ட் பிளாக் மற்றும் ஸ்டாண்டர்ட் மெரூன் புதிய விலையான ₹ 2.00 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. இது பழைய விலையான ₹ 1.97 லட்சத்தை காட்டிலும் ரூ 3000 அதிகமாகும்
டாப் மாடல் – பிளாக் கோல்ட்
டாப் மாடலான பிளாக் கோல்ட் தற்போது ₹ 2.18 லட்சத்துக்கும், இது பழைய விலையான ₹ 2.16 லட்சத்தை காட்டிலும் ₹2,000 ரூபாய் அதிகமாகும்
| மாடல் | பழைய விலை (₹ லட்சம்) | புதிய விலை (₹ லட்சம்) | விலை உயர்வு |
| பட்டாலியன் பிளாக் | 1.74 | 1.75 | ₹1,000 |
| மிலிட்டரி பிளாக் / ரெட் | 1.74 | 1.76 | ₹2,000 |
| ஸ்டாண்டர்ட் பிளாக் / மெரூன் | 1.97 | 2.00 | ₹3,000 |
| பிளாக் கோல்ட் (டாப் மாடல்) | 2.16 | 2.18 | ₹2,000 |
புதிய அப்டேட்
ராயல் என்ஃபீல்டின் புகழ்பெற்ற புல்லட் 350 விரைவில் புதிய slip-assist clutch வசதியுடன் மேம்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டா, ட்ரையம்ப் போன்ற பிரீமியம் பைக் பிராண்டுகளுடன் போட்டியிடும் வகையில், இந்த தொழில்நுட்ப மேம்படுத்தல் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த அம்சம் ஏற்கனவே அவை வழங்கும் சாகச அனுபவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.






















