மேலும் அறிய

OKINAWA: முதல்முறையாக E-பைக்கில் களமிறங்கும் ஒகினோவா..ஆரம்பமே அதிரடி தான்: அசத்தலான அம்சங்கள்

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் முன்னணியில் உள்ள ஒகினோவா நிறுவனம், தனது முதல் மின்சார இருசக்கர வாகனத்தை எப்போது வெளியிட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒகினோவா ஆட்டோடெக் நிறுவனம், அதிகப்படியான விற்பனை மூலம்  நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர் எனும் நிலையை எட்டியுள்ளது. மேலும், இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்த மின்சார இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது. பல விதமான ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி இருப்பது, வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் ஸ்கூட்டர் மாடல்கள்  இருப்பது இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

Okinawa OKHI 100 மோட்டார் சைக்கிள்:

ஸ்கூட்டர் உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரும் வெற்றி பெற்ற ஒகினோவா நிறுவனம் அடுத்ததாக, மோட்டார் சைக்கிள் சந்தையில் கால்தடம் பதிக்க முடிவு செய்துள்ளது.  அந்த வகையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள முதல் மின்சார மோட்டார் சைக்கிளுக்கு Okinawa OKHI 100 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பைக்கின் மாதிரி ஏற்கனவே 2018 மற்றும் 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து விழாக்காலங்களில் அறிமுகப்படுத்தலாம் என திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு ஆகிய காரணங்களால் Okinawa OKHI 100 மோட்டார் சைக்கிளின் வெளியீடு தாமதமானது. இந்நிலையில், தற்போது இயல்புநிலை திரும்பியதையொட்டி தங்கள் நிறுவனத்தின் முதல் மின்சார மோட்டார் சைக்கிளை வரும் மார்ச் மாதம் வெளியிட, ஒகினோவா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடிவமைப்பு:

Okinawa OKHI 100 ஒரு சிறிய அளவிலான காம்பேக்ட் ரக மின்சார மோட்டார் சைக்கிள் ஆகும்.  2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா நேவியை போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது. அதேநேரம், வாகனத்தின்  வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் உயர்த்தப்பட்ட இருக்கை, வாகனத்தின் உடல்பகுதி முழுவதும் சிவப்புநிற பெயிண்ட், இருசக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புற வடிவமைப்பு ஆகியவை ஸ்போர்ட்ஸ் பைக்கை மையப்படுத்தியே Okinawa OKHI 100 மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருப்பதை காட்டுகிறது. முகப்பில் மட்டும் ஹாலோஜென் விளக்கு பயன்படுத்தப்பட்டு வாகனத்தின் மற்ற பகுதி முழுவதும் எல்.ஈ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

பேட்டரி மற்றும் வாகனத்தின் ரேன்ஜ்:

2018ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டபோது Okinawa OKHI 100 மோட்டார் சைக்கிள் 60 Ah 73 V பேட்டரி பேக்கை கொண்டிருந்தது. ஆனால், தற்போது மார்ச் மாதம் வெளியாகும் போது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பேட்டரி பேக் இதில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனத்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கி.மீ. தூரம் பயணம் செய்யலாம் எனவும், முந்தைய மோட்டார் சைக்கிள் மாதிரியில் இருந்த 2.5 kW மின்சார மோட்டரே இதில் பொருத்தப்பட்டு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம், Okinawa OKHI 100 மோட்டார் சைக்கிளை அதிகபட்சமாக 100 கி.மீ. வேகத்தில் செலுத்த முடியும்.

சார்ஜ் செய்ய ஆகும் நேரம்:

ஆட்டோ எக்ஸ்போவில் காட்டப்பட்ட மாதிரி வாகனத்தில் இருந்த பேட்டரியை, ஜீரோவிலிருந்து 100 சதவிகிதத்திற்கு சார்ஜ் செய்ய 2 மணி நேரம் ஆனது. ஆனால், புதிய வாகனத்தில் பேட்டரி பேக் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், சார்ஜ் செய்வதற்கான நேரம் மாற வாய்ப்புள்ளது.

சந்தையில் யாருக்கு போட்டி:

தற்போதைய சந்தையின் நிலவரப்படி Okinawa OKHI 100 பைக் மாடல், Joy E-Bike Monster-க்கு நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் விலையின் அடிப்படையில், Revolt RV 400, Tork Kartos, Komaki MX3, Pop Oxo மற்றும் Oben Rorr ஆகிய மோட்டார் சைக்கிள்களுக்கும் Okinawa OKHI 100 போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

விலை விவரம்:

Okinawa OKHI 100 மோட்டார் சைக்கிளின் ஆரம்ப விலை, ரூ.1-லட்சத்திலிருந்து ரூ.1.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget