Maruti Ignis கார் வாங்கலாமா? வேண்டாமா? விலை, மைலேஜ், தரம் இதுதான்!
மாருதி சுசுகி நிறுவனத்தின் Maruti Ignis காரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று maruti suzuki ஆகும். மாருதி நிறுவனம் பட்ஜெட் விலையில் பல கார்களை தயாரித்துள்ளது. அந்த கார்கள் இந்திய சாலையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விலை என்ன?
பட்ஜெட் விலையில் மாருதி நிறுவனத்தின் முக்கியமான படைப்பாக Maruti Ignis உள்ளது. இந்த காரின் விலை, மைலேஜ், சிறப்பம்சம் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
இந்த கார் ஒரு காம்பேக்ட் ஹேட்ச்பேக் ஆகும். மாருதியின் நெக்ஸா ரக கார் ஆகும். 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் எஞ்ஜினை கொண்டது இந்த கார் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.45 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 9.02 லட்சம் ஆகும். இந்த கார் மொத்தம் 11 வேரியண்ட்கள் உள்ளது.
மைலேஜ்:
இந்த கார் பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. இந்த கார் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்காக ஓடும் ஆற்றல் கொண்டது. இந்த கார் 20.89 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது.
ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு ரூபாய் 50 ஆயிரம் முதல் 72 ஆயிரம் வரை குறைந்துள்ளது. இதன் எஞ்ஜின் மிகவும் சிறப்பான செயல்பாடு கொண்டது. இதன் லக்கேஜ் இருப்பு மிகவும் வசதியாக அமைந்துள்து. 82 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இந்த கார் 100 கிலோ மீட்டர் வேகத்தை 12.93 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது. 6 ஏர்பேக்குகள் வசதி கொண்டது.
வேரியண்ட்கள்:
Ignis Sigma 1.2 MT, Ignis Delta 1.2 MT, Ignis Delta 1.2 AMT, Ignis Zeta 1.2 MT, Ignis Zeta 1.2 MT Dual Tone, Ignis Zeta 1.2 AMT, Ignis Zeta 1.2 AMT Dual Tone, Ignis Alpha 1.2 MT, Ignis Alpha 1.2 MT Dual Tone, Ignis Alpha 1.2 AMT, Ignis Alpha 1.2 AMT Dual Tone ஆகிய 11 வேரியண்ட்கள் உள்ளது.
இந்த கார் ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்டது. இதனால், முதன்முறையாக கார் வாங்குபவர்களின் யோசனையில் இந்த காரும் உள்ளது. இந்த கார், டொயோட்டோ கிளான்சா, மாருதி செலரியோ, சுவிஃப்ட் போன்ற கார்களுக்கு போட்டியாக உள்ளது.





















