மேலும் அறிய

New SUV launching: 2024ல் எஸ்யுவி வாங்கனும்னு திட்டம் இருக்கா? இதோ உங்களுக்கான பட்டியல்..!

New SUV launching: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள எஸ்யுவி கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்

New SUV launching: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ள, எஸ்யுவி கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

எஸ்யுவி கார்கள்:

வழக்கமான கார் வாங்குவதை விட ஆஃப்-ரோடிலும் பயன்படுத்தக் கூடிய திறன் வாய்ந்த எஸ்யுவிக்கள் மீதான ஆர்வம் பயனாளர்களிடையே அதிகரித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டே பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும், புதுப்பிது எஸ்யுவி கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், அடுத்த ஆண்டு எஸ்யுவி கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில், 2024ம் ஆண்டு வெளியாக உள்ள எஸ்யுவி கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் மட்டுமின்றி, இந்திய சந்தையில் முதன்முறையாக அறிமுகமாகவுள்ள சில கார்களும் அடங்கும். அதன்படி, கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட், ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட், ஃபெராரி புரோசாங்யூ, மசெராட்டி கிரேகேல் போன்ற எஸ்யுவி கார்களும் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாக உள்ளன.

ஆடி க்யூ8 ஃபேஸ்லிஃப்ட்:

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 1.10 கோடி-1.40 கோடி
வெளியீடு: ஆரம்ப 2024
இன்ஜின்: 3.0-லிட்டர் பெட்ரோல்

ஆடி க்யூ8 ஃபேஸ்லிஃப்ட்டில் காஸ்மெட்டிக் மேம்பாடுகள் தவிர, எச்டி மேட்ரிக்ஸ் எல். ஈ.டி முகப்பு விளக்குகளை கொண்டுள்ளது.

ஃபெராரி புரோசாங்கு

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 6 கோடி
வெளியீடு: ஆரம்ப 2024
இன்ஜின்: 6.5 லிட்டர் பெட்ரோல்

725hp மற்றும் 716Nm உற்பத்தி செய்யும் V12 இன்ஜினைக் கொண்டுள்ளது. இது 8-ஸ்பீடு டிரான்சாக்சில் டூயல்-கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸைப் பெறுகிறது, 3.3 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும்.  அதிகபட்சமாக மணிக்கு 310 கிமீ வேகத்தை எட்ட முடியும்.

ஃபோர்ஸ் கூர்க்கா 5-கதவு

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 15 லட்சம்
வெளியீடு: 2024 இன் நடுப்பகுதியில்
இன்ஜின்: 2.6-லிட்டர் டீசல்

ஐந்து கதவுகள் கொண்ட கூர்கா மாடலில் ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட வேரியண்டுகளும் விற்பனைக்கு வரலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 11 லட்சம்-20 லட்சம்
வெளியீடு: 2024 இன் முற்பகுதி
இன்ஜின்: 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் 

ஹூண்டாய் அல்காசர் ஃபேஸ்லிஃப்ட்

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 17 லட்சம்-22 லட்சம்
வெளியீடு: 2024 இன் நடுப்பகுதியில்
இன்ஜின்: 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல்

புதுப்பிக்கப்பட்ட அல்காசர் ஹூண்டாயின் புதிய டிசைன் மற்றும் ADASஐ பெறும்.

கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 8 லட்சம்-15 லட்சம்
வெளியீடு: 2024 தொடக்கத்தில்
இன்ஜின்: 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் 

இது 5-ஸ்பீடு மேனுவலுடன் 83hp, 1.2-லிட்டர் பெட்ரோல் இன ஜினை தொடர்ந்து பெறும்.  120hp, 6-ஸ்பீட் iMT அல்லது 7-ஸ்பீட் இரட்டை கிளட்ச் தானியங்கி உடன் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு iMT அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட 115hp, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய வேரியண்ட்களும் கிடைக்கிறது.

ரேஞ்ச் ரோவர் எவோக் ஃபேஸ்லிஃப்ட்

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 73 லட்சம்
வெளியீடு: 2024 நடுப்பகுதியில்
இன்ஜின்: 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0-லிட்டர் டீசல்

மஹிந்திரா தார் 5-கதவு

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 16 லட்சம்-20 லட்சம்
வெளியீடு: 2024 நடுப்பகுதியில்
இன்ஜின்: 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2-லிட்டர் டீசல்

தற்போது உள்ள 2.2-லிட்டர் டீசல் மற்றும் 2.0-லிட்டர் பெட்ரோல் இன்ஜின்,  அதே 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக்குடன் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
 
மஹிந்திரா  XUV300 ஃபேஸ்லிஃப்ட்

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 8.5 லட்சம்-15.5 லட்சம்
வெளியீடு: 2024
இன்ஜின்: 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல்

 உட்புறங்களை மிகவும் விரும்பத்தக்கதாகவும் நவீனமாகவும் மாற்ற மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. 

மசராட்டி கிரேகேல்

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 1.0 கோடி-1.5 கோடி
வெளியீடு: 2024 இன் நடுப்பகுதியில்
இன்ஜின்: 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல், 3.0-லிட்டர் டர்போ பெட்ரோல்

2.0-லிட்டர், நான்கு-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின், 48V மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டத்துடன் GT மற்றும் Modena ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கிடைக்க உள்ளது.  முதல் மாடல் 300hp ஆற்றலுடன் மணிக்கு 100k கிலோ மீட்டர் வேகத்தை 5.6 வினாடிகளில் அடங்கும். மற்றொன்று 330hp ஆற்றலுடன் மணிக்கு 5.3 வினாடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்.

Mercedes-Benz புதிய GLC கூபே

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 75 லட்சம்-80 லட்சம்
வெளியீடு:  2024 தொடக்கத்தில்
இன்ஜின்: 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல்

Mercedes-Benz  GLA ஃபேஸ்லிஃப்ட்

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 45 லட்சம்-49 லட்சம்
வெளியீடு: 2024 தொடக்கத்தில்
இன்ஜின்: 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல்

Mercedes-Benz  GLB ஃபேஸ்லிஃப்ட்

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 65 லட்சம் - 70 லட்சம்
வெளியீடு: 2024ம் ஆண்டு
இன்ஜின்: 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல்

மினி கன்ட்ரிமேன் (மூன்றாம் தலைமுறை)

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 50 லட்சம்-67 லட்சம்
வெளியீடு: 2024 நடுப்பகுதியில்
இன்ஜின்/பேட்டரி: 2.0 பெட்ரோல் /66.45kWh

நிசான் எக்ஸ்-டிரெயில் (4வது தலைமுறை)

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 35 லட்சம்
வெளியீடு: 2024 தொடக்கத்தில்
இன்ஜின்: 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட்

டாடா கர்வ்

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ.14 லட்சம்-20 லட்சம்
வெளியீடு: 2024 நடுப்பகுதியில்
பேட்டரி/இன்ஜின்: TBA /1.2-லிட்டர் பெட்ரோல்

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்

எதிர்பார்க்கப்படும் விலை : ரூ. 8 லட்சம்-13.5 லட்சம்
வெளியீடு: 2024 நடுப்பகுதியில்
இன்ஜின்: 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Embed widget