Ola: திரும்ப கொண்டு வாங்க.. செக் பண்ணனும்.. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப்பெறும் ஓலா!!
முன்னதாக, ஆகஸ்ட் 15ம் தேதி 2021ம் ஆண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவைத் தொடங்கியது ஓலா.

புனேவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்த பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பெரிதும் நம்பகத்தன்மையாக அறியப்பட்ட ஓலா ஸ்கூட்டரே தீயில் கருகிய விவகாரம் மின்சார வாகனங்கள் மீதே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக தீவிர விசாரணையை தொடங்கிய ஓலா நிறுவனம் தற்போது, 1441 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறவுள்ளது.
புனே சம்பவம்..
புனே நகரில் வணிக வளாகத்திற்கு வெளியே நிறுத்தி வைத்தப்போது தீப்பற்றி எரித்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அப்போது இது தொடர்பாக ஓலாவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி அதிகாரி பவிஷ் அகர்வால் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தான் மிகவும் முதன்மையானது எனவும், தீப்பற்றி விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி அதற்கான வேலையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. இந்நிலையில் ஓலா நிறுவனம் தற்போது, 1441 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறவுள்ளது.
Ola scooter in flames highlights safety issues with batteries. NMC cells more prone to ‘Thermal Runaway’ or spontaneous fires than LFP cells. @OlaElectric must investigate & give us answers. Thank God no one injured and # burnol not needed! pic.twitter.com/kupn2fANTP
— Hormazd Sorabjee (@hormazdsorabjee) March 26, 2022
இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ஓலா நிறுவனம், குறிப்பிட்ட பேட்ஜில் உருவாக்கப்பட்ட 1441 ஸ்கூட்டர்களை திரும்பப் பெறவுள்ளோம். அனைத்து ஸ்கூட்டர்களையும் முழு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 15ம் தேதி 2021ம் ஆண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவைத் தொடங்கியது ஓலா. அதன்படி முதலில் முன்பதிவு செய்தவர்களுக்கு டிசம்பர் 15ம் தேதி ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டது. 2022 மார்ச் 26ம் தேதி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது.
Safety is top priority. We’re investigating this and will fix it. https://t.co/HsTFh4cbhw
— Bhavish Aggarwal (@bhash) March 26, 2022
இதற்கிடையே நாடு முழுவதும் பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆங்காங்கே தீப்பற்றி எரிந்த நிலையில் அரசும் இது தொடர்பாக கவனத்தை திருப்பியுள்ளது. இது குறித்து ட்வீட் செய்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ''மின்சார வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்கு பிறகான அறிக்கையின் அடிப்படையில் உரிய விதிகள் வகுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

