Ola S1 Pro: சிங்கிள் சார்ஜில் 320 கிலோமீட்டர் மைலேஜ்.. Ola S1 Pro விலை, தரமும் எப்படி?
ஓலா நிறுவனத்தின் இ ஸ்கூட்டரான Ola S1 Pro ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் தற்போது இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக இ ஸ்கூட்டர்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் முன்னணி இ ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது ஓலா நிறுவனம். ஓலா நிறுவனத்தின் OLA S1 Pro இ ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், தரம் குறித்து கீழே விரிவாக காணலாம்.
இந்த OLA S1 Pro இ ஸ்கூட்டர் மொத்தம் 5 வேரியண்ட்களில் உள்ளது.
1. S1 Pro:
ஓலா நிறுவனத்தின் S1 Pro இந்த வேரியண்ட் 3 கிலோ வாட் பேட்டரியை கொண்டது. 58 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 6.5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 176 கிலோ மீட்டர் மைலேஜ் எடுத்துக் கொள்கிறது. வெள்ளை, கருப்பு, நீலம், சிவப்பு உள்பட 6 நிறங்களில் காணப்படுகிறது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 48 ஆயிரத்து 225 ஆகும். அதிகபட்சமாக 117 கிலோ மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது.
2. S1 Pro Sport:
எஸ் 1 ப்ரோவின் மற்றொரு வேரியண்ட் S1 Pro Sport ஆகும். இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 56 ஆயிரத்து 684 ஆகும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கிலோ மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 152 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. 5.2 கிலோவாட் பேட்டரி கொண்டது. 71 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. சிவப்பு நிறத்தில் மட்டுமே இந்த வாகனம் உள்ளது.
3. S1 Pro ( 4 கிலோவாட்)
S1 Proவின் இந்த வேரியண்ட் 4 கிலோவாட் பேட்டரியை கொண்டது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 69 ஆயிரத்து 448 ஆகும். இது ஒரு முறை சார்ஜ் செய்தாலே 242 கிலோ மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. 58 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 6.5 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. வெள்ளை, நீலம், கருப்பு, சிவப்பு உள்பட 6 வண்ணங்களில் உள்ளது.
4. S1 Pro Plus:
ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோவின் மற்றொரு வேரியண்ட் S1 Pro Plus. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 79 ஆயிரத்து 714 ஆகும். 4 கிலோவாட் பேட்டரியை கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 242 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 128 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 58 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதை சார்ஜ் செய்வதற்கு 6.5 மணி நேரம் ஆகிறது. கருப்பு, சிவப்பு, நீலம், வெள்ளை உள்பட 6 வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.
5. S1 Pro Plus:
இந்த S1 Pro Plus வேரியண்ட் 5.2 கிலோ வாட் பேட்டரியை கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இது 320 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 141 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. 58 என்எம் டார்க் இழுதிறன் காெண்டது. ஒரு முறை சார்ஜ் செய்ய 6.5 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. கருப்பு, வெள்ளை, கருநீலம் உள்பட 6 வண்ணங்களில் உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 90 ஆயிரத்து 616 ஆகும்.
இந்த வாகனம் 109 கிலோ எடை கொண்டது. சிபிஎஸ், டிஸ்க் ப்ரேக் வசதி உள்ளது. 2 பிஸ்டன் காலிபர் உள்ளது. 749 மில்லி மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மி.மீட்டர் கொண்டது. பேட்டரி வாரண்டி 3 வருடங்கள் அல்லது 50 ஆயிரம் கிலோ மீட்டர் வரை கொண்டது.
மோட்டார் வாரண்டி 3 வருடங்கள் உள்ளது. 7 இன்ச் டிஜிட்டல் டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. சார்ஜிங் வசதி கொண்டது. கீலெஸ் வசதியும் உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. ஸ்டார்ட் ஸ்டாப் வசதி கொண்டது. மொபைல் ஆஃப் மானிட்டர் வசதியும் உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது. லைவ் லோகெஷன் வசதியும் உள்ளது.





















