மிளகு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
செல்கள் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இதில் ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் ஆகும். ப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகிறது.
கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமனிகளில் கொழுப்பு படிவத்தை குறைப்பதில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது.
பைப்பரின் எனும் காரப்பொருளை கொண்டது இந்த மிளகு. இதனால், இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகம் ஆகும்.
செரிமான நொதிகளைத் தூண்டுவதில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமானத்தில் முக்கிய பங்கை மிளகு வகிக்கிறது.
சளிக்கு நல்ல மருந்தாக மிளகு உள்ளது. ரத்த ஓட்டத்தை தூண்டி சுவாசத்தை சீராக்குகிறது.
மிளகு ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக்சிஜன் விநியோகத்தை ஊக்குவிக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
நரம்பு செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. மூளை செல்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தி நினைவாற்றல் அதிகரிக்கவும் பக்கபலமாக உள்ளது.
சருமத்தை மென்மையாகவும், கரும்புள்ளிகள் ஏற்படுவதை தடுப்பதிலும் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் இருப்பதால் இதைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.