Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
Maruti S Presso Cheapest Automatic Car: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் காரை ரூ.4000 என்ற மாதத்தவணையில் சொந்தமாக்குவதற்கான நிதி திட்ட வழிகாட்டுதல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

Maruti S Presso Cheapest Automatic Car: மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோ ஆட்டோமேடிக் எடிஷனின் தொடக்க விலையானது ரூ.4.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்:
பயணங்களின் போது சுட்டெரிக்கும் வெயில், கொட்டி தீர்க்கும் கனமழையின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, இருசக்கர வாகனத்தில் இருந்து காருக்கு மாற வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கான பணம் கைவசம் இருந்தாலும், கார் ஓட்ட தெரியாதது, மேனுவல் எடிஷனை கையாளவதில் உள்ள சிக்கல் பலரது கனவுக்கான தடைகளாக இருந்தன. அதனை முறியடிக்கும் விதமாக தான் ஆட்டோமேடிக் கார்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் கியரை அடிக்கடி மாற்ற வேண்டியது இல்லை என்பதால் கையாளவது சுலபமானதாகும். முதல்முறையாக கார் வாங்குபவர்கள் குறைந்த பட்ஜெட் வாகனத்தை தேர்வு செய்வது நல்ல தேர்வாகும். அப்படி இருக்கையில் நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் காரை, குறைந்த மாதத்தவணை முறைய்இல் எளிதாக சொந்தமாக்குவதற்கான நிதி திட்டங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
எஸ் ப்ரெஸ்ஸோ ஆட்டோமேடிக் எடிஷன் - விலை
உள்ளூர் சந்தையில் பல எண்ட்ரி லெவல் கார்களை வழங்கி வரும் மாருதி நிறுவனம் தான், நாட்டி மலிவான ஆட்டோமேடிக் காரையும் சந்தையில் கொண்டுள்ளது. அதன்படி, எஸ் ப்ரெஸ்ஸோ காரின் விலை வரம்பானது ரூ.3.50 லட்சத்தில் தொடங்கி ரூ.5.25 லட்சம் வரை நீள்கிறது. இதன் எண்ட்ரி லெவல் ஆட்டோமேடிக் வேரியண்டான VXi-யின் ஆன் ரோட் விலை சென்னையில் 5.18 லட்சம் ரூபாயாக உள்ளது. இதில் ரூ.4.74 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை, பதிவு கட்டணம் சுமார் ரூ.19 ஆயிரம் மற்றும் காப்பீட்டு கட்டணம் சுமார் ரூ.25 ஆயிரம் ஆகியவை அடங்கும்.
எஸ் ப்ரெஸ்ஸோ ஆட்டோமேடிக் எடிஷன் - ரூ.4400 போதும்
பொதுவாகவே வங்கிக் கடன் உதவியுடன் காரை வாங்க விரும்புபவர்கள், பெருந்தொகையை முன்பணமாக செலுத்துவிட்டு, கணிசமான தொகையை கடனமாக பெறுவதே லாபகரமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் நீண்ட கால கடன்சுமை மற்றும் வட்டி செலவை பெரிய அளவில் குறைக்க முடியும். அதோடு, நல்ல சிபில் ஸ்கோரை வைத்திருப்பதன் மூலம், வங்கிகள் 7.45 வட்டி சதவிகிதத்தில் இருந்து கூட வாகன கடன் வழங்க முன்வருகின்றன. அந்த வகையில் சுமார் ரூ.3 லட்சத்தை முன்பணமாக செலுத்தி எஸ் ப்ரெஸ்ஸோவின் ஆட்டோமேடிக் வேரியண்டான VXi-ஐ தேர்வு செய்தால், மீதமுள்ள ரூ.2.18 லட்சத்திற்கு மட்டுமே நீங்கள் கடனுதவியை அணுக வேண்டி இருக்கும்.
அந்த வகையில் 8 சதவிகித வட்டியுடன் 5 ஆண்டுகளுக்கு கடனை திருப்பி செலுத்த முடிவு செய்தால், மாதம் நீங்கள் சுமார் 4 ஆயிரத்து 400 ரூபாயை தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். அசலுடன் கூடுதலாக வட்டியுடன் சுமார் 47 ஆயிரம் ரூபாயை செலுத்தி இருப்பீர்கள். ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயில் இந்த ஆட்டோமேடிக் காரை நீங்கள் சொந்தமாக்கலாம்.
எஸ் ப்ரெஸ்ஸோ ஆட்டோமேடிக் எடிஷன் - 25.3KM மைலேஜ்
எஸ் ப்ரெஸ்ஸோவின் ஆட்டோமேடிக் எடிஷன் பெட்ரோல் பவர்டெயினில் மட்டுமே கிடைக்கிறது. இதில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் கே10சி டூயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின் ஆனது, 5 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் ஷிஃப்ட் ட்ரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. லிட்டருக்கு 25.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி அறிவித்துள்ளது. ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் போக்குவரத்து நெரிசல் மிக்க நகர்ப்பகுதிகளில் 16 கிலோ மீட்டர் வரையில், நெடுஞ்சாலைகளில் 22 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் நீள்வதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
எஸ் ப்ரெஸ்ஸோ - அம்சங்கள், வசதிகள்
பட்ஜெட்டில் கிடைத்தாலும் விலைக்கு நிகரான மதிப்புகளை கொண்ட இந்த காம்பேக்ட் ஹேட்ச்பேக்கானது, 180 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸை கொண்டு மைக்ரோ எஸ்யுவி ஆகவும் சந்தைப்படுத்தப்படுகிறது. 5 பேர் அமரும் வகையிலான இடவசதியுடன், 240 லிட்டர் பூட்-ஸ்பேஸை கொண்டுள்ளது. இதுபோக ஹீடர் ஆப்ஷனுடன் கூடிய மேனுவல் ஏசி, முன்புற இருக்கைகளில் பவர் விண்டோக்கள், பவர் அசிஸ்டட் எலெக்ட்ரிக் ஸ்டியரிங் வீல், ரிமோட் கீலெஸ் எண்ட்ரி ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
தொழில்நுட்ப வசதிகள் அடிப்படையில் 7 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ டச்ஸ்க்ரீன் டிஸ்பிளே, ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய் ஆட்டோ, ப்ளூடூத், யுஎஸ்பி, இந்த பிரிவு கார்களில் முதல்முறையாக ஸ்டியரிங்கிலேயே பொருத்தப்பட்டுள்ள ஆடியோ & வாய்ஸ் கன்ட்ரோல்கள், டிஜிட்டல் க்ளஸ்டர் மற்றும் மிட் டூ ஹை ட்ரிம்களில் 2 ஸ்பீக்கர் செட்-அப் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

எஸ் ப்ரெஸ்ஸோ - பாதுகாப்பு அம்சங்கள்
பயணிகளின் பாதுகாப்பிற்காக முன்புறத்தில் இரண்டு ஏர்பேக்குகள், முன்புறத்தி வெண்டிலேடட் டிஸ்க் ப்ரேக்குகள், பின்புறத்தில் ட்ரம்ப் ப்ரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஆண்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்கிங் சென்சார்கள், ஸ்பீட் அலெர்ட் சிஸ்டம் மற்றும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























