Kia K4 Sedan: தரமான லுக்கில் கியாவின் கே4 செடான்! அம்சங்கள், வடிவமைப்பு, விலை விவரங்கள் உள்ளே?
Kia K4 Sedan: கியா நிறுவனத்தின் கே4 செடான் கார் மாடல் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Kia K4 Sedan: கியா நிறுவனத்தின் புதிய கே4 செடான் கார் மாடல், கார் சந்தையில் ஹோண்டா சிவிக் மற்றும் டொயோட்டா கொரொல்லா கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kia K4 Sedan:
கியா ஆட்டோமொபைல் நிறுவனம் 'ஆப்போசிட்ஸ் யுனைடெட்' ஸ்டைலிங் தத்துவத்தின் அடிப்படையில், புத்தம் புதிய வடிவமைப்புடன் K4 செடானின் இரண்டாம் தலைமுறை பதிப்பை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. வாகனத்தின் தொழில்நுட்ப ரீதியான விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், செடானின் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பானது நியூயார்க் ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டதன் மூலம் வெளியாகியுள்ளது.
Kia K4 Sedan வெளிப்புற அம்சங்கள்:
நவீன மற்றும் தனித்துவமான வடிவத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, கியாவின் கே4 செடான் தெரிவித்துள்ளது. Carnival, EV5, EV9 போன்ற கியாவின் புதிய கார்களின் வடிவமைப்பை கே4 செடான் தொடர்கிறது. முன்பக்கத்தில், K4 ஆனது கூர்மையான L-வடிவ செங்குத்து LED முகப்பு விளக்குகளை கொண்டுள்ளது. நடுவில் ஒரு சிறிய புலியின் மூக்கை போன்ற கிரில் உள்ளது. செடான் ஸ்வூப்பிங் ரூஃப்லைன் உடன், பெரிய பின்புற விண்ட்ஸ்கிரீன் லிப்ட்பேக் கூபே போன்ற தோற்றத்தை பெற்றுள்ளது. எல் வடிவ லைட்டிங் தீம் பின்புற விளக்குகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. பின்புற கதவு கைப்பிடிகள் சி-பில்லரில் இணைக்கப்பட்டுள்ளன.
Take a moment to appreciate the bold and futuristic look of the #KiaK4.
— Hyundai Motor Group (@HMGnewsroom) March 22, 2024
Premiering soon on March 27th at the @NYAutoShow.#Kia #K4 #Sedan #Design pic.twitter.com/UrWbxI75nr
Kia K4 Sedan உட்புற அம்சங்கள்:
வாகனத்தின் உட்புறமானது ஸ்லேட் கிரீன் தீமை கொண்டுள்ளது. அதோடு கேன்யன் பிரவுன், ஓனிக்ஸ் பிளாக் மற்றும் மீடியம் கிரே ஆகிய வண்ண ஆப்ஷன்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் கதவுகள் மாறுபட்ட வண்ண கலவைகளைக் கொண்டுள்ளன. இரண்டு டிஸ்பிளே ஸ்கிரீன்களுக்கு கீழ் ஒரு ரோட்டரி கன்ட்ரோலருடன் வைக்கப்பட்டுள்ள சில கைகளால் இயக்கப்படக் கூடிய பொத்தான்களும் இடம்பெற்றுள்ளன. இதர விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்போது, வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 Kia K4 வெளியீடு எப்போது?
Kia K4 மார்ச் 27 ஆம் தேதி நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹோண்டா சிவிக், டொயோட்டா கொரோலா மற்றும் ஹூண்டாய் எலன்ட்ரா ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த கார் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுமா? இல்லையா? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை இல்லை. அதேநேரம், கியா, இந்திய சந்தையில் கிளாவிஸ் எனப்படும் புதிய சப் 4-மீட்டர் லைஃப்ஸ்டைல் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது கியா நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் சோனெட் மற்றும் செல்டோஸ் இடையே நிறுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன..

