S Presso: நாட்டிலே விலை குறைந்த கார் இதுதான் - S Presso எந்த வேரியண்ட் எவ்வளவு?
மாருதி சுசுகியின் S Presso கார் விலை ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 3.50 லட்சத்திற்கு சரிந்துள்ளது.இதன் எந்த வேரியண்ட் எவ்வளவு விலை குறைந்துள்ளது என்பதை கீழே காணலாம்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் நாட்டில் கார்களின் விலை பெருமளவு குறைந்துள்ளது. பட்ஜெட் விலை கார் முதல் ஆடம்பர கார்கள் வரை விலை பெருமளவு குறைந்துள்ளது.
இந்தியாவிலே விலை குறைந்த மாருதி சுசுகியின் Maruti Suzuki S-Presso காரின் விலை தற்போது மேலும் விலை குறைந்துள்ளது. இந்த கார் தற்போது ரூபாய் 4 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. இந்த காரின் வேரியண்ட் எந்தளவு விலை குறைந்துள்ளது? என்பதை கீழே காணலாம்.
1. STD (O) 5MT:
மாருதி சுசுகியின் எஸ் ப்ரஸ்ஸோ காரின் STD (O) 5MT வேரியண்ட் பழைய விலை ரூபாய் 4 லட்சத்து 26 ஆயிரத்து 500 ஆகும். இந்த காரின் புதிய விலை ரூபாய் 3 லட்சத்து 49 ஆயிரத்து 900 ஆகும். இந்த கார் ரூபாய் 76 ஆயிரத்து 600 குறைந்துள்ளது.
2. LXI (O) 5MT:
மாருதி சுசுகி எஸ் பிரஸ்ஸோ காரின் LXI (O) 5MT வேரியண்ட் பழைய விலை ரூபாய் 4 லட்சத்து 99 ஆயிரத்து 500 ஆகும். தற்போது இந்த காரின் விலை ரூபாய் 3 லட்சத்து 79 ஆயிரத்து 900 ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 1 லட்சத்து 19 ஆயிரத்து 600 வரை குறைக்கப்பட்டுள்ளது.
3. VXI (O) 5MT:
மாருதி சுசுகி எஸ் பிரஸ்ஸோ காரின் VXI (O) 5MT வேரியண்ட் ரூபாய் 5 லட்த்து 21 ஆயிரத்து 499க்கு விற்கப்பட்டு வந்தது. ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு தற்போது ரூபாய் 4 லட்சத்து 29 ஆயிரத்து 900க்கு விற்கப்படுகிறது. இந்த கார் தற்போது ரூபாய் 91 ஆயிரத்து 599 வரை வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
4. VXI+ (O) 5MT:
எஸ் பிரஸ்ஸோ காரின் VXI+ (O) 5MT வேரியண்ட் தற்போது ரூபாய் 4 லட்சத்து 79 ஆயிரத்து 900-க்கு விற்கப்படுகிறது. இந்த காரின் பழைய விலை ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரத்து 500 ஆகும். இந்த காரின் விலை ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் ரூபாய் 70 ஆயிரத்து 600 விலை குறைக்கப்பட்டுள்ளது.
5. VXI (O) AGS:
இந்த எஸ் பிரஸ்ஸோ காரின் VXI (O) AGS காரின் பழைய விலை ரூபாய் 5 லட்சத்து 71 ஆயிரத்து 500 ஆகும். இந்த கார் தற்போது ரூபாய் 4 லட்சத்து 74 ஆயிரத்து 900க்கு தற்போது விற்கப்பட்டு வருகிறது. இந்த காரின் 96 ஆயிரத்து 600க்கு விற்கப்படுகிறது.
6. VXI+ (O) AGS:
எஸ் பிரஸ்ஸோ காரின் VXI+ (O) AGS காரின் பழைய விலை ரூபாய் 6 லட்சத்து 500 ஆகும். இந்த காரின் புதிய விலை ரூபாய் 5 லட்சத்து 24 ஆயிரத்து 900 ஆகும். ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 75 ஆயிரத்து 600 விலை குறைக்கப்பட்டுள்ளது.
7. VXI+ (O) AGS:
எஸ் பிரஸ்ஸோ காரின் பழைய விலை ரூபாய் 6 லட்சத்து 500 ஆகும். இந்த கார் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 5 லட்சத்து 24 ஆயிரத்து 900-க்கு இந்த கார் விற்கப்படுகிறது. இந்த காரின் விலை ரூபாய் 75 ஆயிரத்து 600 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
8. LXI (O) CNG 5MT:
இந்த LXI (O) CNG 5MT வேரியண்டின் பழைய விலை ரூபாய் 5 லட்சத்து 91 ஆயிரத்து 500 ஆகும். இந்த கார் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 4 லட்சத்து 61 ஆயிரத்து 900க்கு விற்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 1 லட்சத்து 29 ஆயிரத்து 600 குறைந்துள்ளது.
9. VXI (O) CNG 5MT:
எஸ் பிரஸ்ஸோ காரின் VXI (O) CNG 5MT வேரியண்ட்டின் பழைய விலை ரூபாய் 6 லட்சத்து 11 ஆயிரத்து 500 ஆகும். இந்த காரின் புதிய விலை ரூபாய் 5 லட்சத்து 11 ஆயிரத்து 900 ஆகும். இந்த கார் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 99 ஆயிரத்து 600 வரை குறைக்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகியின் எஸ் பிரஸ்ஸோ கார் 998 சிசி திறன் கொண்டது ஆகும். நகர்ப்புறங்களில், சிறிய குறுகலான சந்துகளில் ஓட்டுவதற்கு ஏற்ற கார் இதுவாகும். புதியதாக கார் ஓட்ட விரும்புபவர்கள் இந்த காரை விரும்பி வாங்குவார்கள். 5 ஸ்பீட் மேனுவல் கார் உள்ளது. சிஎன்ஜி காரும் உள்ளது. 25 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.





















