Maruti Cars Price Hike: பிப்ரவரி முதல் அதிகரிக்கும் மாருதி சுசூகி கார்களின் விலை - விவரம் இதோ!
Maruti Cars Price Hike: மாருதி சுசூகி கார்களின் விலை ஏற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தை இங்கே காணலாம்.

பிரபல கார் நிறுவனமான மாருதி சுசூகி கார்களின் விலையை வரும் பிப்ரவரி 1-ம் தேதி உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறையில் கார்களின் விற்பனை அதிகரித்து வருதாக தரவுகள் தெரிவிக்கின்றனர். இதே அளவுக்கு எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. சந்தையில் உள்ள தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப வசதிகளுடன் கார் நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டு கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படியிருக்கையில் பிரபல கார் நிறுவனம் மாருதி சுசூகி வரும் பிப்ரவரி (2025) மாதத்தில் இருந்து கார் மாடல் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
காரணம் என்ன?
கார்களின் விலை ஏற்றம் குறித்து மாருதி சுசூகி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ஆப்ரேசனல் எக்ஸ்பென்சஸ் மற்றும் இன்புட் காஸ்ட் அதிகரிப்பதன் காரணத்தால் கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் கார் வாங்க வேண்டும் என்றால் மனதிற்கு வருவது சுசூகி கார்கள் தான். மற்ற கார்களின் விலையோடு ஒப்பிடும் போது, விலைகள் சற்று குறைவாக இருக்கும். இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து மாடல் மாருதி சுசூகி கார்கள் விலை 32,500 வரை உயர்கிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 20235ல் இருந்து மாடல்களை பொறுத்து 4% விலை அதிகரிக்கும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.
விலை விவரம்:
மாருதி சுசூகி அறிவிப்பின் படி, அதிகபட்சமாக ரூ.32,500 வரை உயர்த்தியுள்ளது. சியாஸ் மற்றும் ஜிம்மி ஆகிய கார்களுக்கு ரூ. ரூ.1500 உயர்ந்துள்ளது. செலிரியோ ரூ.32,500, இன்விக்டோ ரூ.30,000, வேகன் ஆர் ரூ.15,000, ஸ்விப்ட் ரூ. 5,000, ஆல்டோ கே ரூ, 19,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
வ.எண்: | கார் மாடல் விவரம் | புதிய விலை விவரம் (பிப்ரவரி -2025) |
1 | Alto K10 | ரூ. 19,500/- வரை |
2 | S-Presso | ரூ.5,000/- வரை |
3 | Celerio | ரூ. 32,500/- வரை |
4 | Wagon R | ரூ. 13,000/- வரை |
5 | Swift | ரூ. 5,000/- வரை |
6 | Dzire | ரூ.10,500/- வரை |
8 | Brezza | ரூ.20,000/- வரை |
9 | Ertiga | ரூ.15,000/- வரை |
10 | Eeco | ரூ.12,000/- வரை |
11 | Super Carry | ரூ.10,000/- வரை |
12 | Ignis | ரூ.6,000/- வரை |
13 | Baleno | ரூ.9,000/- வரை |
14 | Ciaz | ரூ.1,500/- வரை |
15 | XL6 | ரூ.10,000/- வரை |
16 | Fronx | ரூ.5,500/- வரை |
17 | Invicto | ரூ.30,000/- வரை |
18 | Jimny | ரூ.1,500/- வரை |
19 | Grand Vitara | ரூ.25,000/- வரை |
டிசையர், ப்ரெஸ்ஸா, Swift, Eeco, WagonR, Ertiga, மற்றும் பலானோ ஆகிய மாடல்களில் சந்தையில் மிகவும் பிரபலமானை. அதிகம் விற்பனையாகும் மாடல்களும் கூட.
மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து ஏற்றுமதியில் சிறப்பாக விற்பனையை பதிவு செய்து வருகிறது. டிசம்பர் 2024-ல் 245,642 பயணிகள் வாகனங்களை (passenger vehicles (PVs)) விற்பனை செய்துள்ளது. இது 2023-ம் ஆண்டை விட அதிகமாகும். இந்தியாவின் பயணிகள் கார் ரக ஏற்றுமதியில் 43% மாருதி சூசுகி மாடல்கள். 2025-ம் நிதியாண்டில் 325,000 கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

