Hyundai Exter: பட்ஜெட் விலையில் அசத்தும் Hyundai Exter.. விலை, மைலேஜ் என்ன?
ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai Exter காரின் விலை, தரம், மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். ஹுண்டாய் நிறுவனம் பட்ஜெட் விலையிலும், சொகுசு விலையிலும் பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான கார்களின் படைப்புகளில் ஒன்று Hyundai Exter ஆகும்.
விலை என்ன?
Hyundai Exter காரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம். Hyundai Exter கார் ஒரு எஸ்யூவி ரக கார் ஆகும். உயரம், உட்கட்டமைப்பு, வடிவம் என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவரும் திறன் கொண்டது இந்த கார் ஆகும். இந்த காரில் 1.2 லிட்டர் ஆட்டோமெட்டிக் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.84 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 11.45 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 38 வேரியண்ட்கள் உள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் ஆற்றல் கொண்டது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
மைலேஜ் எப்படி?
19.4 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. பெட்ரோலில் ஓடும் Hyundai Exter 82 பிஎச்பி திறன் கொண்டது. சிஎன்ஜியில் ஓடும் Hyundai Exter கார் 68 பிஎச்பி திறன் கொண்டது. இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 6 ஏர்பேக்குகள் உள்ளது.
113.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் கொண்டது. 5 கியர்களை கொண்டது. 185 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் அளிக்கப்பட்டுள்ளது. 100 கி.மீட்டர் வேகத்தை 15.26 நொடிகளில் எட்டும் திறன் கொண்டது. எலக்ட்ரிக் சன்ரூஃப் மேற்கூரை உள்ளது. கிளைமேட் கன்ட்ரோல் வசதி உள்ளது. வயர்லஸ் சார்ஜர், எட்டு இன்ச் தகவல் திரை இதில் உள்ளது.
சிறப்பம்சங்கள்:
டைப் சி சார்ஜர் வசதி இதில் உள்ளது. 391 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி வசதி இதில் உள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது. எமர்ஜென்சி ப்ரேக்கிங் ஸ்டாப் வசதி இதில் உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டபிளிட்டி கன்ட்ரோல் வசதி இதில் உள்ளது. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் வசதி இதில் உள்ளது. 15 இன்ச் டைமண்ட் அலாய் சக்கரம் உள்ளது. இந்த கார் டாடா பஞ்ச், ஹுண்டாய் கிராண்ட் ஐ10நியாஸ், மாருதி பலேனோ, நிசான் மெக்னைட் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
வாடிக்கையாளரை கவரும் விதத்தில் அமைந்துள்ள இந்த கார் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ஹுண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கு சலுகைகள் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், டிசம்பர் மாதம் எக்ஸ்டர் காருக்கான சலுகை விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















