மேலும் அறிய

Mahindra SUVs for 2024: 2024-ஐ எஸ்.யு.வி.க்களால் நிரப்ப மஹிந்திரா திட்டம்! 6 புதிய கார்களை களமிறக்க அசத்தல் முடிவு!

Mahindra SUVs for 2024: மஹிந்திரா நிறுவனம் 2024ம் ஆண்டில் மொத்தமாக ஆறு புதிய எஸ்யுவிக்களை, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

Mahindra SUVs for 2024: மஹிந்திரா நிறுவனம் 2024ம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்கனவே இருக்கும் மாடல்களின் மேம்பாடு தொடர்பாகவும், இரண்டாம் பாதியில் புதிய எஸ்யுவிக்கள் தொடர்பான அப்டேட்டும் வெளியாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

மஹிந்திரா எஸ்யுவி மாடல்கள்:

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் 2024 ஆம் ஆண்டில் குறைந்தது ஆறு புதிய எஸ்யூவிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை XUV300, XUV400 மற்றும் XUV700 போன்ற தற்போதைய மாடல்களுக்கான புதுப்பிப்புகளாக இருந்தாலும், தார் 5-டோர் மற்றும் XUV.e8 போன்ற புதிய மாடல்களும் இருக்கும். அதுதொடர்பான தற்போது வரை கிடைத்துள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Mahindra XUV400 EV feature update:

விலை - ரூ.16 லட்சம் முதல் ரூ. 19.5 லட்சம் வரை

அறிமுகம்: 2024ம் ஆண்டு தொடக்கத்தில்

அடுத்த ஆண்டு அறிமுகமாகும் மஹிந்த்ரா நிறுவனத்தின் எஸ்யுவிக்களில், மேம்படுத்தப்பட்ட XUV400 மாடல் முதலாவதாக இருக்கும்.  XUV400 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்தில் பல சிறிய அப்டேட்கள் வழங்கப்பட்டாலும், அது இன்னும் குறைவாக விற்பனையாகும் மாடலாகவே உள்ளது. இதன் காரணமாக விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படும் அப்டேட்டில்,  மின்சார எஸ்யூவியின் கேபினுக்கு கூடுதல் அம்சங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ செயல்பாட்டை உள்ளடக்கிய பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை மிகவும் குறிப்பிடத்தக்கது. இதற்கு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டாஷ்போர்டும் தேவைப்படும். ஆனாலும், சப்-4 மீட்டர் கேட்டகிரியில் இடம்பெறும் ADAS மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற அம்சங்களை இருக்க வாய்ப்பில்லை. வெளிப்புற ஒப்பனை  அல்லது இயந்திர புதுப்பிப்புகளும் இடம்பெற வாய்ப்பில்லை.

Mahindra XUV300 facelift:

விலை - ரூ.8.5 லட்சம் முதல் ரூ. 15.5 லட்சம் வரை

அறிமுகம்: பிப்ரவரி, 2024

விரிவாக  மறுவடிவமைப்பு செய்யப்பட்ட XUV300 ஆனது புதிய முன்பக்க மற்றும் பின்புறங்களில் பகல் நேரங்களில் எரியும் எல்.இ.டி விளக்குகள் உடன்,  மற்றும் இணைக்கப்பட்ட எல்.ஈ.டி லைட் பார்களும் வழங்கப்படுகிறது.  இதன் வடிவமைப்பானது மஹிந்திராவின் வரவிருக்கும் புதிய BE ரக SUV-ஐ ஒத்திருக்கும். அதேநேரம்,  அதன் ஒட்டுமொத்த பரிமாணங்களானது சப்-4-மீட்டர் வரம்பிற்குள் இருக்கும் தற்போதைய பதிப்பைப் போலவே இருக்கும்.

மஹிந்திரா இன்டீரியரை மிகவும் நவீனமாக்க கூடுதல் அம்சங்களை சேர்க்கிறது.  அதன்படி,  10.25 அங்குல தொடுதிரை போன்ற கூடுதல் அம்சங்களைச் சேர்க்கிறது. பனோரமிக் சன்ரூஃப் கூட இருக்க வாய்ப்புள்ளது. XUV300  ஃபேஸ்லிப்ட் ஏற்கனவே இருக்கும் இன்ஜின் ஆப்ஷன்களுடன் தொடரும். அதன்படி, 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆப்ஷன்கள் கிடைக்கும்.

Mahindra XUV700 with captain seats

விலை - ரூ.22 லட்சம் தொடங்கி ரூ.26 லட்சம் வரை

அறிமுகம்: தேதி அறிவிக்கப்படவில்லை

XUV700 மாடலானது அதன் பயணத்தில் ஆரம்ப காலத்தில் உள்ளது. தற்போது 5- மற்றும் 7-சீட்டர் வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது இந்நிலையில் இந்த மாடலை 6 இருக்கை வேரியண்ட்டுடன் நடுத்தர வரிசையில் கேப்டன் நாற்காலிகளுடன் விரிவுபடுத்தும். XUV700 இன் போட்டியாளர்களான ஹூண்டாய் அல்கசார் மற்றும் டாடா சஃபாரி இரண்டும் கேப்டன் நாற்காலிகளுடன் 6-சீட்டர் மாடல்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் வசதியை பெறுவதோடு, கூல்ட் இருக்கைகளின் அறிமுகத்தைக் கூட பார்க்க முடியும். மற்றபடி எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.  எனவே தற்போதுள்ள 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் அந்தந்த கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் தொடரும்.

New Mahindra XUV300 EV

விலை: ரூ.14 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை

அறிமுக தேதி: ஜுன், 2024

XUV400 மாடலால் டாடா நெக்ஸான் EV உடன் சந்தையில் போட்டியிட முடியவில்லை . எனவே, எண்ட்ரி லெவல் மின்சார SUV பிரிவில் அதிக போட்டி நிலையைப் பெற, மஹிந்திரா ஒரு புதிய XUV300 EV ஐ அறிமுகப்படுத்துகிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருக்கும் இந்த மாடலானது, தற்போதுள்ள XUV400 க்கு கீழே நிலைநிறுத்தப்படும்.  XUV400 ஐ விட சிறிய பூட் கொண்டதாக இருந்தாலும், உட்புற அமைப்பு XUV300 ஃபேஸ்லிப்ட்டுடன் பகிரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. XUV300 EV ஆனது 35kWh பேட்டரியுடன் வரும், இது டாப்-ஸ்பெக் XUV400 இல் காணப்படும் 40kWh பேட்டரியை விட சிறியது. எவ்வாறாயினும், தற்போது வரம்பு அல்லது மின்சார மோட்டார் விவரக்குறிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை. தற்போதுள்ள XUV400 வரம்பை விட இதன் விலை சுமார் ரூ.2 லட்சம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mahindra Thar 5-door:

விலை: ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை

அறிமுக தேதி: 2024ம் ஆண்டு நடுப்பகுதியில்

இந்த கார் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்க, சோதனை ஓட்ட புகைப்படங்களும் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. தார் லைன் - அப்பை அதிகரிக்கும் நோக்கில் புதிஅ 5 டோர் மாடல் அறிமுகமாகவுள்ளது. இதன் நீளமான வீல்பேஸ் இரண்டாவது வரிசை மற்றும் பூட்ஸ் பகுதிக்கு கூடுதல் இடவசதிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்பையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.   இது ஒரு பெரிய 10.25-இன்ச் தொடுதிரை மற்றும் சன்ரூஃப் உட்பட உட்புறத்தில் கூடுதல் அம்சங்கள் இடம்பெறலாம். தற்போதைய 2.2-லிட்டர் டீசல் மற்றும் 2.0-லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் அதே 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோவுடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Mahindra XUV.e8:

விலை: ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை

அறிமுக தேதி: 2024ம் ஆண்டு இறுதியில்

அடுத்த ஆண்டு கடைசியாக வரவிருப்பது XUV.e8 ஆகும்.  இது மஹிந்திராவின் அடுத்த தலைமுறை மின்சார வாகனத்தின் முதல் மாடலாக இருக்கும். XUV.e8 ஆனது INGLO ஸ்கேட்போர்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தாலும் , கருத்துரீதியாக XUV700ஐப் போலவே உள்ளது. 230hp மற்றும் 350hp ஆகிய இரண்டு ஆற்றல் வெளியீடுகளுடன் 80kWh பேட்டரியைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.  இது ஒரு ஆல்-வீல் டிரைவைக் கொடுக்கும் இரட்டை-மோட்டார் அமைப்பையும் கொண்டுள்ளது. உட்புறத்தில், XUV700 இன் பல பாகங்கள் திரும்பினாலும், XUV.e8 ஆனது டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் புதிய திரை ஆகியவற்றை கொண்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Embed widget