Mahindra XUV 3XO EV: அறிமுகமானது XUV 3XO மின்சார கார்.. மஹிந்திராவின் விலை குறைந்த இவி இதுதான் - ரேட் எவ்ளோ?
மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய Mahindra XUV 3XO மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மஹிந்திராவின் விலை குறைந்த மின்சார கார் இதுவே ஆகும்.

Mahindra XUV 3XO EV Launched: இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக திகழ்வது மஹிந்திரா. எஸ்யூவி கார் தயாரிப்பில் இந்தியாவின் முதன்மையான நிறுவனமாக மஹிந்திரா உள்ளது. மஹிந்திரா நிறுவனம் நேற்று Mahindra XUV 7XO காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் புக்கிங் தீவிரமாக நடந்து வருகிறது.
Mahindra XUV 3XO அறிமுகம்:
இந்த நிலையில், இன்று மஹிந்திரா நிறுவனம் தனது புதிய மின்சார காரான Mahindra XUV 3XO காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சார கார்களின் சந்தையில் இந்த காரின் வருகைக்காக பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். மஹிந்திராவின் அடையாளமான கம்பீரமான தோற்றத்துடன் இந்த கார் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
விலை:
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.89 லட்சம் ஆகும். இந்த விலை எக்ஸ் ஷோ ரூம் விலை ஆகும். இந்த காரின் ஆன்ரோட் விலை ரூபாய் 14.74 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 2 வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது Mahindra XUV 3XO AX5 மற்றும் Mahindra XUV 3XO AX7 ஆகும். Mahindra XUV 3XO AX7 காரின் எக்ஸ் ஷோ ரூம் விலை ரூபாய் 14.96 லட்சம் ஆகும். இதன் ஆன்ரோட் விலை ரூபாய் 15.86 லட்சம் ஆகும்.
மைலேஜ் எப்படி?

இந்த கார் 5 கதவுகள் கொண்ட கார் ஆகும். இந்த கார் ஆட்டோமெட்டிக் வெர்சன் ஆகும். 5 சீட்டர் கார் ஆகும். இந்த காரில் 39.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 285 கிலோ மீட்டர் வரை மைலேஜ் ( ரியல் ரேஞ்ச்) தருகிறது. 310 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 147.51 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 17 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்புகள்:
பனோரமிக் சன்ரூஃப் மேற்கூரை கொண்டது. டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி கொண்டது. 360 டிகிரி கேமரா வசதி கொண்டது. எலக்ட்ரானிக் பார்க்கிங் வசதி கொண்டது. ஆட்டோ டிம்மிங் பக்கவாட்டு கண்ணாடிகள் கொண்டது. ஆட்டோமெட்டிக் வைபர் வசதி, ஆட்டோமெட்டிக் முகப்பு விளக்குகளும் உள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக் வசதி உள்ளது. வயர்லஸ் சார்ஜர் சவதி உள்ளது. 10.25 டிஸ்ப்ளே டச் ஸ்கிரீன் வசதி கொண்டது. மஹிந்திரா நிறுவனம் இதுவரை தயாரித்துள்ள மின்சார கார்களிலே இந்த கார்தான் விலை குறைவான கார் ஆகும். இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த காருக்கு தனி வரவேற்பு உருவாகியுள்ளது. இந்த கார் வரும் 26ம் தேதி பிப்ரவரி முதல் வாடிக்கையாளர்களுக்கு இந்த விநியோகிக்கப்படும்.




















