ரூ. 1.5 லட்சம்! ஆசையாக வாங்கிய ஓலா ஸ்கூட்டரை எரித்தது ஏன்? - உரிமையாளர் விளக்கம்
பார்க்கும் பொழுது ஒரு எரிச்சல் வருகிறதல்லவா, அது மன அழுத்தத்தை உண்டாக்கிறது. ஒரு நாளில் எரித்துவிட்டால் அந்த அழுத்தம் ஒரே நாள்தானே இருக்கும்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் மருத்துவர் பிரித்திவிராஜ். 43 வயதாகும் இவர், சமீபத்தில் வாங்கிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
அண்மையில் பிரித்திவிராஜ் ஆன்லைனில் ஓலா எலெக்ட்ரிக் புரோ எஸ் ஸ்கூட்டரை 1.5 லட்சம் ரூபாய்க்கு ஆன்லைனில் ஆடர் செய்து வாங்கியிருக்கிறார். வாங்கிய நாள் முதலாகவே ஸ்கூட்டரில் பிரச்சினை இருந்திருக்கிறது. இது குறித்து அவ்வபோது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு புகார் அளித்ததாகவும், கால தாமதமாக அவர்கள் ஸ்கூட்டரை சரி செய்து மீண்டும் அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கிறார் பிரித்திவிராஜ். என்னதான் ஸ்கூட்டரை நிறுவனம் சரி செய்து அனுப்பி வைத்தாலும் மீண்டும் மீண்டும் பிரச்சினை வந்தததால் ஆத்திரம்டைந்த அவர் தனது ஸ்கூட்டரை எரித்து, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்திருக்கிறார். இந்நிலையில் யூடியூப் நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் தான் ஏன் ஸ்கூட்டரை எரித்தேன் என விளக்கமளித்திருக்கிறார்.
#Thread :
— Sidharth.M.P (@sdhrthmp) April 27, 2022
Frustrated with technical& performance issues with his 3-month-old @OlaElectric Scooter, @PrithvR set it ablaze, has no regrets
He tells me: Vehicle claims range of 181kms; on screen it shows 134km, but barely performs 60kms.
This is after multiple service visits + pic.twitter.com/VFjdY7dF7G
“ஸ்கூட்டரை ஜனவரி மாதம் வாங்கினேன் . வாங்கிய நாள் முதலே சார்ஜிங் பிரச்சினை, ரெஜிஸ்ட்ரேசன் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்தித்தேன். இதனால் நான் நிறுவனத்திடம் புகார் அளித்தேன். அவர்கள் ஸ்கூட்டரை சரி செய்து அனுப்புவார்கள் , ஸ்கூட்டர் இரண்டு நாட்கள் சரியாக இருக்கும் , பிறகு ஏதாவது பிரச்சினையை சந்திக்கும்.. அந்த சமயத்தில் ஸ்கூட்டரில் சார்ஜ் ஃபுல்லாக இருக்கும் ஆனால் குறைவாக இருப்பது போல் காட்டும். இது பலமுறை நடந்திருக்கிறது. ஸ்கூட்டரை ரெஜிஸ்டர் முறையாக செய்து தரும்படி பலமுறை கோரிக்கை வைத்தேன். 40 கிமீ தூரத்தில் இருக்கும் குடியாத்தம் பதிவு அலுவலகத்திற்கு ஸ்கூட்டரை எடுத்து வந்தால் , பதிவு செய்து தருகிறோம் என்றார்கள் . உடனே ஸ்கூட்டருக்கு முழுமையாக சார்ஜ் செய்துவிட்டு , குடியாத்தம் நோக்கி செல்லும் பொழுது ஆம்பூர் அருகே உள்ள கிராமத்தில் ஸ்கூட்டர் சார்ஜ் இல்லாமல் நின்றுவிட்டது. உடனே ஓலா கஸ்டமர் கேரை தொடர்புக்கொண்டு நடந்தவற்றை சொன்னேன். 3 , 4 மணி நேரம் ஆகியும் பதில் வரவில்லை. வெயிலில் அவ்வளவு நேரம் காத்திருந்தேன். அதனால் ஆத்திரமடைந்துதான் ஸ்கூட்டரை எரித்தேன். 1.5 லட்சம் பணம் போனால் போகட்டும் நாம் சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொருமுறையும் அதனை பார்க்கிங்கில் பார்க்கும் பொழுது ஒரு எரிச்சல் வருகிறதல்லவா, அது மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. ஒரு நாளில் எரித்துவிட்டால் அந்த அழுத்தம் ஒரே நாள்தானே இருக்கும். இப்போதும் நிறுவனத்தில் இருந்து தொடர்புக்கொண்டு யாருக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் நாங்கள் பைக்கை மாற்றி தருகிறோம் என்றார்கள். நான் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என அழைப்பை துண்டித்துவிட்டேன்” என்றார் பிரித்திவிராஜ் .