New Hyundai Venue N Line: நியூ வென்யு என்-லைன் - ஓவர் தி ஏர் அப்டேட்ஸ், வாய்ஸ் கன்ட்ரோல் - கூடுதல் அப்க்ரேட்கள் என்ன?
Hyundai Venue and Venue N Line Launch: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை வென்யு காரின் என் - லைன் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Hyundai New Gen Venue Launch: ஹுண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை வென்யு என் - லைன் எடிஷன் கார் மாடல்களின் விநியோகத்தை நவம்பர் 15-க்குப் பிறகு தொடங்கக் கூடும்.
ஹுண்டாய் வென்யு N-லைன் எடிஷன் அறிமுகம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்தின் அடையாளங்களில் ஒன்றான, வென்யு கார் மாடல் முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டு புதிய தலைமுறை எடிஷனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக ஸ்டேண்டர்ட் எடிஷன் வெளியாகி, சிறிய இடைவேளைக்கு பிறகே என் - லைன் எடிஷன் சந்தைப்படுத்தப்படும் ஆனால், இந்த முறை ஒரே அடியாக இரண்டு கார்களும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன கடந்த வாரமே இந்த காரின் ஸ்டேண்டர்ட் மற்றும் என் - லைன் எடிஷன் காட்சிப்படுத்தப்பட்டு, அதற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் ரூ.25 ஆயிரம் பணத்தை செலுத்தி, இந்த இரண்டு கார்களையும் முன்பதிவு செய்துகொள்ளாலாம் என தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
ஹுண்டாய் வென்யு N-லைன் எடிஷன் விலை:
வென்யுவின் என் - லைன் எடிஷனானது N6 மற்றும் N10 என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக வென்யு காரின் முதல் 3 வேரியண்ட்களின் விலை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.7.90 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. என் - லைன் வேரியண்ட் உள்ளிட்ட டாப் எண்ட் வேரியண்ட்களின் விலை அடுத்தடுத்த நாட்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஹுண்டாய் வென்யு N-லைன் எடிஷன் - இன்ஜின் விவரங்கள்
என் - லைன் எடிஷனின் N6 வேரியண்டில் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 7DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அதேநேரம், N10 வேரியண்டில் 7DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஹூண்டாய் வென்யு N லைனில் அதே கப்பா 1.0L GDI 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஹுண்டாய் வென்யு N-லைன் - வண்ண விருப்பங்கள்
ஹுண்டாய் என் லைன் - எடிஷனானது 5 ஒற்றை மற்றும் 3 இரட்டை வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதன்படி அட்லஸ் வெள்ளை, டைடன் க்ரே, ட்ராகன் ரெட், அபிஸ் ப்ளாக் மற்றும் ஹேசல் ப்ளூ ஆகிய ஒற்றை வண்ண ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. டூயல் டோனில் அட்லஸ் வெள்ளை, ஹேசல் ப்ளூ, ட்ராகன் ரெட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அனைத்திலும் அபிஸ் ப்ளாக் ரூஃப் கலரில் வழங்கப்படுகிறது.
ஓவர் தி ஏர் அப்டேட்
ஹூண்டா2ய் வென்யுவில் 70 கனெக்டட் கார் அம்சங்கள் மற்றும் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் 400க்கும் மேற்பட்ட வாய்ஸ் கண்ட்ரோல்களை வழங்கியுள்ளது. இது 20 கன்ட்ரோலர்களுக்கான ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்களையும் ஆதரிக்கிறது. ரிமோட் சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை அனுமதிக்கிறது.
ஹுண்டாய் வென்யு N-லைன் - அம்சங்கள்
- 12.3 இன்ச் ccNC நேவிகேஷன் சிஸ்டம்
- 12.3 இன்ச் முழு டிஜிட்டல் டிஸ்ப்ளே க்ளஸ்டர்
- போஸ் பிரீமியம் சவுண்ட் 8 ஸ்பீக்கர் சிஸ்டம்
- சரவுண்ட் வியூ மானிட்டர் (SVM) மற்றும் பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர் (BVM)
- ஓவர்-தி-ஏர் (C-OTA) அப்டேட்களை வழங்கும் திறன் கொண்ட 20 வாகனக் கட்டுப்படுத்திகள்
- ஸ்மார்ட் அரோமா டிஃப்பியூசர்
- சூப்பர் ஸ்ட்ராங் பாடி ஸ்ட்ரக்சர்
- 70க்கும் மேற்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
- 41 நிலையான பாதுகாப்பு அம்சங்கள் •
- 21 அம்சங்களுடன் ADAS லெவல் 2
- ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (EPB)
- டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு (TPMS) – ஹைலைன்
ஹுண்டாய் வென்யு N-லைன் - கட்டமைப்பு
வென்யு என் - லைன் எடிஷனின் உயரம், நீளம் மற்றும் அகலம் ஆகியவற்றின் அளவீடுகளானது, எஸ்டேண்டர்ட் எடிஷனை போன்றே தொடர்கிறது. அதேநேரம், இதற்கென சில தனித்துவமான டச்களும் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி,
வெளிப்புறம்:
- சிவப்பு சிறப்பம்சங்களுடன் கூடிய N லைன் பிரத்யேக பம்பர் (முன் & பின்புறம்)
- •N லைன் சின்னத்துடன் கூடிய டார்க் குரோம் ரேடியேட்டர் க்ரில்
- N லைன் பிரத்யேக டார்க் மெட்டாலிக் சில்வர் ஸ்கிட் பிளேட் (முன் & பின்புறம்)
- LED சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள்
- சிவப்பு சிறப்பம்சங்களுடன் கூடிய பிரிட்ஜ் வகை ரூஃப் ரெயில்
- N சின்னத்துடன் கூடிய R17 டயமண்ட் கட் அலாய் வீல்ஸ்
- சிவப்பு காலிபர் (முன் & பின்புறம்) கொண்ட டிஸ்க் பிரேக்குகள்
- N லைன் பிரத்யேக விங் வகை ஸ்பாய்லர் •
- இரட்டை முனை எக்சாஸ்ட்
- ரேடியேட்டர் க்ரில், முன் ஃபெண்டர் (RH மற்றும் LH), டெயில்கேட் ஆகியவற்றில் N லைன் சின்னம்
உட்புறம்:
- சிவப்பு சிறப்பம்சங்களுடன் ஸ்போர்ட்டி கருப்பு உட்புறம்
- N லைன் பிரத்யேக ஸ்டீயரிங் வீல்
- N லைன் பிரத்யேக கியர் ஷிப்ட் க்நாப்
- ஸ்போர்ட்டி மெட்டல் பெடல்கள்
- N பிராண்டிங்குடன் ஸ்போர்ட்டி கருப்பு லெதரெட் இருக்கைகள்
- க்ராஷ்பேட் மற்றும் சென்டர் கன்சோலில் ஆம்பியன்ட் லைட்டிங் (சன்ரைஸ் ரெட்)
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.55 லட்சம் முதல் தொடங்குகிறது. இந்த கார் இந்திய சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.





















