XUV700 Facelift: அப்படி போடு.. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மஹிந்திரா XUV700.. என்னென்ன மாற்றங்கள் இருக்கு?
Mahindra XUV700 Facelift: XUV700, 2021இல் அறிமுகமானதிலிருந்து வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த மாடலின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு சோதனை ஓட்டமானது நடைப்பெற்று வருகிறது.

மஹிந்திராவின் பிரபலமான பிரீமியம் SUV மாடலான XUV700 மாடலில் ஃபேஸ்லிஃப்ட் டெஸ்ட்டிங் நடந்து வரும் நிலையில் அதன் புதிய தோற்றத்தை காண கார் பிரியர்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மஹிந்திராவின் XUV700:
மஹிந்திராவின் பிரபலமான பிரீமியம் SUV மாடல் XUV700, 2021இல் அறிமுகமானதிலிருந்து வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த மாடலின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு சோதனை ஓட்டமானது நடைப்பெற்று வருகிறது. இதன் படங்கள் வெளியாகி வைரலான நிலையில் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் கார் மாடலானது அறிமுகமானதில் இருந்து எந்த வித மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு வரவுள்ளது.
2026-ல் அறிமுகம்?
மஹிந்திரா நிறுவனம், XUV700 ஃபேஸ்லிஃப்ட் மாடலை 2026ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் நவீன டெக்க்னாலஜிகள் இடம்பெறவிருக்கின்றன. இது, சந்தையில் புதிய போட்டியாளர்களுடன் மோதும் XUV700-க்கு புதிய புது உயிரை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிப்புற மாற்றங்கள்
இந்த XUV700 ஃபேஸ்லிஃப்ட் மாடல் சிறிய ஸ்டைலிங் அப்டேட்கள் Mahindra-வின் XUV.e9 மாடலிலிருந்து சில ஸ்டைலிங் அப்டெட்கள் இடம்பெறலாம். முன்புறத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும். புதிய அலாய் வீல்ஸ் இருக்காலம் எனவும், ஆனால் தற்போதைய ஃப்ளஷ் டோர் ஹாண்டில்கள் தொடரும். பின்புற டெயில்லைட்கள் டிசைனில் சிறிய மேம்பாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உட்புறத்தில் என்ன மாற்றம்?
நவீன அம்சங்கள் முக்கிய மாற்றங்கள் உட்புறத்தில் வரவுள்ளது. புதிய டாஷ்போர்ட் டிசைன், மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மற்றும் ADAS பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படலாம். XUV.e9 இல் உள்ள சில டெக்க்னாலஜி அம்சங்களான பின்புற ஒட்டோமேன், செல்ஃப் பார்க்கிங், அப்கிரேடட் டால்பி ஆடியோவுடன் கூடிய ஹார்மன் ஆடியோ போன்ற XUV.e9 இடம்பெற்ற அம்சங்கள XUV 700-ல் ஃபேஸ்லிஃப்ட்-இல் அமைய வாய்ப்புள்ளது. மேலும், பின்புறம் அமர்பவர்களுக்கான வசதிகளும் மேம்படுத்தப்படும்.

என்ஜினில் மாற்றமில்லை:
தற்போதைய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின்கள் தொடரும். மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை தொடரும். என்ஜின் அவுட்புட் அல்லது டார்க் தரவுகளில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
விற்பனை நிலவரம் எப்படி?
தற்போதைய விற்பனை சுமார் 6,500 யூனிட்களாக இருக்கிறது. தொடக்கத்தில் இது மாதத்திற்கு 7,000 யூனிட்கள் விற்பனையாகி வந்தது. தற்போதைய சந்தையில் Toyota Innova Hycross தவிர மற்ற SUV மாடல்களைவிட XUV700 அதிக விற்பனையை பெற்று வருகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் வந்த பிறகு, விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்று இதன் மாடல் பெயர் XUV 7XO என வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






















