Maruti Dzire vs Tata Tigor: மாருதி டிசையர் Vs டாடா டைக்ர் -- எது சிறந்தது?
மாருதி டிசையர் மற்றும் டாடா டைகர் மாடல் கார்களில் எது சிறந்தது..
![Maruti Dzire vs Tata Tigor: மாருதி டிசையர் Vs டாடா டைக்ர் -- எது சிறந்தது? Maruti Dzire vs Tata Tigor Comparison- here is what should you know Maruti Dzire vs Tata Tigor: மாருதி டிசையர் Vs டாடா டைக்ர் -- எது சிறந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/05/83f86a2a8178050a642ea04ce49db596_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளுடன், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆர்வம் இப்போது எப்பொதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. வாடிக்கையாளரின் தேவைகளின் நாடியை சரியாக் புரிந்து கொண்டு, தற்போது டாடா மோட்டார்ஸ் மட்டுமே மின்சார கார்களை தயாரித்து வருகிறது எனலாம்.
இதன் மூலம் 20 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் உள்ள சாதாரண கார் வாங்குபவர்களுக்கு, அதே வாங்க கூடிய மின்சார கார்கள் கிடைப்பது என்பது மகிழ்ச்சியானதுதான். டாடா டைகர் எலக்ட்ரானிக் கார் வகையை பொறுத்தவரை, இதன் ஆரம்ப் விலை ரூ.12 லட்சம். ஆனைவரும் வாங்க கூடிய விலையில் இது இருக்கிறது. டாடா டைகர், மாருதி டிசையர் இரண்டும் ஒரே பிரிவைச் சேர்ந்தது என்பதால் அதற்கு போட்டியாக சந்தையில் இருப்பது, டாப்-எண்ட் மாருதி டிசையர். இது பெட்ரோலில் இயங்ககூடியது. இதன் ஆரம்ப விலை, ரூ. 9 லட்சம். ஒவ்வோரு காரும் அதன் சிறப்பம்சஙகளை வைத்தே சிறந்த கார் என்று கூற முடியும். அப்படி, பெட்ரோல் வேரியண்ட், எலக்ட்ரானிக் கார், Compressed natural gas இல் இயங்கும் கார், அதாவது இதன் எஞ்சினும் காஸ்-இல் இயங்குவது போலதான் இருக்கும். இதில் மூன்றில் எது சிறந்தது என்று பார்க்கலாம்.
எரிபொருள் விலை உயர்வு, பெட்ரோல் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் இடையேயான கார் வாங்குபவர்களின் மனதில் எழுப்பியுள்ளது. எலக்ட்ரிக் கார்களை இயக்குவதற்கான குறைந்த செலவு பற்றிய எண்ணம் விரும்பத்தக்க அம்சம் என்பதில் சந்தேகமில்லை.
நீங்கள் நிலையான பெட்ரோல் டிகோரை வாங்க நினைக்கலாம். ஆனால் எலக்ட்ரானிக் காரின் விலை அதைவிட குறைவு. டைகோர் 26kWh லித்தியம் அயன் பேட்டரி 75bhp மற்றும் 170 நீயூட்டன் மீட்டர் திறனைக் கொண்டுள்ளது.
Dzire பெட்ரோல் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. அதே நேரத்தில் CNG 1.2l லி பெட்ரோல் வேரியண்டில் கிடைக்கிறது. இது லிட்டருக்கு 23 கிமீக்கு மேல் மைலேஜ் தருகிறது. Dzire இன் CNG பதிப்பு 77bhp என்ற குறைந்த ஆற்றலுடன் உருவாக்கப்பட்டிருந்தாலும், 31.12km/kg 31 கிமீ மைலேஜ் வழங்கக் கூடியது. டைகர் 73 bhp திறனுடன் 26.49 km/kg லிட்டருக்கு 26 கிமீ மைலேஜ் வழங்கிறது.
எலெக்ட்ரிக் கார்களில் கியர்பாக்ஸ் அல்லது எஞ்சின் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, மேலும் செயல்திறனும் மென்மையான பவர் டெலிவரியுடன் இருக்கும். டைகர் எலெக்ட்ரிக் கார் நகர பயன்பாட்டிற்கு ஏற்றது. பெட்ரோல் அல்லது சிஎன்ஜி கார்களுடன் ஒப்பிடுகையில், இதன் செயல்திறன் சிறந்தது என்பதில் சந்தேகமே இல்லை. நேச்சுரல் கேஸ் எஞ்ஜின் கார் குறைந்த செயல்திறன் கொண்டது. ஆனால் பெட்ரோல் வேரியண்ட் கார் நகரம் மற்றும் நெடுஞ்சாலையில் பயன்படுத்த போதுமான அலவு டார்க் ஐ வழங்குகிறது. எலெக்ட்ரிக் கார்கள் செயல்திறன் அடிப்படையில் ஈர்க்கப்பட்டாலும், அவை கார்பன் உமிழ்வுகள் இல்லாதது சிறப்பு. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. சி.என்.ஜி. வேரியண்ட் கார்களும் சிறந்தது.
கார்களை வாங்குவதற்கு முன்பு, அதன் விலையை நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்படியெனில், எலெக்ட்ரிக் கார் பராமரிக்க எளிதானது. ஆனால், மின்சாரக் கட்டணத்தைப் பொறுத்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு சிஎன்ஜி கார் அவ்வளவு அதிக விலை இல்லைதான்/. ஆனால், என்ஜினை நிரப்பும் சற்றே விலை அதிகம் பிடிக்கும். இருப்பினும் CNG மற்றும் மின்சாரம் இரண்டும் பெட்ரோல் காரை விட விலை குறைவாகவே உள்ளன. இது இப்போது இயங்குவதற்கு மிகவும் விலை உயர்ந்தது, இதன் விலை மாறுபாட்டைப் பொறுத்து கி.மீ.க்கு 5 முதல் 6 வரை வருகிறது. மற்றொரு காரணி என்னவென்றால், நீண்ட காலத்திற்கு டீசல் அல்லது பெட்ரோல் காரை விட மின்சார கார்களுக்கு மிகக் குறைவான பராமரிப்பு தேவைப்படுகிறது. எனவே, பெட்ரோல் கார்கள் பாரமரிப்பதற்கு ஆகும் செலவு உண்மையில் அதிகம், ஆனால் அது இன்னும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் வேரியண்ட் கார் விலை குறைவு.
எலக்ட்ரிக் கார்கள் என்றால் அதை சார்ஜ் செய்வது என்பது எளிதானது இல்லை. சார்ஜிங் பாயிண்டர்கள் எல்லா இடங்களிலும் இருந்தால் தான் அதை பயன்படுத்த முடியும் என்பது உண்மை.
சரி, எந்த காரை தான் வாங்குவது. இன்று அதிகரித்து வரும் எரிபொருள் விலையில் வாங்கும் போது ஒரு மின்சாரம் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. மேலும், 50 கிமீ க்கும் குறைவான பயன்படுத்தும் நகரப் பயணியாக, Tigor EV சரியானது. வாங்க கூடிய விலையில் உள்ள ஒரே எலக்ட்ரானிக் கார் டைகர் மட்டுமே. நகரத்தில் பயன்படுத்தப்படும் காராக, Tigor EV ஸ்கோர் மற்றும் அதிக சார்ஜிங் நிலையங்கள் இருப்பதால், சார்ஜ் செய்வது அவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்காது. இருப்பினும், சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதிகள் பெரிய நகரங்களில் மட்டுமே இருக்கிறது.
சிஎன்ஜி கார் பராமரிப்பதற்கு மிகவும் சிக்கனமானது. ஏனெனில் அது முற்றிலும் குறைந்த விலையில் கிடைக்கிறது. எல்லா நகரங்களும் அதிக சிஎன்ஜி நிலையங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் சார்ஜிங் ஸ்டேஷன் அல்லது பார்க்கிங் என்பது பெருநகரங்களில் நடைமுறையில் உள்ளது.
எல்க்ட்ரானிக் கார்கள் அதிகமாக மக்களின் விருப்பமாக இருந்தாலும், அதே நிலையில் சி.என்.ஜி. எஞ்ஜின் கார்களும் உங்களுக்கு பயனளிக்கக் கூடியதுதான். பெட்ரோல் விலையை பொறுத்தே அதை வாங்குவதை குறித்து மக்கள் முடிவு செய்வார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)