PURE EV EPluto 7g: சிங்கிள் சார்ஜில் 150 கி.மீட்டர்.. EV EPluto 7G இ ஸ்கூட்டரின் விலையும், தரமும் எப்படி? ஓர் அலசல்
EPluto 7g Electric Scooter: ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கி.மீட்டர் வேகம் செல்லும் Pure EV EPluto 7Gஇ ஸ்கூட்டரின் விலை, தரம் பற்றி கீழே காணலாம்.

EPluto 7g Electric Scooter: இந்திய சாலையில் தற்போது மின்சார வாகனங்களின் ஆதிக்கமே அதிகளவு உள்ளது. குறிப்பாக, பெட்ரோலில் ஓடும் இரு சக்கர வாகனங்களை காட்டிலும் மின்சார இரு சக்கர வாகனங்களையே மக்கள் அதிகளவு விரும்புகிறார்கள்.
PURE EV EPluto7G:
இந்தியாவில் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் உள்ள வளர்ந்து வரும் நிறுவனம் ப்யூர் ஈவி நிறுவனம். இவர்களின் முக்கியமான தயாரிப்பாக இருப்பது PURE EV EPluto. இந்த இ ஸ்கூட்டரின் விலை, தரம், சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம்.

EPluto 7ஜி ஸ்கூட்டரான இந்த ஸ்கூட்டர் இந்தியாவின் ஹைதரபாத்தில் வடிவமைக்கப்பட்டது. ஸ்டைல், மைலேஜ் மற்றும் எடை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து இந்த இ ஸ்கூட்டரை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இது மொத்தம் 4 வேரியண்ட்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.
விலை என்ன?
EPluto 7G இ ஸ்கூட்டரானது CX, Standard, Pro மற்றும் Max ஆகிய 4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடக்க விலை ரூபாய் 77 ஆயிரத்து 999-க்கு விற்கப்படுகிறது. ஆன் ரோட் விலையாக ரூபாய் 84 ஆயிரத்து 287க்கு விற்கப்படுகிறது. இதன் டாப் வேரியண்டின் விலை ரூபாய் 1 லட்சத்து 14 ஆயிரத்து 999 ஆகும். ஆன் ரோட் விலையாக ரூபாய் 1 லட்சத்து 22 ஆயிரத்து 33க்கு விற்கப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டர் 13 வண்ணங்களில் விற்கப்படுகிறது.
இதன் முகப்பு விளக்குகள் எல்இடி விளக்குகள் ஆகும். மிகவும் எடை குறைவான கட்டமைப்பை கொண்டுள்ளது. இது நகரங்களில் எந்த சிரமமுமின்றி ஓட்டுவதற்கு மட்டுமின்றி, இளைஞர்களை கவரும் வகையிலும் இதன் வெளிப்புறத் தோற்றத்தை வடிவமைத்துள்ளனர்.
மைலேஜ் எப்படி?
EPluto CX வேரியண்ட் 101 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 47 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. இது 1.8 கிலோவாட் பேட்டரி கொண்டது. EPluto Standard 120 கி.மீட்டர் வேகத்தில் மைலேஜ் தருகிறது. அதிகபட்சமாக 60 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. இது 2.5 கிலோவாட் பேட்டரி காெண்டது.

EPluto 7G Pro வேரியண்ட் 150 கி.மீட்டர் மைலேஜ் தருகிறது. மணிக்க 60 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும். இந்த இ ஸ்கூட்டர் 3 கிலோ வாட் பேட்டரி கொண்டது. EPluto 7G Max 150 கி.மீட்டர் மைலேஜ் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 60 கி.மீட்டர் வரை வேகம் செல்லும் ஆற்றல் கொண்டது. இது 3.5 கிலோவாட் பேட்டரி கொண்டது ஆகும்.
சார்ஜிங் நேரம்:
EPluto 7G CX மற்றும் Standard இ ஸ்கூட்டர்கள் ஒரு முறை சார்ஜ் செய்ய 4 மணி நேரம் வரை ஆகிறது. EPluto 7G Pro மற்றும் EPluto 7G Max ஆகிய இரண்டு வேரியண்ட்களும் ஒரு முறை சார்ஜ் செய் 6 மணி நேரம் ஆகிறது. இந்த இ ஸ்கூட்டரின் மொத்த எடை 76 கிலோ ஆகும்.
இதன் அதிகபட்சமாக செல்லும் ஆற்றல் 60 கி.மீட்டராக மட்டுமே இருப்பது இதன் மைனஸாக உள்ளது. அதேபோல சார்ஜ் ஆவதற்கு 4 மணி நேரம் எடுத்துக்கொள்வதும் வாடிக்கையார்களுக்கு சிரமமாக உள்ளது. இதன் எடை குறைவாக இருப்பது வாடிக்கையாளர்களுக்கு பலமாக உள்ளது. மேலும், மைலேஜ் 120 கி.மீட்டர் வரை இருப்பதும் வாடிக்கையாளர்களை கவர்கிறது.





















