Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
New Gen Kia Seltos: கியா நிறுவனத்தின் புதிய தலைமுறை செல்டோஸ் கார் மாடல், வரும் டிசம்பர் 10ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

New Gen Kia Seltos: கியா நிறுவனத்தின் புதிய தலைமுறை செல்டோஸ் கார் மாடலில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் வசதிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை கியா செல்டோஸ்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக, வரும் டிச்மபர் 10ம் தேதி கியா நிறுவனத்தின் புதிய தலைமுறை கியா செல்டோஸ் கார் மாடல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்திய சந்தையில் ப்ராண்டின் விரிவாக்கத்திற்கு மிக முக்கிய பங்கு வகித்த, செல்டோஸ் கார் மாடலின் அப்க்ரேட் எடிஷனும் உள்ளூர் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்கள் மற்றும் வசதிகள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
புதிய தலைமுறை கியா செல்டோஸ் - வடிவமைப்பு அப்க்ரேட்
புதிய தலைமுறை செல்டோஸ் காரின் சாலை பரிசோதனை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, புதிய அம்சங்கள் தொடர்பான பல யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இறுக்கமான மெஷ் வடிவத்துடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட க்ரில்லைக் கொண்ட சதுர வடிவ முன்பக்கத்தைக் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது. அதன் அருகில் வெர்டிகல் LED முகப்பு விளக்குகள் உள்ளன, அவை பம்பரின் ஓரங்களை நோக்கித் தள்ளப்பட்டு, பெரிய C-வடிவ பகல்நேரங்களி ஒளிரும் விளக்குகளுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளன.
பானெட் மீதான கோடுகளானது ஆழமாக மாறியுள்ளது மற்றும் பம்பர் கட்டுமஸ்தானதாக மாற்றமடைந்துள்ளது. பக்கவாட்டில் காரின் காட்சியானது வழக்கமானதாக இருந்தாலும், அதில் வழங்கப்பட்டுள்ள விவரங்கள் புதியதாக உள்ளது. குறிப்பாக, Y இன்ஸ்பையர்ட் பேட்டர்ன் கொண்ட புதிய டூயல் டோன் அலாய் வீல்கள், கூர்மையான ட்ரையாங்குலர் ரியர் சைட் க்ளாஸ் செக்ஷன் மற்றும் கட்டுமஸ்தான வீல் ஆர்க்ஸ் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
காரின் பின்பக்கத்திலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் புதிய எல்இடி டெயில் லேம்ப்களானது, டெயில்கேட்டின் குறுக்கே இயங்கும் மெல்லிய ஒளிரும் துண்டுடன் இணைக்கப்பட்ட பிரதிபலித்த Cs வடிவிலான தோற்றத்தை கொண்டுள்ளது. பம்பர் மற்றும் டெயில்கேட்கள் முற்றிலும் புதியதாக காட்சியளிக்கின்றன.
புதிய தலைமுறை கியா செல்டோஸ் - உட்புற அம்சங்கள்
உட்புறத்திலும் மிகப்பெரிய அளவில் அப்க்ரேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. டேஷ்போர்டானது ஃப்ளாட்டாக மாற்றப்படக்கூடும் என்றும், அதிகளவில் லே-அவுட் நீட்டிக்கப்படும் என்றும் தெரிகிறது. முன்பு இருந்ததை காட்டிலும், மென்மையான மேற்பரப்புடன் மேம்படுத்தப்பட்ட ஃபினிஷிங் வழங்கப்படலாம். மறுவடிவமைப்பின் மையமாக, முழுமையான டிஜிட்டல் க்ளஸ்டருக்கு அடுத்தபடியாக பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது இரண்டுமே ஒரே க்ளாஸ் பேனலில் இடம்பெற்றுள்ளது. கூடுதல் அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் இன்டர்ஃபேஸை கியா ப்ராண்ட் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெண்டிலேடட் சீட்ஸ், பவர்ட் ட்ரைவர் இருக்கை, பனோரமிக் சன்ரூஃப், க்ளைமேட் கன்ட்ரோல் ஆகிய அம்சங்கள் அப்படியே தொடரப்படும். அதேநேரம், கூடுதம் அசிஸ்ட் அம்சங்களுடன் தனது ADAS அம்சத்தை விரிவுபடுத்தக்கூடும்.
கியா செல்டோஸ் - இன்ஜின், போட்டியாளர்கள்
இன்ஜின் அடிப்படையில் புதிய தலைமுறை செல்டோஸில் மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் தொடரலாம். மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் அனைத்து வேரியண்ட்களிலும் தொடரும் என்றும், சில சர்வதேச சந்தைகளில் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு ஆல் வீல் ட்ரைவ் அம்சம் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்தில் வலுவான ஹைப்ரிட் அம்சமும் இதில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. உள்ளூர் சந்தையில் இந்த கார் அறிமுகமாகும்போது, ஹுண்டாய் க்ரேட்டா, மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா, விக்டோரிஸ், டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வாகன் டைகன், ஸ்கோடா குஷக், டாடா கர்வ் மற்றும் சியாரா ஆகிய கார் மாடல்களுடன் மோத வேண்டி உள்ளது.






















