ஒரு முறை சார்ஜ் செய்தால் 579 கி.மீட்டர்.. OLA களமிறக்கும் Roadster Pro இ பைக் - விற்பனை எப்போ?
ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள ரோட்ஸ்டர் ப்ரோ இ பைக் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 579 கி.மீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும்.

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வகையில் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளும் அதற்கே முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமாக ஓலா உள்ளது. இ ஸ்கூட்டர் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வரும் நிறுவனமாக ஓலா உள்ளது. ஸ்கூட்டர் மட்டுமின்றி இளைஞர்களை கவரும் வகையில் பைக்குள் தயாரிப்பிலும் ஓலா இறங்கியுள்ளது,
அந்த வகையில் ஓலா நிறுவனத்தின் தயாரிப்பே ரோட்ஸ்டர். இந்த இ பைக்கில் Roadster, Roadster x+, Roadster x மற்றும் Roadster Pro ஆகிய நான்கு மாடல்கள் உள்ளது.
1. Roadster Pro
இதில் Roadster Pro இ பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் 579 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். இந்த இ பைக் மணிக்கு 194 கி.மீட்டர் வரை வேகம் செல்லும் திறன் கொண்டது ஆகும். 0-வில் இருந்து 40 கி.மீட்டர் வேகத்தை 1.2 நொடிகளில் எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இ பைக் அடுத்தாண்டு ஜனவரி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த இ - பைக்கின் விலை ரூபாய் 2.50 லட்சம் ஆகும். இந்த பைக்கில் 16 கிலோ வாட் பொருத்தப்பட்டுள்ளது.
இதே பைக்கில் 8 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்ட பைக் உள்ளது. அந்த பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் 316 கி.மீட்டர் வர செல்லலாம். மணிக்கு 154 கி.மீட்டர் வரை செல்லும் வேகம் கொண்டது. இந்த இ பைக்கின் விலை ரூ 1.99 லட்சம் ஆகும். இந்த இ பைக்கும் அடுத்தாண்டு ஜனவரி முதல் விற்பனைக்கு வருகிறது.
2. Roadster:
ரோட்ஸ்டர் இ பைக்கில் 3.5 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் 151 கி.மீட்டர் தூரம் செல்லும் ஆற்றல் கொண்டது. மணிக்கு 116 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 0வில் இருந்து 40 கி.மீட்டர் வேகத்தை 2.4 விநாடிகளில் எட்டும். தற்போது இந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக்கின் விலை ரூ 1.05 லட்சம் ஆகும்.
இதே இ பைக்கில் 4.5 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்ட பைக் உள்ளது. இந்த பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் 190 கி.மீட்டர் தொலைவிற்கு செல்லும் திறன் கொண்டது. மணிக்கு 126 கி.மீ்ட்டர் வேகம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 40 கி.மீட்டர் வேகத்தை 2.2 விநாடிகளில் எட்டிவிடும். இந்த பைக்கின் விலை ரூ. 1.20 லட்சம் ஆகும்.
இந்த இ பைக்கில் 6 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தாலே 248 கி.மீட்டர் தொலைவிற்குச் செல்லும். இது மணிக்கு 126 கி.மீட்டர் வேகத்திற்கு செல்லும். 40 கி.மீட்டர் வேகத்தை 2.2 நொடியில் எட்டிவிடும். இதன் விலை ரூ. 1.40 லட்சம் ஆகும்.
3. Roadster x:
இந்த Roadster x இ பைக்கில் 2.5 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கி.மீட்டர் தொலைவிற்குச் செல்லும். மணிக்கு 105 கி.மீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டது. 40 கி.மீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும். இதன் விலை ரூபாய் 1 லட்சம் ஆகும். இது வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வருகிறது.
இதே Roadster x பைக்கில் 3.5 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்ட மாடலும் உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தாலே 196 கி.மீட்டர் செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். மணிக்கு 118 கி.மீட்டர் வேகம் செல்லும் திறனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 40 கி.மீட்டர் வேகத்தை 3.1 நொடிகளில் எட்டும். இதன் விலை ரூ 1.10 லட்சம் ஆகும்.
இந்த மாடலில் 4.5 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ பைக் உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தாலே 252 கி.மீட்டர் தொலைவு வரை பயணிக்கலாம். மணிக்கு 118 கி.மீட்டர் வேகத்திற்குச் செல்லும். 3.1 நொடிகளில் 40 கி.மீட்டர் வேகத்தை எட்டும். இதன் விலை ரூபாய் 1.25 லட்சம் ஆகும். இந்த இ பைக்கும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும்.
4. Roadster x+
ஓலாவின் Roadster x+ இ பைக் 2 மாடல்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4.5 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்ட Roadster x+ இ பைக்கில் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 252 கி.மீட்டர் தொலைவு பயணம் செய்யலாம். 40 கி.மீட்டர் வேகத்தை எட்ட 2.7 விநாடிகள் ஆகும். மணிக்கு 125 கி.மீட்டர் செல்லும் திறன் காெண்டது ஆகும். இந்த இ பைக் அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூபாய் 1.30 லட்சம் ஆகும்.
இந்த மாடல் Roadster x+ இ பைக்கில் 9.1 கிலோ வாட் பேடட்ரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 1.90 லட்சம் ஆகும். இது ஒரு முறை சார்ஜ் செய்தாலே 501 கி.மீட்டர் வரை செல்லும். 2.7 நொடிகளில் 40 கி.மீட்டர் தொலைவிற்குச் செல்லும். மணிக்கு 125 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் காெண்டது. இந்த இ பைக்கும் அடுத்த மாதம் விற்பனைக்கு வர உள்ளது.





















