Ola Electric Scooter: தொட்டதெல்லாம் பிரச்னைதான்.. ஆனாலும் இந்தியாவில் நம்பர் ஒன்.! சாதனை படைத்த ஓலா.!
அவ்வபோது பற்றி எரிவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த நிலையிலும் இந்தியாவின் மின் வாகன சந்தையில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறது ஓலா நிறுவனம்.
ஓலா வாகனங்கள் அவ்வபோது பற்றி எரிவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த நிலையிலும் இந்தியாவின் மின் வாகன சந்தையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்தைய புள்ளி விவரப்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 12,683 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது ஓலா நிறுவனம். இது கடந்த மார்ச் மாதத்தை விட 39 சதவீதம் அதிகமாகும். தொழில்நுட்பக் கோளாறு, திடீரென்று பற்றி எரிவது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த போதும் ஓலா நிறுவனத்தின் வாகன விற்பனை உயர்ந்திருக்கிறது. பேட்டரியின் தரத்தை பரிசோதிப்பதற்காக ஓலா விற்றிருந்த 1,441 எஸ் ஒன் ப்ரோ வாகனத்தை திரும்பப் பெற்றிருந்த நிலையிலும் இந்த வளர்ச்சியை பெற்றிருக்கிறது ஓலா.
Ola Bike Owner blasted his Own Bike! pic.twitter.com/eqoV2Gi9Lb
— Tech Satire (@techsatire) April 27, 2022
Range/battery showing 45kms came to hault within 200meters and my OLA stopped mid road mid night at 11.00p.m. Helpline phone also got disconnected. Real range of OLA electric is 40-50 max. @bhash @OlaElectric @jagograhakjago Is there something serious action,OLA is going to take? pic.twitter.com/Mq4vpI5BHZ
— Saket (@Saket98598785) April 24, 2022
கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்டு டிசம்பரில் விற்பனைக்கு வந்த ஓலா மின்சார வாகனம் மார்ச்சில் உயர்வை சந்தித்து மின்சார வாகன விற்பனையில் இரண்டாமிடத்தைப் பிடித்தது. முதலிடத்தில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார வாகனம் இருந்த நிலையில், அதை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. மார்ச் மாதத்தைக் காட்டிலும் குறைவான வாகனங்களை விற்பனைச் செய்து 50% சரிவை சந்தித்திருக்கிறது ஹீரோ வாகனம்.
அது கடந்த மாதம் 6,570 வாகனங்களை மட்ட்டுமே கடந்த மாதத்தில் விற்பனை செய்திருக்கிறது. அதேநேரத்தில் ஒக்கினாவா ஆட்டோ டெக் நிறுவனம் 10000 வாகனங்களை விற்பனை செய்து இரண்டாமிடத்தை பிடித்திருப்பதோடு, ஹீரோ நிறுவனத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளியிருக்கிறது.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் கடந்த மாதத்தில் தீப்பிடித்து எரிந்த மின்சாரவாகனங்களில் பெரும்பாலானவை ஓலா மற்றும் ஒக்கினவாவை சேர்ந்தவை தான். இதனால் மத்திய அரசே நேரடியாக தலையிட்டு விவரங்களை ஆய்வு செய்தது. ஆனால், ஹீரோ வாகனத்தில் இதுபோன்ற பிரச்சனை ஏதும் எழாத நிலையில் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.