இ- பைக்குகளில் பேட்டரி மாற்றும் வசதி... மத்திய அரசிடம் பரிந்துரைத்த நிதி ஆயோக்!
பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு மற்றும் காற்று மாசைக் கட்டுப்படுத்த இ- வாகனங்களை அதிக அளவில் மக்களிடம் கொண்டு செல்ல மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு மற்றும் காற்று மாசைக் கட்டுப்படுத்த இ- வாகனங்களை அதிக அளவில் மக்களிடம் கொண்டு செல்ல மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இ வாகனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு இல்லை. அதற்கான காரணங்களாக அவற்றின் அதிக விலை, சார்ஜ் செய்ய ஆகும் நேரம் ஆகியவை கருதப்படுகிறது. அதுவுமில்லாமல் பெட்ரோலிய பைக்குகளைப் பயன்படுத்திப் பழகிய மக்களுக்கு இயல்பாகவே இ-பைக்குகளை வாங்க ஒரு தயக்கம் இருக்கிறது. இதனால் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அதற்கு பல்வேறு கடன் மற்றும் மானியங்களும் வழங்கப்படுகின்றன. சில மாநிலங்களில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், வாகனத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் சாலை வரி ஆகிவையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இ வாகனங்களை பொதுமக்கள் வாங்குவதை மேலும் உக்குவிக்கும் வகையில் ‘battery-swapping policy’ எனும் வரைவை மத்திய அரசிடம் நிதி ஆயோக் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சாதாரணமாக இ- பைக்குகளை சார்ஜ் செய்ய 3-4 நேரமாகும். எனவே பயணத்தில் இருப்பவர்கள் இடையில் நிறுத்தி சார்ஜ் செய்து நகர்வது என்பது சிரமமான காரியமாகும்.
இந்நிலையில் பேட்டரி மாற்றிக்கொள்ளும் வசதியை ஏற்படுத்த நிதி ஆயோக் வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. மேலும் இ வாகனத்தின் மொத்த விலையில் பேட்டரி விலையே 30-40% செலவாகிறது.
With an aim to promote #EV adoption in the country, #NITIAayog has prepared the Draft Battery Swapping Policy. It takes cognizance of all the inputs provided by relevant stakeholders.
— NITI Aayog (@NITIAayog) April 21, 2022
Policy Draft: https://t.co/kDOfzubSzN
Inviting comments by 🗓5th June: https://t.co/C7lXEuxz6j pic.twitter.com/Vv2ZLTv9wc
லித்தியம்- அயன் பேட்டரிகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி உள்ள நிலையில் அதைக் குறைக்குமாறு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான முழு விவரங்கள், https://www.niti.gov.in/sites/default/files/2022-04/20220420_Battery_Swapping_Policy_Draft.pdf விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
நிதி ஆயோக்கின் இந்த பரிந்துரையை இ வாகன தயாரிப்பாளர்கள் வரவேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ன்சார வாகனங்கள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வாகனத்தயாரிப்பில் அலட்சியம் இருந்தால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்திருந்தார். சமீபத்தில் மின்சார வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் உடனடியாக ஆய்வு செய்து, பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதுள்ள வாகனங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.