மேலும் அறிய

Kawasaki W175: ராயல் என்ஃபீல்டிற்கு சவால் விடும் கவாசகி W175 - விலையில் சில ஆயிரங்களை குறைத்து அதிரடி ஆஃபர்..!

Kawasaki W175 Price Cut: கவாசகி நிறுவனத்தின் W175 மாடலில் புதிய ஆப்ஷன்களுடன், விலையிலும் அதிரடியாக 25 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

Kawasaki W175 Price Cut: விலை குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து கவாசகி நிறுவனத்தின் W175  மாடலின் புதிய தொடக்க விலை, ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

கவாசகி W175 மோட்டார்சைக்கிள்:

சமீபத்தில் முடிவடைந்த இந்திய பைக் வீக் 2023 இல், கவாசகி நிறுவனம் தனது W175 மாடலின் புதிய வேரியண்ட்டாக W175 ஸ்ட்ரீட்-ஐ அறிமுகப்படுத்தியது. அதன் விலை ஒரு லட்சத்து 35 ஆயிரம், ரூபாய் எனவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில்,  ஜப்பானிய பைக் தயாரிப்பாளரான கவாசகி தனது W175 ஸ்டேண்டர்ட் மாடலின் விலையில் ரூ.25,000 குறைத்து அறிவித்துள்ளது.

புதிய மாற்றங்கள் என்ன?

டீம் கிரீன் என்ட்ரி-லெவல் மோட்டார்சைக்கிள் நிறத்தைப் பொறுத்து ரூ.1.47 லட்சம் முதல் ரூ.1.49 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட விலைக் குறைப்பு நடவடிக்கை மூலம்,  கவாஸாகி டபிள்யூ175 விலையானது முறையிஏ ரூ.1.22 லட்சம் முதல் ரூ.1.31 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு,  கவாசகி W175 மாடலில் புதியதாக இரண்டு வண்ண ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, மெட்டாலிக் ஓஷன் ப்ளூ (ரூ. 1.31 லட்சம்) மற்றும் மெட்டாலிக் கிராஃபைட் கிரே (ரூ. 1.29 லட்சம்). தற்போது எபோனி (ரூ. 1.22 லட்சம்) மற்றும் கேண்டி பெர்சிமோன் ரெட் (ரூ. 1.24 லட்சம்) ஆகிய வண்ண விருப்பங்களுடன் இந்த மாடல் கிடைக்கிறது.

பவர் டிரெயின்:

 பவர்-டிரெயினை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. 177சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.  5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 13ஹெச்பி மற்றும் 13.2என்எம் ஆற்றலை உருவாக்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் மாடலுடன் சந்தையில் போட்டியிடுகிறது. இந்த பிராண்டின் மிகவும் மலிவு விலையில் வழங்கப்படும் மோட்டார்சைக்கிளாகவும் இது உள்ளது. இதன் காரணமாக ஆண்டு இறுதியில் இருசக்கர வாகனங்களை வாங்க விரும்புவோர் மத்தியில், கவாசகி W175 மாடலின் விலை குறைப்பு நடவடிக்கை நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

W175 ஆனது எளிமையான ஆனால் வித்தியாசமான அனுபவத்தை மையமாகக் கொண்ட ரெட்ரோ பைக் ஆகும்.  முன்பக்கத்தில் 30 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் கிடைக்கும். முன் மற்றும் பின்புற இடைநீக்கம் கடினமான சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சக்கர அளவுகள் முன்புறத்தில் 80/100-17 ஆகவும்,  பின்புறத்தில் 100/90-17 ஆகவும் உள்ளது.  வயர்-ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், டியூப்லெஸ் டயர்களைப் பெறுகிறது.  சிறிய எல்சிடி டிஜிட்டல் இன்செட் உடன், அடிப்படை ஆலசன் முகப்பு விளக்குக் மற்றும் பெரும்பாலும் அனலாக் இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த டிசைன் தீம் உடன் ஸ்பீடோமீட்டர் உள்ளிட்ட ரெட்ரோ டச்களுடன் தொடர்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK Vs Congress: 8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
TVK Vijay: ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த விஜய்.. அபராதம் உறுதி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
TVK Vijay: ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த விஜய்.. அபராதம் உறுதி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
Breast Cancer: மார்பக புற்றுநோய்: பெண்கள் சுயமாக சோதிப்பது எப்படி? 30 வயசுக்கு மேல என்ன செய்யணும்? மருத்துவர் டிப்ஸ்!
Breast Cancer: மார்பக புற்றுநோய்: பெண்கள் சுயமாக சோதிப்பது எப்படி? 30 வயசுக்கு மேல என்ன செய்யணும்? மருத்துவர் டிப்ஸ்!
With Love Review: ரஜினி சொன்னது உண்மையா? வித் லவ் படம் எப்படி இருக்கு? ஹீரோவாக ஜெயித்தாரா இயக்குனர் அபிஷன்?
With Love Review: ரஜினி சொன்னது உண்மையா? வித் லவ் படம் எப்படி இருக்கு? ஹீரோவாக ஜெயித்தாரா இயக்குனர் அபிஷன்?
ABP Premium

வீடியோ

MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs Congress: 8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
8% ஓட்டு வைத்திருக்கும் திமுகவின் தலைமையை காங். ஏற்பதா.!! மீண்டும் ரவுண்டு கட்டும் மாணிக்கம் தாகூர்
TVK Vijay: ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த விஜய்.. அபராதம் உறுதி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
TVK Vijay: ரூ.15 கோடி வருமானத்தை மறைத்த விஜய்.. அபராதம் உறுதி என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
Breast Cancer: மார்பக புற்றுநோய்: பெண்கள் சுயமாக சோதிப்பது எப்படி? 30 வயசுக்கு மேல என்ன செய்யணும்? மருத்துவர் டிப்ஸ்!
Breast Cancer: மார்பக புற்றுநோய்: பெண்கள் சுயமாக சோதிப்பது எப்படி? 30 வயசுக்கு மேல என்ன செய்யணும்? மருத்துவர் டிப்ஸ்!
With Love Review: ரஜினி சொன்னது உண்மையா? வித் லவ் படம் எப்படி இருக்கு? ஹீரோவாக ஜெயித்தாரா இயக்குனர் அபிஷன்?
With Love Review: ரஜினி சொன்னது உண்மையா? வித் லவ் படம் எப்படி இருக்கு? ஹீரோவாக ஜெயித்தாரா இயக்குனர் அபிஷன்?
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: கல்லூரி மாணவர்கள் ஸ்கிரைப்களா? அதிர்ச்சியில் கல்வியாளர்கள்! ரத்து செய்யப்படுமா உத்தரவு?
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: கல்லூரி மாணவர்கள் ஸ்கிரைப்களா? அதிர்ச்சியில் கல்வியாளர்கள்! ரத்து செய்யப்படுமா உத்தரவு?
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,240 குறைந்தது... வெள்ளிக்கு 40 ஆயிரம் சரிவு.! 2 நாளில் அதிரடி மாற்றம்
TN Roundup: விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? அட்டாக் மோடில் பாஜக, தவெக, தேமுதிக விருப்ப மனு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? அட்டாக் மோடில் பாஜக, தவெக, தேமுதிக விருப்ப மனு - தமிழகத்தில் இதுவரை
Mano Thangaraj: சிறுபான்மையினர் ஓட்டு இனி விஜய்க்கு தானா? .. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதில்!
Mano Thangaraj: சிறுபான்மையினர் ஓட்டு இனி விஜய்க்கு தானா? .. அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன பதில்!
Embed widget