Honda ELEVATE: தமிழ்நாட்டில் அறிமுகமானது ஹோண்டா ELEVATE..! இத்தனை சிறப்பம்சங்களா..?
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா தனது புதிய மாடலான ஹோண்டா ELEVATEஐ தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹோண்டா உள்ளது. கார் மற்றும் பைக் தயாரிப்பில் கொடிகட்டி பறக்கும் ஹோண்டா நிறுவனம் புதிய, புதிய மாடல்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.
ஹோண்டா ELEVATE
இந்த நிலையில், ஹோண்டா கார்ஸ் இந்தியா தமிழ்நாட்டில் ஹோண்டா ELEVATEஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் ஏராளமான சிறப்பம்சங்களை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது, எஸ்.யூ.வி. சிறப்புத்தன்மையின் ஒரு புதிய அத்தியாயமான இதன் ஆரம்ப விலை ரூபாய் 10,99,900 அறிமுக விலையில் தொடங்குகிறது
ஹோண்டா டீலர்ஷிப்கள் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கான டெலிவரியை கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகின்றன. ஏராளமான சிறப்பம்சங்களை கொண்ட ஹோண்டா Elevate இந்தியாவில்தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
இந்த புதிய ஹோண்டா எலிவேட்டில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு CVT டிரான்ஸ்மிஷன்கள் இணைக்கப்பட்ட 1.5லி i -VTEC பெட்ரோல் எஞ்சின் உள்ளது. விசாலமான உட்புறங்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு அம்ச தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் ADAS தொழில்நுட்பம் உட்பட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களின் முழு வரிசை இடம்பெற்றுள்ளன. 4 கிரேடுகளில் சிங்கிள்-டோனில் 7 வண்ணங்கள் மற்றும் டூயல்-டோனில் 3 வண்ணங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுஆ,
சொகுசு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அனைத்து அத்தியாவசிய பண்புகளையும் Elevate அடக்கியுள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டகுயா சுமுரா, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடுத்தர அளவிலான SUVயான ஹோண்டா Elevateடை அறிமுகப்படுத்துவது ஒரு அற்புதமான அத்தியாயத்தைக் குறிக்கிறது. இந்தியாவில் ஹோண்டா கார்களுக்கு தமிழ்நாடு ஒரு முக்கிய சந்தையாகும். என்று கூறினார்.
எரிபொருள் திறன் முறையே 15.31 kmpl* மற்றும் 16.92 kmpl* ஆகும். ஹோண்டா Elevate E20 மெட்டீரியல் இணக்கமானது (20% வரை எத்தனால் கலந்த பெட்ரோல்). LED DRLகள் மற்றும் LED டர்ன் இன்டிகேட்டர் கொண்ட முழு LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED டெயில்லேம்ப்கள் மற்றும் டூ-டோன் ஃபினிஷ் டைமண்ட் கட் R17 அலாய் வீல்களுடன் சேர்ந்து, Elevate மாடலுக்கு தனித்துவமாக உள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்:
பாதுகாப்பிற்கான ஹோண்டாவின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, Elevate ஆனது ஹோண்டா சென்சிங்கின் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) உட்பட, நேரடி மற்றும் மறைமுக பாதுகாப்புத் தொழில்நுட்பங்களின் விரிவான வரம்பைக் கொண்டுள்ளது.
இந்த புதிய Elevateடில் ACE™ பாடி அமைப்பு, 6 காற்றுப்பைகள், LaneWatch™ கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோலுடன் வாகன நிலைப்புத்தன்மை அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், மல்டி ஆங்கிள் ரியர்-வியூ கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள் , ISOFIX இணக்கமான பின் பக்க இருக்கைகள் மற்றும் கீழ்மட்ட ஆங்கரேஜ்கள் மற்றும் டாப் டீத்தர் அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
ஹோண்டா Elevate வாடிக்கையாளர்களுக்கு நிலையான நன்மையாக 3 வருட வரம்பற்ற கிலோமீட்டர் உத்தரவாதத்துடன் வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும், எப்போது வேண்டுமானாலும் 10 ஆண்டுகள் வரை உத்தரவாதத்தையும் ஹோண்டா எலிவேட் வழங்குகிறது.