BE 6 Batman Edition: அட்ராசக்க..! இந்தியாவில் BE 6 பேட்மேனை களமிறக்கிய மஹிந்திரா - இண்டீரியரில் மிரட்டும் டார்க் நைட் தீம்
BE 6 Batman Edition: மஹிந்திரா நிறுவனம் தனது BE 6 மின்சார காரின் பேட்மேன் எடிஷனை அறிமுகப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளது.

BE 6 Batman Edition: மஹிந்திரா BE 6 மின்சார காரின் பேட்மேன் எடிஷனின் விலை 27 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BE 6 பேட்மேன் எடிஷன்:
சுதந்திர தினத்தை ஒட்டி மஹிந்திர நிறுவனம் தனது BE 6 கார் மாடலின் பேட்மேன் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் விலை உள்நாட்டில் 27 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கவுள்ள காருக்கான முன்பதிவுக்கு, விருப்பமுள்ளவகள் 21 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும். தொடர்ந்து, சர்வதேச பேட்மேன் தினமான செப்டம்பர் 20ம் தேதி முதல் கார்களின் விநியோகம் தொடங்க உள்ளது. லிமிடெட் எடிஷனான இந்த காரில் மொத்தம் 300 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

ப்ரீமியம் விலை
மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து, இந்த பேட்மேன் எடிஷன் கார் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிரத்யேக BE 6 பேட்மேன் எடிஷனின் விலையானது, வழக்கமான பேக் 3 வேரியண்டை காட்டிலும் 89 ஆயிரம் ரூபாய் கூடுதல் விலையை கொண்டுள்ளது.
BE 6 பேட்மேன் எடிஷனின் வெளிப்புற விவரங்கள்:
BE 6 பேட்மேன் எடிஷனானது பிரத்யேகமான சாடின் பிளாக் நிறத்தில் வழங்கப்படுகிறது. வீல் ஆர்ச்சர்ஸ் மற்றும் பம்பர்களில் க்ளோஸ் பிளாக் நிறம் தீட்டப்பட்டுள்ளது. முன்புற கதவுகளில் பேட்மேன் தீமிலான அடையாளமும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக வாகனத்தின் பக்கவாட்டிலும், கண்ணாடிகளிலும் கூட பேட்மேனின் லோகோக்கள் இடம்பெற்றுள்ளன. தங்க நிறத்திலான பேட்மேன் லோகோக்கள், முன்புற ஃபெண்டர்கள், வீல் ஹப்கேப்கள், பின்புற பம்பர் மற்றும் விண்ட்ஷீல்ட் ஆகியவற்றிலும் காணலாம். சஸ்பென்ஷன் ஸ்ப்ரிங்ஸ் மற்றும் ப்ரேக் காலிபர்களும் தங்க நிறத்திலேயே முடிக்கப்பட்டுள்ளன. டெயில்கேட்டில் “BE 6 தி டார்க் நைட்” என குறிப்பிடப்பட்ட பேட்ஜும் இடம்பெற்றுள்ளது.

BE 6 பேட்மேன் எடிஷனின் உட்புற விவரங்கள்:
BE 6 பேட்மேன் எடிஷனானது உட்புறத்தில் கருப்பு மற்றும் கோல்ட் ஆக்செண்ட்ஸ் என இரட்டை வண்ணங்களில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ட்ரைவரின் இருக்கையை சுற்றிய வெளிப்புறம் தங்க நிற ஃபினிஷிங் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், அப்ஹோல்ஸ்ட்ரியில் கோல்ட் ஸ்ட்ரிட்ச் செய்யப்பட்டுள்ளது. கன்சோலின் மேல்புறத்தில் பேட்மேன் பிளக்கும் இடம்பெற்றுள்ளது. ஏசி வெண்ட், கீ ஃபாப் மற்றும் செண்டர் கன்சோலில் உள்ள ரோடரி டயல் ஆகியவற்றில் கோல் ட் ஆக்செண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இருக்கைகள், இண்டீரியர் லேபிள், இண்டீரியர் டோர் ஹேண்டில்ஸ், பயணிகள் பக்கமான டேஷ்போர்ட் மற்றும் ஸ்டியரிங் வீல்களில் உள்ள பூஸ்ட் பட்டன் ஆகியவற்றில் டார்க் நைட் ட்ரையாலஜி படங்களின் லோகோக்கள் கவனத்தை ஈர்க்கின்றன. அதே படத்தின் தீமிலேயே பனோரமிக் சன்ரூஃப் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. படல் லேம்ப்கள் கூட பேட்மேன் லோகோவை பிரதிபலிக்கின்றன. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் டிஸ்பிளேக்களானது பேட்மேன் எடிஷன் வெல்கம் அனிமேஷன்களை கொண்டுள்ளது. பேட்மேன் தீம் ஸ்டார்ட்-அப் சவுண்டும் இடம்பெற்றுள்ளது.
BE 6 பேட்மேன் எடிஷன் - பேட்டரி, இதர அம்சங்கள்:
மஹிந்திராவின் BE 6 பேட்மேன் எடிஷனானது காரின் டாப் ஸ்பெக் பேக் 3 வேரியண்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த காரில் இடம்பெற்றுள்ள 79KWh பேட்டரி ஆனது, முழுமையாக சார்ஜ் செய்தால் 682 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. இதன் ரியர் ஆக்சில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டாரானது, 286hp மற்றும் 380Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. ஏசி சார்ஜிங் ஆப்ஷன்களும் உள்ளன. ஆனால், அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. டார்க் எடிஷன் எஸ்யுவிக்கள் பிரபலமாக உள்ள சூழலில் அந்த பட்டியலில் புதிய எடிஷனாக இந்த BE 6 பேட்மேன் எடிஷனை மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கிடைக்கும் மிகவும் திவிரமான சினிஸ்டர் லுக்கிங் டார்க் தீம் எஸ்யுவி ஆக BE 6 இருக்கும் என கூறப்படுகிறது.





















